SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

15 பச்சிளம் குழந்தைகள் பலி - பாகிஸ்தான் மருத்துவமனையில் தீ விபத்து

Pakistan Fire Accident : பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் இன்று (ஆக. 26) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 15 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Written By Sudharsan G
Published: Aug 26, 2026, 11:50 IST | Updated: Aug 26, 2026, 12:25 IST
Image Credit: Islamabad Hospital Fire Accident | ScreenGrab : X/@PTI_News
Join

Pakistan Fire Accident : பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் உள்ள மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் இன்று (ஆக. 26) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 15 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இஸ்லாமாபாத் நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய மற்றும் அதி-நவீன வசிதகளை கொண்ட அரசு மருத்துவமனைதான் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனம் (PIMS) ஆகும். இங்குதான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மகப்பேறு பிரிவில் இருந்த குழந்தைகள் காப்பகம் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாகவே, பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்க நேரிட்டது.

எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை

பாகிஸ்தானின் Geo News ஊடகம் 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளதாக Reuters செய்தி முகமை தெரிவித்துள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து தெரிவிக்கப்படவில்லை.

15 குழந்தைகள் பலியா...?

தீ விபத்து ஏற்பட்டபோது, அம்மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் 16 பச்சிளம் குழந்தைகள் இருந்துள்ளன என்றும்; அதில் ஒரு குழந்தை மட்டும் மீட்கப்பட்டுள்ளது என்ரும் Geo News செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், Dawn நாளிதழுக்கு பேட்டியளித்த PIMS மருத்துவமனையின் செய்தித்தொடர்பாளரான மருத்துவர் அனீஸா ஜலில், மகப்பேறு பிரிவில் தீ விபத்து ஏற்பட்டபோது 15 குழந்தைகளே இருந்ததாக தெரிவித்துள்ளார்.

செய்தித்தொடர்பாளர் கூறியது என்ன?

இதுகுறித்து அனீஸா மேலும் கூறுகையில், "மருத்துவமனையில் இருந்து சில குழந்தைகளின் பெற்றோர் இரவு நேரத்தில் வீடு திரும்பியிருக்கலாம் என்பதால் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கையை இப்போது பகிர முடியாது" என தெரிவித்தார்.

எப்போது நடந்தது இந்த விபத்து...?

அதே நேரத்தில் சம்பவத்திற்கான காரணம் குறித்தும் அவர் வாய் திறந்துள்ளார். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகத் தோன்றுவதாகவும், காலை 7 மணியளவில் தீ விபத்து நிகழ்ந்ததாகவும் அவர் கூறினார். கட்டடத்தில் பரவிய தீ முற்றிலும் அணைக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதி குளிர்வடைவதற்கு இன்னும் சில நேரம் ஆகும் என்றும் அனீஸா கூறினார்.

பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு

இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், இந்த தீ விபத்திற்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்தார்.

மருத்துவமனைகளில் இதுபோன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில், தீ பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் இந்த சம்பவத்திற்கு வழி வகுத்த காரணிகள் குறித்து விரிவான ஆய்வு நடத்துமாறும் அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார். இதற்கிடையில் தீ விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதை கண்டுபிடித்து விசாரணை மேற்கொள்ள கூடுதல் துணை ஆணையர் ஜெனரில் தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES