• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /உலகை உலுக்கும் போராட்டங்கள்.. Gen Z இளைஞர்களின் கோபத்திற்கு என்ன காரணம்? Explained

உலகை உலுக்கும் போராட்டங்கள்.. Gen Z இளைஞர்களின் கோபத்திற்கு என்ன காரணம்? Explained

Gen Z Protest Explained: உலகின் பல்வேறு நாடுகளில் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரான்ஸ், பெல்ஜியம், போர்ச்சுகல், இத்தாலி, அல்பேனியா, அர்ஜென்டினா, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இளைஞர்கள் போராடி வருகின்றனர். இதனால், பல நாடுகளில் வன்முறை வெடித்துள்ளது. இந்த போராட்டத்தின் பின்னணி என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Oct 18, 2026, 04:53 PM IST|Updated: Oct 18, 2026, 05:06 PM IST
joinshare
உலகை உலுக்கும் போராட்டங்கள்.. Gen Z இளைஞர்களின் கோபத்திற்கு என்ன காரணம்? Explained
Image Credit: Image Source: Chatgpt

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained : பற்றி எரியும் ஃப்ரான்ஸ்! வலுக்கும் மாணவர்களின் போராட்டம்..வன்முறை உச்சக்கட்டம்

Explained : பற்றி எரியும் ஃப்ரான்ஸ்! வலுக்கும் மாணவர்களின் போராட்டம்..வன்முறை உச்சக்கட்டம்

2

Chennai Rain: அக்டோபர் 21, 22ல் என்ன நடக்கும்? வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன முக்கிய தகவல்!

3

உலகை உலுக்கும் போராட்டங்கள்.. Gen Z இளைஞர்களின் கோபத்திற்கு என்ன காரணம்? Explained

4

அலறிய செல்போன்.. சென்னைக்கு ரெட் அலர்ட்! இந்த 5 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை

5

ஷமி இல்லை.. இந்திய அணிக்கு திரும்பும் மூத்த வீரர்? கவாஸ்கர் சொன்ன முக்கிய மேட்டர்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Gen Z Protest Explained: போராட்டங்கள் உலக சரித்திரத்தை மாற்றி அமைத்து இருக்கின்றன. இப்போது நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு உரிமைக்கும், அதற்கு பின்னணியில் ஒரு போராட்டம் உண்டு. சுதந்திரம், வாக்குரிமை, 8 மணி நேர வேலை என இன்று நாம் நமக்கு கிடைத்த உரிமைகள் அனைத்தும் முதுகெலும்பாக போராட்டங்கள் பின்னணியில் இருந்திருக்கின்றன.

Gen Z இளைஞர்கள் போராட்டம்

அந்த வகையில், உலகின் பல்வேறு நாடுகளில் Gen Z எனப்படும் இளைய தலைமுறையினர் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.  இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இன்று இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  சமீப நாட்களாக பல நாடுகளில் பெரும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்தியா முதல் பிரான்ஸ் வரை பல நாட்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது.

வாழ்க்கை முறை செலவு, பணவீக்கம், நிதி ஓதுக்கீடு, ஆளும் கட்சி மீதான அதிருப்தி, எதிர்ப்பு போன்ற காரணங்களுக்காக பல்வேறு நாடுகளில இளைஞர்கள் போராடி வருகின்றனர். அதன்படி, பிரான்ஸ், பெல்ஜியம், போர்ச்சுகல், இத்தாலி, அல்பேனியா, அர்ஜென்டினா, இந்தியா, துருக்கி ஆகிய நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ளது. ஏன் பல்வேறு நாடுகள் இளைஞர்கள்  போராடுகின்றனர்? அதற்கு காரணம் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

பிரான்ஸ் நாட்டில் இளைஞர்கள் போராட்டம்

பிரான்ஸ் நாடட்டின் அதிபராக இம்மானுவேல் மெக்ரான் இருக்கிறார். அந்நாட்டின் பிரதமராக செபஸ்டின் லிகார்னோ செயல்பட்டு வருகிறது. இம்மானுவேல் மெக்ரான் தலைமையிலான அரசு நடுநிலைவாத நிலைபாட்டை கொண்டுள்ளது. பிரான்சில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிபர் தேர்தல்  நடைபெற உள்ளது.   இதற்கிடையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களாக அங்கு மாணவர்கள் போராட்டம் நடந்து வருகிறது. பிரான்ஸ் நாட்டில் மாணவர்கள் சாலைகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பிரான்ஸ் முழுவதும் சுமார் 5,50,000 மாணவர்கள் வீதிகளில் இறங்கியதாக, அவர்களில்  பாரிஸ் நகரில் 1.10 லட்சம் மாணவர்கள்  பேராடியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. பிரான்ஸில் ஒரு மாதமாக நடந்து வரும் போராட்டம், தற்போது வன்முறையாக மாறி இருக்கிறது. மாணவர் அமைப்பினர், இடதுசாரி ஆதரவு அமைப்புகள், புலம்பெயர்ந்தோர் என பலரும் பேராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.  இந்த போராட்டத்தில் நேற்று வன்முறை வெடித்தது.

 

BREAKING: Paris right now, chaos caused by protesters. https://t.co/NyO00UJPQf

— Globe Eye News (@GlobeEyeNews) October 17, 2026

 

போராட்டக்காரர்கள் கடைகளை சூரையாடி,  கட்டிடங்கள் தீ வைத்தனர். பிளேஸ் டி லா ரிபப்ளிக் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு அருகே வாகனங்களுக்குத் தீ வைத்தனர். இதனால், போலீசாருக்கும், பேராட்டக்காரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. பிரான்ஸில் நடக்கும் இந்த வன்முறை, பல்வேறு நகரங்களுக்கும் பரவியது.  மேலும், அந்நாட்டின் அடையாளமாக திகழ்ந்த 140 ஆண்டுகள் பழமையான கட்டிடத்திற்கு தீ வைத்து கொத்தட்டது.

வன்முறை ஈடுபட்டதாக 1200 பேர் கைதாகி உள்ளனர்.  பள்ளிக் கட்டடங்கள் பழுதடைந்து காணப்படுவதுடன், கூரைகள் இடிந்து விழுதல், தண்ணீர் கசிவு மற்றும் எலிகள் தொல்லை போன்ற அடிப்படைப் பராமரிப்புப் பிரச்சினைகள்,  பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை,  கோடையில் ஏசி வசதி இல்லாமல் இருப்பது, குளிர் காலத்தில் வெப்பமூட்டும் சாதனங்கள் வகுப்பறையில் இல்லாததை கண்டித்து மாணவர்கள், ஆசிரியர்கள் பேராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

பெல்ஜியம் நாட்டில் போராட்டம்

பெல்ஜியத்தின்  பிரதமராக பார்ட் டி வெவர் இருக்கிறார். ஐரோப்பா நாடுகளில் ஒன்றாக பெல்ஜியத்திலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். வாழ்க்கை முறை செலவுகள், உயர்கல்வி,  பல்கலைக்கழக பதிவு கட்டணம் உயர்வு,  செலவின குறைப்பு, ஓய்வூதியத்தில் சீர்திருத்தங்கள் உள்ளிட்டதை எதிர்த்து பெல்ஜியம் நாட்டில் மாணவர்கள், தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று, பிரஸ்ஸல்ஸ் மற்றும் லீஜ் நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. இதனால், காவல்துறை அவர்கள் தண்ணீர் பீச்சியும், புகைகுண்டுகளை வீசினர். இதனால், அந்நாட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

 

Oproep aan alle media: Kunnen we vanaf nu eindelijk eens ophouden met te spreken over scholieren- of studentenprotesten? Of het nu in Brussel, Luik, Parijs, Lyon, Bordeaux, Marseille, e.a. steden is. Dit is terreur. Bekijk goed de beelden. 🧵 (1) https://t.co/dhJ8BRfEka

— Luk De Wilde (@lukdewilde) October 17, 2026

 

போர்ச்சுகலில் போராட்டம்

ஐரோட்ட நாடுகளில் ஒன்றாக போர்ச்சுகலில் சோஷியல் டெமாக்ரடிக் கட்சி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அந்நாட்டின் பிரதமராக லூயிஸ் மாண்டினீக்ரோ இருக்கிறார். வலதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, ஆட்சி நடத்தி வருகிறார்.  போர்ச்சுகல் நாட்டிலும் போராட்டங்கள் வெடித்துள்ளது.  போர்ச்சுகலில், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, குறைந்த ஊதியம் மற்றும் மலிவு விலையில் வீடு கிடைப்பதில் உள்ள சிரமம் ஆகியவற்றைக் கண்டித்து லிஸ்பனில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர். 

லிஸ்பன் மற்றும் பல நகரங்களில், 2017-ஆம் ஆண்டிலிருந்து, மனையின் விலைகள்  இரண்டு மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளன.  மேலும், வீடு, கட்டிடம் போன்றவற்றுக்கான குத்தகை மற்றும் வாடகையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இது இளம் பணியாளர்கள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை கடுமையாக பாதித்துள்ளது. மேலும், வீடு வாங்க முடியாத நிலை மட்டுமல்லாமல், வாடகை வீடுகளில் வசிப்பது கட்டுப்படியாகாத நிலை அங்கு உருவாகி உள்ளது. இதனால், இளைஞர்கள், தொழிலாளர்கள் என பலரும் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர்.

இத்தாலி போராட்டம்

ஐரோப்பா நாடுகளில் ஒன்றாக இத்தாலியிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு எதிராகப் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விலைவாசி உயர்வால்   அன்றாட செலவுகளை சமாளிக்க முடியவில்லை என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். குறைந்த ஊதியம் வாங்குவோர் இதில் அதிகம்  பாதிக்கப்படுகின்றனர். மிலன் மற்றும் போலோக்னாவில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியது.  போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்தினர். வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக ஐரோப்பா முழுவதும் நடைபெற்ற போராட்ட அலைகளின் ஒரு பகுதியாக இந்த ஆர்ப்பாட்டங்கள் அமைந்தன.

 

BREAKING: Massive riots have now also broken out in Milan, Italy. An alliance of migrant gangs and Antifa extremists is attacking police officers and setting fires in front of the Milan Cathedral (Duomo) https://t.co/yh8sbPWmsS

— Visegrád 24 (@visegrad24) October 17, 2026

 

அல்பேனியா போராட்டம்

அல்பேனியாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் மோசமான நிலைமைகள், அதிக கல்விக் கட்டணங்கள், மற்றும் பட்டப்படிப்புக்குப் பிறகு நிதி உதவி மற்றும் வேலை வாய்ப்புகள் இல்லாதது போன்ற காரணங்களுக்காக அந்நாட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அக்டோபர் 13 அன்று டிரானாவில் உள்ள கல்வி அமைச்சகத்திற்கு வெளியே நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அவர்கள் கட்டிடத்தின் மீது செங்கற்களையும் வீசியதை தொடர்ந்து, காவல்துறையினர் அடக்குமுறையில் ஈடுபட்டனர். வேலைவாய்ப்பின்மை அங்கு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. படிப்பிற்கு குறைவான சம்பளத்தில் வேலை, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

துருக்கி போராட்டம்

துருக்கியில் விலைவாசி உயர்வு, பணவீக்கம், ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் போன்வற்றை கண்டித்து அரசுக்கு எதிராக தொழிலாளர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் வாழ்க்கை முறை செலவுகளை அதிகரித்ததை அடுத்து, அதனை சமாளிக்க முடியவில்லை என பேராட்டக்காரர்கள் கூறிகின்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது, ​​60 வயதான ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான அலி செகெரோக்லு, துருக்கியக் கொடியைப் போர்த்திக்கொண்டு, "பணத்திற்காக அல்ல, நமது கௌரவத்திற்காக" என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியபடி, தனது நிதிப் போராட்டங்கள் மற்றும் வேலையில்லாத இரண்டு மகன்களைப் பற்றிப் பேசிய பின்னர், தனது பணித் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அர்ஜென்டினா போராட்டம்

அர்ஜென்டினாவில், அதிபர் ஜாவியர் மிலேயின் உயர்கல்விச் செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பியூனஸ் அயர்ஸில் போராட்டக்காரர்கள் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் போராட்டங்கள் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசியதை அடுத்து, வன்முறை வெடித்து. 2023-ஆம் ஆண்டில் அதிபர்  மிலேய் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கல்வி நிதி நெருக்கடிக்கு எதிராக நடந்த ஐந்தாவது போராட்டம் இதுவாகும்.  பொதுப் பல்கலைக்கழகங்களில் அதிக நிதியை  ஒதுக்க கோரும் செய்யக் கோரும் 2025-ஆம் ஆண்டு சட்டத்திற்கு அரசு இணங்க வேண்டும் என்று பல நீதிமன்றத் தீர்ப்புகள் வந்ததைத் தொடர்ந்து இது நடைபெற்றுள்ளது.

இந்தியாவில் போராட்டம்

தலைநகர் டெல்லியில் காக்ரோஜ் ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். எஸ்ஆர் நடவடிக்கையில் சில முடிவுகளை தலைமை தேர்தல் ஆணையர் தனிச்சையாக முடிவு எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சிஜேபி கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என கூறுகின்றனர். ஆனால், சிறப்பு தகவல் அறிக்கை (SIR) மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer