• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

TVK Education Awards CM Vijay Speech: தமிழக கல்வித்துறை மற்றும் அரசு நூலகப் புத்தகக் கொள்முதலில் நடந்துள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து தவெக தலைவர் விஜய் மாணவர்கள் மத்தியில் கடுமையாக விமர்சித்துள்ளார். கும்பகோணம் பள்ளித் தீ விபத்து மற்றும் கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட நூலகங்களின் விவகாரங்களைச் சுட்டிக்காட்டி, "இது அறிவு உலகமா இல்லை ஊழல் உலகமா?" என அவர் எழுப்பிய 10 முக்கியக் கேள்விகளின் முழுத் தொகுப்பு.

Written ByShiva Murugesan
Published: Nov 26, 2026, 17:01 IST|Updated: Nov 26, 2026, 17:08 IST
joinshare
TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்
Image Credit: TVK | TVK Education Awards Function: Top 10 Takeaways from CM Vijay’s Speech

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

2

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

3

ஆமணக்கு விதையை சாப்பிட்டு... மருத்துவமனையில் 12 பள்ளி மாணவர்கள் - தேனியில் ஷாக்

4

பட்டா பிரச்னை... சுத்துப்போட்ட மக்கள்... பின்வழியாக எஸ்கேப் ஆன தவெக எம்எல்ஏ

5

வாவ் என்ன ஒரு கம்பேக்! 3 தோல்விகளுக்குப் பிறகு சம்பவம் செய்த புதுச்சேரி!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

CM Vijay Speech Tamil: தவெக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் "சிறப்பு மதிப்பெண்" எடுக்கும் மாணவ - மாணவிகளுக்கு தொகுதி வாரியாக கல்வி விருது, உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான முதல்கட்ட கல்வி விருது நிகழ்ச்சி கடந்த 4-ம் தேதி சென்னையில் நடந்தது.

தவெக கல்வி விருது விழா

கல்வி விருது நிகழ்ச்சியின் 2-ம் கட்டம் இன்றும் நாளையும் சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது. அதில் இன்று (நவம்பர் 26) முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் "கல்வி விருது மற்றும் உதவித்தொகை வழங்கி சிறப்பித்தார்.

அப்பொழுது பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், "தமிழக அரசியலில் கல்வித்துறை சார்ந்த முறைகேடுகள் மற்றும் நூலகப் புத்தகக் கொள்முதலில் நடந்துள்ளதாகக் கூறப்படும் ஊழல் புகார்கள் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகத் தீவிரமான கருத்துக்களை" முன்வைத்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் உரை

"என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பீஸ்" என்ற தனது வழக்கமான பாணியில் உரையைத் தொடங்கிய அவர், ஊழலை ஒரு தீராத நோயுடன் ஒப்பிட்டுப் பேசியதோடு, கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட நூலகங்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி ஆளுங்கட்சிக்குக் கடும் சவால் விடுத்துள்ளார். மாணவர்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்புடன் விளையாடுவதை ஒருபோதும் வேடிக்கை பார்க்க முடியாது என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க - பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு - தமிழ்நாடு அரசு கடும் எச்சரிக்கை

தவெக கல்வி விருது நிகழ்ச்சியில் விஜய் பேசிய 10 முக்கிய அம்சங்கள்

1. அரசியலாக்க விரும்பவில்லை, ஆனால் சொல்லியே ஆக வேண்டும்

இந்த விவகாரத்தைச் சிலர் அரசியலாக்க முயற்சி செய்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலனுக்காக உண்மையைச் சொல்லியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.

2. ஊழல் என்பது ஒரு 'கிரானிக் டிசீஸ்' (Chronic Disease)

ஊழல் என்பது பழகிப்போன விஷயம் எனக் கடந்து போய்விட முடியாது என்றும், அது ஒரு நாள்பட்ட வியாதி (Chronic Disease) போன்றது என்பதால், அதை முழுமையாகக் குணப்படுத்தாவிட்டாலும் கட்டுப்படுத்தவாவது உரிய நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

3. ஆடிப்போன சிலரின் அடித்தளம்

ஊழலுக்கு எதிராகத் தான் எடுத்த சில ஆரம்பகட்ட நடவடிக்கைகளாலேயே, தற்போது இங்கிருக்கும் சிலரின் அடித்தளம் (Basement) ஆடிப்போய்க் கிடப்பதாக அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

4. கல்வித்துறையில் நடக்கும் ஊழலைச் சகிக்க முடியாது

மற்ற துறைகளில் தவறு நடந்தால் சட்டப்படி நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும், ஆனால் எதிர்காலத் தலைமுறையின் அடித்தளமான கல்வித்துறையிலேயே ஊழல் நடப்பதை எப்படிப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

5. கும்பகோணம் தீ விபத்தும், பள்ளிப் பாதுகாப்பும்

பள்ளிப் பாதுகாப்பில் (School Safety) அலட்சியம் காட்டியதால் ஏற்பட்ட கும்பகோணம் பள்ளித் தீ விபத்து நினைத்தாலே பதற வைக்கிறது என்றும், அதேபோன்ற அலட்சியமும் ஊழலும் தற்போதும் தொடர்வது வேதனையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

6. 'மூன்று ஃபைல்கள்' குறித்து எதிர்க்கட்சிக்குப் பதிலடி

தனது மேஜையில் மூன்று ஃபைல்கள் இருப்பதாகத் தான் கூறியபோது, எதிர்க்கட்சியினர் அதைத் திறந்து காட்டுமாறு சவால் விட்டதைக் குறிப்பிட்ட விஜய், "அவர்களே ஆசைப்பட்டுக் கேட்கும்போது திறந்துதான் பாருங்களேன்" என நகைச்சுவையாகவும் காட்டமாகவும் பதிலளித்துள்ளார்.

7. ஏஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நூலகப் புத்தகங்களில் ஊழலா?

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வளர்ச்சிக்காகப் பயன்படும் என எதிர்பார்த்த நிலையில், அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் படிக்கும் நூலகப் புத்தகங்களிலேயே ஆரம்பகாலத்தில் இப்படி ஒரு ஊழலைச் செய்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைவதாக அவர் கூறியுள்ளார்.

8. கோவை பெரியார் அறிவுலகம் முதல் மற்ற நூலகங்கள் வரை

கோவை பெரியார் அறிவுலகம், திருச்சி காமராஜர் அறிவுலகம், சேலம் பாரதிதாசன் அறிவுலகம், திருநெல்வேலி காயிதே மில்லத் அறிவுலகம் மற்றும் கடலூர் அஞ்சலை அம்மாள் அறிவுலகம் ஆகிய மாணவர்களுக்கான நூலகங்களில், கோவை நூலக முறைகேடு தற்போது வெளியாகியுள்ளது என்றும், மற்ற நூலகங்களின் முறைகேடுகளும் ஒவ்வொன்றாக வெளிவரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

9. அறிவு உலகமா அல்லது ஊழல் உலகமா?

மாணவர்களின் அறிவை வளர்க்க உருவாக்கப்பட்ட இந்த மையங்கள் உண்மையிலேயே 'அறிவு உலகமா' அல்லது 'ஊழல் உலகமா' என்று தனக்குச் சந்தேகம் எழுவதாக விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.

10. எதிர்காலத் தலைமுறைக்கான அரசியல் பயணம்

ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவே தான் அரசியலுக்கு வந்திருப்பதாகவும், மாணவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் எந்தச் செயலையும் அனுமதிக்காமல், ஒரு அண்ணனாக அவர்களை எப்போதும் நல்ல வழியில் மட்டுமே நடத்திச் செல்வேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும் படிக்க - கைதாகிறாரா அருள் விக்னேஷ்? வீட்டில் தடுப்புகள் அமைப்பு.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

Add Zee News as a Preferred Source
TAGS:
Vijay Thalapathy