SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Nvidia-வை உருவாக்கியவருக்கே No? ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் CEO ஆக நியமிக்க முடியாது

Nvidia Jensen Huang News: என்விடியா நிறுவனத்தின் நிர்வாக சபை, முன்னாள் CEO ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க மறுத்துள்ளார். Megaspeed நிறுவனம் மற்றும் சீனாவுடன் தொடர்புடைய தேசிய பாதுகாப்பு சந்தேகங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே நேரத்தில், என்விடியா தொடர்ந்து வருவாய் சாதனை படைத்து AI சிப் சந்தையில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தி வருகிறது.

Written By Shiva Murugesan
Published: Nov 18, 2026, 13:21 IST | Updated: Nov 18, 2026, 13:24 IST
Image Credit: File (Reuters) | Founder Rejected? Nvidia Board Shuts Door on Jensen Huang's Return
Join

Nvidia Jensen Huang News: AI சிப் துறையின் முன்னணி நிறுவனமான Nvidia-வில் மேலும் ஒரு அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. நிறுவன இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங் மீண்டும் CEO ஆக திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தாலும், அவரை மீண்டும் அந்தப் பதவியில் நியமிக்கும் திட்டமும் இல்லை என நிர்வாக சபை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தேசிய பாதுகாப்பு மற்றும் சிப் ஏற்றுமதி விதிமுறை மீறல் தொடர்பான விசாரணைக்காக அவரை அமெரிக்க நாடாளுமன்றக் குழுக்கள் நேர்காணலுக்கு அழைத்துள்ளன.

என்விடியா-வில் தலைமைப் பதவியைச் சுற்றி பெரும் பரபரப்பு

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) சிப் நிறுவனமான Nvidia-வில் எதிர்பாராத தலைமை மாற்றம் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங் மீண்டும் CEO பதவிக்கு திரும்பத் தயாராக இருப்பதாக கூறியிருந்தாலும், அவரை மீண்டும் அந்தப் பொறுப்பில் அமர்த்த எந்தத் திட்டமும் இல்லை என்று Nvidia நிர்வாக சபை தெளிவுபடுத்தியுள்ளது. இதன் பின்னணியில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் சீனாவுக்கு மேம்பட்ட சிப் ஏற்றுமதி தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன.

CEO பதவிக்கு ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் ஏற்க முடியாது

என்விடியா நிறுவனத்தின் காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டபோது, ​​நிர்வாக சபைத் தலைவர் ஹார்வி ஜோன்ஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். ஜென்சன் ஹுவாங்கின் ராஜினாமாவை நிர்வாக சபை ஒருமனதாக ஏற்றுக்கொண்டதாகவும், அவரை மீண்டும் CEO ஆக நியமிக்கும் எண்ணம் தற்போது இல்லை என்றும் கூறினார்.

இதனுடன் நிரந்தர தலைமை நிர்வாக அதிகாரியை தேர்வு செய்ய ஹெய்ட்ரிக் மற்றும் ஸ்ட்ரக்ள்ஸ் என்ற உலகப் புகழ்பெற்ற நிர்வாகத் தேர்வு நிறுவனத்தின் உதவியை என்விடியா நாடியுள்ளது.

மேலும் படிக்க - மீண்டும் ஜென்சன் ஹுவாங்? வரவேற்கும் டிரம்ப், மஸ்க்... 'வேண்டவே வேண்டாம்' கும்பிடு போடும் என்விடியா!!

விசாரணை வளையத்துக்குள் ஜென்சன் ஹுவாங்

ஜென்சன் ஹுவாங் நவம்பர் 12 அன்று CEO, தலைவர் மற்றும் இயக்குநர் பதவிகளில் இருந்து விலகினார். அதன் பின்னர், நிறுவனத்தின் நிதித் தலைவரான கோலெட் கிரெஸ் இடைக்கால CEO ஆக பொறுப்பேற்றுள்ளார்.

இந்த ராஜினாமாவுக்குப் பின்னால், சிங்கப்பூரைச் சேர்ந்த Megaspeed என்ற கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி ஆலிஸ் ஹுவாங் தொடர்பான சர்ச்சை முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிகாரிகள், அவருக்கு சீன உளவுத்துறை தொடர்பு உள்ளது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், இந்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது.

