• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /ஷமி இல்லை.. இந்திய அணிக்கு திரும்பும் மூத்த வீரர்? கவாஸ்கர் சொன்ன முக்கிய மேட்டர்

ஷமி இல்லை.. இந்திய அணிக்கு திரும்பும் மூத்த வீரர்? கவாஸ்கர் சொன்ன முக்கிய மேட்டர்

க்ருணால் பாண்டியாவை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ள நிலையில், வீரர்களின் வயதைவிட திறமை மற்றும் உடற்தகுதிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Written ByR Balaji
Published: Oct 18, 2026, 04:03 PM IST|Updated: Oct 18, 2026, 04:06 PM IST
joinshare
ஷமி இல்லை.. இந்திய அணிக்கு திரும்பும் மூத்த வீரர்? கவாஸ்கர் சொன்ன முக்கிய மேட்டர்

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
அலறிய செல்போன்.. சென்னைக்கு ரெட் அலர்ட்! இந்த 5 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை

அலறிய செல்போன்.. சென்னைக்கு ரெட் அலர்ட்! இந்த 5 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை

2

ஷமி இல்லை.. இந்திய அணிக்கு திரும்பும் மூத்த வீரர்? கவாஸ்கர் சொன்ன முக்கிய மேட்டர்

3

இன்ஸ்டா பிரபலம் நகை திருட்டு வழக்கு! காண்டிராக்டருக்கு போலீஸ் மீண்டும் சம்மன்..அப்டேட் என்ன?

4

அனிருத்-காவ்யா திருமணத்தை அன்றே கணித்த பெண்! வைரலாகும் வீடியோ..

5

மக்களை சமூக அந்தஸ்தை வைத்து பிரித்து பார்த்த அமைச்சர்..டிடிவி தினகரன் கண்டனம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற விவாதம் கிரிக்கெட் வட்டாரத்தில் தொடர்ந்து எழுந்து வருகிறது. அந்த வகையில், ஆல்-ரவுண்டர் க்ருணால் பாண்டியாவை இந்திய அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தி உள்ளார். வயதை அடிப்படையாக கொண்டு வீரர்களை தேர்வு செய்வதற்கு பதிலாக, அவர்களுடைய திறமை மற்றும் உடற்தகுதிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் புவனேஷ்வர் குமார், உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வந்தார். இதற்கிடையே, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற்றது கவனத்தை ஈர்த்தது.

இடைக்கால தேர்வுக்குழு தலைவராக பொறுப்பேற்ற பிரக்யான் ஓஜா தலைமையிலான தேர்வில் புவனேஷ்வர் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக கூற்ப்படும் நிலையில், அனுபவம் வாய்ந்த மற்ற வீரர்களுக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

குறிப்பாக, முகமது ஷமி இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான அணிகளில் அவர் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள பிரசித் கிருஷ்ணா காயத்திலிருந்து மீளாவிட்டால், அவருக்கு பதிலாக ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

க்ருணால் பாண்டியாவுக்கு கவாஸ்கர் ஆதரவு

இந்தச் சூழலில், க்ருணால் பாண்டியாவின் திறமையை பாராட்டியுள்ள சுனில் கவாஸ்கர், அவரை இந்திய அணியில் சேர்ப்பது குறித்து தேர்வாளர்கள் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

க்ருணால் பாண்டியா புத்திசாலித்தனமாக செயல்படும் கிரிக்கெட் வீரர் என்றும், எதிரணி பேட்டர்களின் ஆட்டத்துக்கு ஏற்ப தனது பந்துவீச்சில் மாற்றங்களை செய்யும் திறன் கொண்டவர் என்றும் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

சுழற்பந்துவீச்சில் அதிக திருப்பத்தை ஏற்படுத்த முடியாவிட்டாலும் சரியான லைன் மற்றும் லெந்தில் பந்துவீசி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்க அவரால் முடியும் என்பது கவாஸ்கரின் கருத்தாகும். அதிக விக்கெட்களை எடுப்பது மட்டுமின்றி, ரன்களை கட்டுப்படுத்துவதும் ஒரு பந்துவீச்சாளரின் முக்கிய பங்களிப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், க்ருணால் பாண்டியா பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங் மற்றும் பீல்டிங்கிலும் அணிக்கு உதவக்கூடியவர் என்று கவாஸ்கர் பாராட்டியுள்ளார். உலகக் கோப்பை போன்ற முக்கியமான தொடர்களில் வெற்றி பெற விரும்பும் அணிகள், இவரை போன்ற பல்துறை வீரர்களின் திறமையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

ஐபிஎல்லில் க்ருணால் பாண்டியா

க்ருணால் பாண்டியா 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. இருப்பினும், ஐபிஎல் போட்டிகளில் அவர் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ஐபிஎல் 2026 சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய அவர், 14 விக்கெட்களை வீழ்த்தியதுடன் பேட்டிங்கில் 226 ரன்களையும் எடுத்துள்ளார். அவருடைய பந்துவீச்சு எகானமி 8.40 ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயல்பாடுகளை சுட்டிக்காட்டும் வகையில், க்ருணால் பாண்டியாவின் தற்போதைய ஃபார்ம் மற்றும் பல்துறை திறனை தேர்வாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

வயதைவிட திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்!

இந்திய அணிக்கான தேர்வில் வயதை மட்டும் அளவுகோலாக கொள்ளக் கூடாது என்பதையும் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். வீரர்களின் திறமை, உடற்தகுதி மற்றும் தற்போதைய ஆட்டத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடாகும்.

உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போன்ற போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் வீரர்கள், இந்திய அணிக்கு தேவையான தரத்தில் இருந்தால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அனுபவம் வாய்ந்த வீரர்களை வயதை காரணம் காட்டிப் புறக்கணிப்பதைவிட, அவர்களுடைய தற்போதைய செயல்பாடுகளை மதிப்பீடு செய்து தேர்வு செய்வதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்பதே கவாஸ்கரின் கருத்து.

புவனேஷ்வர் குமார் போன்ற வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவது, அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களின் அணித் தேர்வு குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், க்ருணால் பாண்டியா உள்ளிட்ட வீரர்களின் செயல்பாடுகளையும் தேர்வாளர்கள் பரிசீலிப்பார்களா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket