SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மக்கா, மதீனா மீது தாக்குதல் முறியடிப்பு... ஹவுதிஸ் சொல்வது என்ன? சௌதியில் பதற்றம்

மக்கா, மதீனா மீது ஹவுதிகள் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் இடைமறித்து அழித்ததாக சௌதி அரேபியா அறிவிப்பு; தாக்குதல் குற்றச்சாட்டை ஹவுதி அமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Written By Sudharsan G
Published: Oct 25, 2026, 08:48 AM IST | Updated: Oct 25, 2026, 08:55 AM IST
Join

இஸ்லாமியர்களின் புனித ஆன்மீக நகரங்களான மெக்கா மற்றும் மதினா மீது ஹவுதீஸ் அமைப்பினர் தாக்குதல் தொடுக்க முயற்சித்ததாகவும், அந்த தாக்குதலை துல்லியமாக முறியடித்ததாகவும் சௌதி அரேபியா தெரிவித்துள்ளது.

சௌதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்பு பொது இயக்குநரகம் அதன் X பக்கத்தில், "ஹவுதிஸ் பயங்கரவாத குழுவினர் மக்கா அல்-முகர்ரமா, மதீனா அல்-முனவ்வரா பகுதிகளை நோக்கி ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சிதறல்கள் விழுந்தன" என குறிப்பிட்டுள்ளது.

மேலும், இத்தகைய அவரச சூழல்களுக்கென வகுக்கப்பட்டுள்ள அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளும் உடனடியாக செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தம்மாம் விமான நிலையத்தில் திடீர் தாக்குதல்... இந்தியர் உயிரிழப்பு -என்ன நடந்தது?

சௌதி அரேபியா கூறியது என்ன?

நேற்றைய தினம் (அக். 24) ஹவுதிஸ் பயங்கரவாதக் குழுவினர் மக்கா மற்றும் மதீனா பகுதிகளை இலக்காகக் கொண்டு இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகவும், அவற்றை வான்வழியே இடைமறித்து அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கா மற்றும் மதீனா பகுதிகளிள் சிதறி விழுந்த ஏவுகணைத் துகள்கள் குறித்து சிவில் பாதுகாப்புப் படையினர் கள ஆய்வு மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் புனித நகரமான மக்காவின் 'வாடி அல்-மக்மஸ்'(Wadi Al-Maghmas) பகுதியில் ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெத்தா மாகாணத்தில் உள்ள அல்-நுஸ்ஹா குடியிருப்புப் பகுதி, தாயிஃப் மாகாணத்தில் உள்ள வாடி ஜலீல் பகுதி, ராபிக் மாகாணத்தின் மஸ்தூரா மையம் ஆகிய இடங்களில் இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளின் சிதறல்கள் விழுந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹவுதிஸ் மறுப்பு

இருப்பினும் ஹவுதிஸ் பயங்கரவாத குழுவினர் சௌதி அரேபியாவின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ஹவுதிஸ் செய்தித்தொடர்பாளரும், ஏமன் நாட்டு ராணுவ அதிகாரியுமான யஹ்யா சாரி கூறுகையில், ஹவுதிஸ் இயக்கம் சௌதி அரேபியாவின் தாக்குதல் குறித்து, மக்கா மற்றும் மதீனாவின் புனிதப் பகுதிகளை நோக்கி தாக்குதல் தொடுத்ததாக சௌதி அரேபியா கூறுவது மிகப்பெரிய பொய் என தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | Explained | சவுதிக்கு புதிய அச்சுறுத்தல்: முக்கிய விமான நிலையங்களை மட்டுமே குறிவைக்கும் ஹூதிகள்!

சௌதி அரேபியாவின் எச்சரிக்கை

சௌதி அரேபியாவின் உள்விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு அவசரநிலைகள் மற்றும் பேரிடர்களின் போது பொதுமக்களையும், உடைமைகளையும் பாதுகாக்கும் அரசு அமைப்பான சௌதி சிவில் பாதுகாப்புத் துறை, மக்கா உட்பட அதன் நான்கு மேற்கு மாகாணங்களில் சாத்தியமான ஆபத்து குறித்து எச்சரித்ததுடன் அப்பகுதியினரை அருகில் உள்ள பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினமும் (அக். 23), நேற்றும் (அக். 24) சௌதி அரேபியாவின் மூன்று விமான நிலையங்கள், இரண்டு எண்ணெய் நிலையங்கள், ஒரு குழாய் இணைப்பு மற்றும் ஒரு விமானப் படைத்தளம் உள்ளிட்ட பல இடங்களை தாக்கியதாக ஹவுதிகள் அறிவித்த சில மணிநேரங்களில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏமனில் நடந்த தாக்குதல்

ஹவுதீகள் சௌதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தை இரண்டு முறை தாக்கியதாகவும், தம்மாம் மற்றும் நஜ்ரான் பிராந்தியங்களில் உள்ள விமான நிலையங்களை குறிவைத்ததாகவும் ஏமன் நாட்டின் ராணுவ அதிகாரி யஹ்யா சாரி தெரிவித்தார்.  

தெற்கு கமிஸ் முஷைத் விமானப் படைத்த தளம், கச்சா எண்ணெய் இறைக்கும் நிலையங்கள், கிழக்கிறல் இருந்து மேற்கு நோக்கிய கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு ஆகியவற்றையும் ஹவுதிஸ் குழு தாக்கியதாக யஹ்யா தெரிவித்தார்.

இந்த பகுதியில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. சௌதியின் தெற்கில் உள்ள துறைமுக நகரமான ஏடனில் உள்ள கடலோரக் காவல் படை நிலைகள் மீது ஹவுதீகள் மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்கியதாக சௌதி அரேபியாவின் ஆதரவுபெற்ற ஏமன் அரசு தெரிவித்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது...

சௌதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினரும், ஹவுதிகளும் எல்லை தாண்டி தாக்குதல் நடத்துவதை தடுக்க ஐ.நா., ஏற்பாட்டில் 2022ஆம் ஆண்டு இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த தீவிர மோதல் போக்கின் மூலம் அந்த ஒப்பந்தம் முறிந்துள்ளது.

சௌதி கூட்டுப்படை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசுக்கு ஆதரவளிக்கும் வேளையில், ஏமன் தலைநகர் சனாவை ஹவுதீகள் தொடர்ந்து தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சவுதி சட்டம்: பின்பற்ற வேண்டியவை என்னென்ன? எதற்கெல்லாம் தடை.. Explained

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES