SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ரஷ்ய நோய் தடுப்பு ஆய்வகத்தில் பெண் உயிரிழப்பு! 200 பேருக்கு குவாரண்டைன்..

ரஷ்யாவில் உள்ள ஒரு ப்ளேக் நோய் தடுப்பு ஆய்வகத்தில், 28 வயது பெண் ஒருவர் பணியாற்றி வந்தார். அவர், நிமோனியா பாதிப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Oct 05, 2026, 01:04 PM IST | Updated: Oct 05, 2026, 01:13 PM IST
Join

ரஷ்யாவில் செயல்பட்டு வரும் ஒரு பிளேக் நோய் தடுப்பு ஆய்வகத்தில், அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடைப்பெற்றிருக்கிறது. இங்கு பணியாற்றி வந்த 28 வயது பெண் ஒருவர் நிமோனியா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து, அவருடன் நேரடி தொடர்பில் இருந்த 200 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

அந்த பெண்ணிற்கு என்ன ஆனது?

ரஷ்யாவில் இருக்கும் நோய் தடுப்பு ஆய்வகத்தில், டாரியா ஷிபிலோவா என்கிற 28 வயது பெண் பணியாற்றி வந்துள்ளார். இவர், Irkutsk எனும் இடத்தில் இருக்கும் நோய் தடுப்பு ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக இவரை கடந்த மாதம் 29ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதோடு, இவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. இறுதியில், அவர் சிகிச்சை பலனின்றி  கடந்த அக்டோபர் 2ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.

சில தகவல்களின் படி, அந்த பெண் ஆய்வகத்தில் ஒரு நோய் மாதிரிகளை கொண்ட பாக்டீரியா இருந்த ட்யூபை கையாளும் போது, அது தவறுதலாக உடைந்ததாகவும், இதனால் அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும், இதற்கும் அவர் உயிர் பிரிந்ததற்கும் சம்மந்தம் இருக்கிறதா என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அதே போல, பணி நிமித்தமாக இந்த பெண், Buryatia எனும் இடத்திற்கு சென்றிருக்கிறார். அங்கும், அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. கூறுபவை அனைத்தும் இப்போது வரை அனுமானங்களாகவே இருப்பதால், எதையும் அரசாங்கம் உறுதிப்படுத்தினால்தான் தெரியவரும்.

தனிமைப்படுத்தப்பட்ட 200 பேர்..

உயிரிழந்த பெண், யாருடனெல்லாம் தொடர்பில் இருந்தாரோ அவர்களை கண்டுபிடித்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டோரை கண்டுபிடித்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

197 பேர், தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருக்கின்றனர். அவர்கள் இருந்த பகுதிகளில் தனிமைப்படுத்தப்படுதலுக்கான ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்டோர், மருத்துவமனையில், மருத்துவ கண்காணிப்பில் இருக்கின்றனர்.

மேலும் படிக்க | Flydubai விமான காக்பிட்டில் நடந்தது என்ன? - தாக்கப்பட்ட இந்திய விமானியின் வாக்குமூலம்

இது குறித்து, Irkutsk கவர்னர் கோப்செவ் பேசுகையில், மருத்துவ கண்காணிப்பில் இருப்பவரகளுக்கு எந்த நோய் பாதிப்பும் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என்றும், அவர்களை அணுகுபவர்களுக்கு முகக்கவசம் மற்றும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த செய்தி வெளியான பிறகு, பொது மக்கள் யாரையும் அஞ்ச வேண்டாம் என அரசு தெரிவித்துள்ளது.

பரவியது எந்த நோய்?

இப்போது கேள்வி என்னவென்றால், அந்த பெண் ஏன் இறந்து போனார்? அவர் இறந்ததற்கு நோய் தான் காரணமா? அப்படி காரணம் என்றால் அது எந்த நோய் என்பதுதான். இன்னும் அதற்கான பதில் தெரியவில்லை. இருப்பினும் அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், இறப்பிற்கு காரணம் அந்த நோயாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்பதுதான்.

அப்படியே அந்த பெண்ணிற்கு அந்த நோய் வந்திருக்கிறது என்பது தெரிந்தாலும் இது பரவ வாய்ப்பில்லை என்றும் கூறி வருகின்றனர்.

நிமோனிக் பிளேக் என்பது யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது மற்றும் நுரையீரலைப் பாதிக்கிறது. பியூபோனிக் பிளேக்கைப் போலல்லாமல், இது சுவாசத் துளிகள் மூலம் மக்களிடையே பரவக்கூடும். சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இந்த நோய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும், ஆனால் உடனடியாக சிகிச்சையைத் தொடங்கினால் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மூலம் குணப்படுத்த முடியும்.

அமெரிக்கா கூறுவது என்ன?

இந்த செய்தி, உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தியதை அடுத்து, அமெரிக்காவும் இதில் தலையிட்டுள்ளது. இதில் உண்மை என்ன என்று கண்டுபிடிக்க அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து அவர்கள் பேசும் போது, அந்த பெண்ணின் இறப்பு குறித்து, இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும், ரஷ்ய அதிகரிகளிடம் விரைவாகவும், ஒளிவுமறைவின்றியும் இந்த விஷயத்தில் உண்மையை சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். இதை தற்போது அமெரிக்காவும் கவனமாக உற்று நோக்கி வருகிறது. 

மேலும் படிக்க | எண்ணெய் சந்தைக்கு BIG SHOCK? சவுதியின் முக்கிய Pipeline மீண்டும் சிக்கலில்!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES