SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மீண்டும் ஜென்சன் ஹுவாங்? வரவேற்கும் டிரம்ப், மஸ்க்... 'வேண்டவே வேண்டாம்' கும்பிடு போடும் என்விடியா!!

Nvidia Jensen Huang Controversy: ஜென்சன் ஹுவாங்கின் விசாரணையை வழிநடத்த, என்விடியா கடந்த வாரம் வாட்செல் லிப்டன் என்ற சட்ட நிறுவனத்தை நியமித்தது. ஹுவாங்கின் நடவடிக்கைகள் தேசியப் பாதுகாப்பையோ அல்லது நிறுவனத்தின் இரகசியங்களையோ பாதித்ததா என்பதை அந்த நிறுவனம் விசாரிக்கும்.

Written By Sripriya Sambathkumar
Published: Nov 17, 2026, 13:37 IST | Updated: Nov 17, 2026, 13:47 IST
Image Credit: Nvidia Jensen Huang Eyes Return
Join

Nvidia Jensen Huang Controversy: என்விடியா முன்னாள் CEO ஜென்சன் ஹுவாங் பற்றி கிளம்பிய சர்ச்சைகள் உலக அளவில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. திருமணம் தாண்டிய உறவு, தேசிய பாதுகாப்பு என பல சர்ச்சைகளில் சிக்கிய ஜென்சன் ஹுவாங் சில நாட்களுக்கு முன்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதற்கிடையில், அமெரிக்காவின் சிலிக்கான் வேலி அவருக்குப் பின்னால் ஒரு அரணாக நிற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் வரை அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். பல முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், முன்னாள் என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்கிற்கு டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கைத் தொடர்ந்து, ஓபன்ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மேன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சர்ச்சையில் சிக்கியுள்ள என்விடியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, "ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியமர்த்துவது குறித்து பரிசீலிக்கவில்லை" என தெரிவித்துள்ளதாக சிஎன்பிசி செய்தி வெளியிட்டுள்ளது. ஹுவாங்கின் நடத்தை குறித்த விசாரணையில் இயக்குநர்கள் குழு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட நிறுவனத்தை நியமித்த என்விடியா

ஜென்சன் ஹுவாங்கின் விசாரணையை வழிநடத்த, என்விடியா கடந்த வாரம் வாட்செல் லிப்டன் என்ற சட்ட நிறுவனத்தை நியமித்தது. ஹுவாங்கின் நடவடிக்கைகள் தேசியப் பாதுகாப்பையோ அல்லது நிறுவனத்தின் இரகசியங்களையோ பாதித்ததா என்பதை அந்த நிறுவனம் விசாரிக்கும்.

33 ஆண்டுகள் CEO ஆக பணியாற்றிய ஹுவாங்

கிறிஸ் மலாச்சோவ்ஸ்கி மற்றும் கர்டிஸ் ப்ரீம் ஆகியோருடன் இணைந்து என்விடியாவை நிறுவிய ஹுவாங், 33 ஆண்டுகள் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றிய பிறகு கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். திருமணத்தை தாண்டிய அவரது உறவுகள் குறித்த செய்திகள் வெளிப்பட்டதைத் தொடர்ந்து இந்த ராஜினாமா நிகழ்ந்துள்ளது. ஹுவாங்கிற்கு இப்படிப்பட்ட மூன்று உறவுகள் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது:

ஏனினும், என்விடியாவின் வாடிக்கையாளராக இருந்த மெகாஸ்பீட் நிறுவனத்தின் உயர் நிர்வாகியாக இருந்த சீனப் பெண் ஆலிஸ் ஹுவாங்குடனான உறவை மட்டுமே அவர் இதுவரை ஒப்புக்கொண்டுள்ளார்.

ஹுவாங் தனது கூட்டாளிகளுடன் மீண்டும் CEO ஆக நிறுவனத்திற்கு வருவது குறித்து விவாதித்ததாக பல ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. இந்த ஊகங்கள் குறித்து கருத்து தெரிவிக்க ஹுவாங்கின் பிரதிநிதி மறுத்துவிட்டார்.

தொழில்நுட்பத் துறையின் பல முக்கிய பிரமுகர்கள் ஹுவாங்கை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். அவர் மீண்டும் திரும்புவதை ஆதரிக்கும் ஒரு ஆன்லைன் மனு 180,000 கையொப்பங்களைப் பெற்றுள்ளதுடன், எலான் மஸ்க், ஒய் காம்பினேட்டர் தலைமை நிர்வாக அதிகாரி கேரி டான் மற்றும் எபிக் கேம்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டிம் ஸ்வீனி ஆகியோரின் ஆதரவையும் பெற்றுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், ஹுவாங் என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாகத் திரும்புவதை வரவேற்பதாகக் கூறினார். "அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை... நான் டிம் குக்கின் பெயரைக் குறிப்பிட்டேன். ஆனால் ஜென்சன் ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக்கொண்டார் என்று நான் நினைக்கிறேன். இந்த பாடம் மற்ற அனைத்தையும் விட முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர் மீண்டும் வருவதில் எனக்கு நிச்சயமாக எந்த ஆட்சேபனையும் இல்லை," என்று அவர் கூறினார்.

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு குறித்த கவலைகள் பற்றிக் கேட்டபோது, டிரம்ப், "அது ஆபத்தில் இல்லை, மேலும் நமது நாடு இப்போது முன்னெப்போதையும் விட வலிமையாக உள்ளது," என்று கூறினார்.

மேலும் படிக்க | AI உலகின் அரசனுக்கு என்ன ஆனது? ஜென்சன் ஹுவாங் இல்லாமல் Nvidia இயங்குமா? The Real Story

புதிய CEO-க்கான தேடலைத் தொடங்கிய என்விடியா

இதற்கிடையில் புதிய தலைமைச் செயல் அதிகாரியைக் (CEO) கண்டறிவதற்காக ஒரு தேடல் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் என்விடியா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக, அதன் நிர்வாகக் குழுவின் பிரதிநிதி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

என்விடியாவில் ஹுவாங் மகளின் செல்வாக்கு

ஜென்சன் ஹுவாங் ராஜினாமா செய்திருந்தாலும், அவரது மகள் மேடிசன் ஹுவாங் என்விடியாவில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டிருக்கிறார். கடந்த வாரம் அவரது தந்தை ஜென்சன் ஹுவாங் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பே, மேடிசன் என்விடியாவிற்குள் ஒரு சக்திவாய்ந்த நபராக உருவெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை விட உயர் பதவியில் இருப்பவர்களுடன் மேடிசன் தொடர்ந்து மோதலில் ஈடுபடுவதாகவும், அவர்களைக் கத்துவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

மேலும் படிக்க | மீண்டும் என்விடியாவின் CEO ஆகிறாரா ஜென்சன் ஹுவாங்? எலான் மஸ்க் ஆதரவுடன் தீவிர முயற்சி!!

நிறுவனத்திற்குள் பதற்றத்தை உருவாக்கிய ஹுவாங் மகள்

35 வயதான இவர், அதிகாரப்பூர்வமாக பிசிக்கல் செயற்கை நுண்ணறிவுக்கான தயாரிப்பு சந்தைப்படுத்தலின் மூத்த இயக்குநராக இருந்தாலும், நடைமுறையில் தனது தந்தையின் தலைமைப் பணியாளராகச் செயல்பட்டார் என்று பரவலாகக் கூறப்படுகின்றது. சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புகளில் செல்வாக்கு மிக்கவராகவும், மூத்த நிர்வாகிகள் மற்றும் இயக்குநர் குழுவை அணுகும் வசதி கொண்டவராகவும் அவர் இருந்ததாக கூறபடுகின்றது. அவரது நிர்வாக பாணி நிறுவனத்திற்குள் பதற்றத்தை உருவாக்கியதாகவும் சிலர் கூறுகிறார்கள்.

ஹுவாங் மகளின் செல்வாக்கால் சிக்கல்

அவரது செல்வாக்கு இப்போது என்விடியாவின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியான கோலெட் கிரெஸ்ஸுக்கு ஒரு கேள்வியாக உள்ளது. அவரது தந்தை வெளியேறிய பிறகு மேடிசன் ஹுவாங்கின் பங்கு என்னவாக இருக்கும் என்பதை அவர் தீர்மானிக்க வேண்டும். நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற இரண்டு உறவினர்களான ஜென்சன் ஹுவாங்கின் மகன் ஸ்பென்சர் மற்றும் மருமகன் நிக்கோ கேப்ரெஸ் ஆகியோர் குறித்தும் கிரெஸ் முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

என்விடியாவில் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து இருப்பது, சில மூத்த நிர்வாகிகளிடையே விசுவாசப் பிளவுகள் குறித்த கவலையைத் தூண்டியுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | மகளுக்கு தெரிந்தே பிற பெண்களுடன் காதல் வளர்த்த ஜென்சன் ஹுவாங்? வெளிவந்த உண்மை!
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

ZEENEWS TRENDING STORIES