அமெரிக்க காங்கிரஸில் நேரில் ஆஜராகும் ஜென்சன் ஹுவாங்

அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூன்று முக்கிய குழுக்கள் ஜென்சன் ஹுவாங்கிடம் விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது. இதன்படி டிசம்பர் 1 ஆம் தேதி அவர் அதிகாரப்பூர்வ நேர்காணலுக்கு ஆஜராக உள்ளார்.

மேலும் Nvidia-வின் தலைமை சட்ட ஆலோசகர் டிம் டீட்டர் டிசம்பர் 2 அன்று நேரில் விளக்கம் அளிக்கவுள்ளார்.

சீன நிறுவனங்கள் அமெரிக்காவின் உயர்தர AI சிப்களை எவ்வாறு அணுகின, தேசிய பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதா என்பதே இந்த விசாரணையின் முக்கிய அம்சமாக இருக்கும்.

மெகாஸ்பீட் மீது தொடங்கிய விசாரணை

நீதித்துறை மற்றும் வர்த்தகத் துறை வெளியிட்ட தகவலின்படி, Megaspeed தொடர்பான விசாரணை 2024-லேயே தொடங்கியது. 2025 மே மாதத்தில் Nvidia-விடம் Megaspeed நிறுவனத்துக்கான சிப் விற்பனை பதிவுகள் கோரப்பட்டன.

அடுத்த மாதமே Megaspeed நிறுவனத்தை Nvidia தனது "No Sell" பட்டியலில் சேர்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே ஆண்டில் அமெரிக்க மற்றும் சிங்கப்பூர் அதிகாரிகள் இணைந்து Megaspeed அலுவலகத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.

ஜென்சன் ஹுவாங் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதா?

இதுவரை ஜென்சன் ஹுவாங் அல்லது என்விடியா மீது எந்த குற்றச்சாட்டும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய பாதுகாப்பு மேற்பார்வைக்காக புதிய குழு

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தேசிய பாதுகாப்பு கொள்கைகள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் உலக வர்த்தக அபாயங்களை கண்காணிக்க Nvidia புதிய நிரந்தர குழுவை அமைத்துள்ளது.

இந்த குழுவுக்கு இயக்குநர் சுசான் நோரா ஜான்சன் தலைமை வகிக்கிறார். மேலும் வெளிப்புற சுயாதீன நிபுணர்களும் இந்த குழுவின் பணிகளை கண்காணிப்பார்கள் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்ச்சைகளுக்கு மத்தியிலும் சாதனை

தலைமைப் பதவி சர்ச்சை எழுந்துள்ள நிலையிலும் Nvidia-வின் வருவாய் தொடர்ந்து புதிய உயரங்களைத் தொட்டு வருகிறது.

நிறுவனம் தனது மூன்றாம் காலாண்டில் 115.8 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 103 சதவீதம் அதிகம். இதில் மட்டும் தரவு மைய (Data Centre) வணிகம் 107.6 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது.

நான்காம் காலாண்டில் 130 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும் என என்விடியா கணித்துள்ளது. சீனாவில் இருந்து எந்த தரவு மையம் வருவாயும் கிடைக்காது என்ற கனிப்பின் அடிப்படையிலேயே இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Nvidia-வின் அடுத்த திட்டம் என்ன?

AI சிப் சந்தையில் உலக ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கும் Nvidia, தற்போது தலைமை மாற்றம் மற்றும் தேசிய பாதுகாப்பு விசாரணை ஆகிய இரட்டை சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

ஜென்சன் ஹுவாங் மீண்டும் நிறுவனத்துக்கு திரும்பும் வாய்ப்பு தற்காலிகமாக முடங்கியுள்ள நிலையில், புதிய CEO யார் என்பதே முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உலகின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

மேலும் படிக்க - AI உலகின் அரசனுக்கு என்ன ஆனது? ஜென்சன் ஹுவாங் இல்லாமல் Nvidia இயங்குமா? The Real Story

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.
Read More

ZEENEWS TRENDING STORIES