செர்பியாவில் மாணவர் ஆட்சி! 14 ஆண்டு கால கொடுங்கோலாட்சிக்கு முடிவு.. Students இயக்கம் வெற்றி பெற்றது எப்படி?
Serbia Election: செர்பியாவில் மாணவர் இயக்கம் ஆட்சியை கைப்பற்றியது உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக போராட்டங்களை நடத்திய மாணவர் அமைப்பினர் பொதுத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
Serbia Election: இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் மாணவர்கள் அமைப்பினர் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஐரோப்பா நாடுகள், ஆசிய நாடுகளில் மாணவர்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டங்கள் ஆளும் கட்சிக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. இந்த சூழலில், செர்பியா நாட்டில் ஆளும் கட்சியை வீழ்த்தி மாணவர் அமைப்பு பொதுத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.
செர்பியா பொதுத்தேர்தல்
வடக்கு ஆசியாவில் உள்ள முக்கியமான நாடு செர்பியா. இந்நாட்டில் சுமார் 66 லட்சம் மக்கள் தொகையை கொண்ட நாடாக இருக்கிறது. செர்பியா நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுத்தேர்தல் நடந்து வருகிறது. செர்பியா நாடாளுமன்றத்தில் மொத்தம் 250 இடங்கள் உள்ளன.
ஒரு கட்சி ஆட்சி அமைக்க குறைந்தது 126 இடங்களில் வெற்றி பெற வேண்டும். நாடு முழுவதுமே ஒரே பெரிய தொகுதியாகக் கருதப்படுகிறது. ட்சிகள் நாடு முழுவதும் பெறும் மொத்த வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் நாடாளுமன்ற இடங்கள் பிரித்து வழங்கப்படுகிறது. அந்த வகையில், செர்பியாவில் அக்டோபர் 25ஆம் தேதி அன்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மாணவர் அமைப்பினர் வெற்றி பெற்றுள்ளனர்.
செர்பியாவில் மாணவர் ஆட்சி
செர்பியாவில் கடந்த 14 ஆண்டுகளாக அதிபராக அலெக்சாண்டர் வுசிக் இருந்து வந்தார். இவர் தான் கடந்த 14 ஆண்டுகளாக செர்பியா நாட்டை ஆண்டு வந்தார். அலெக்சாண்டர் வூசிக் தலைமையிலான ஒருங்கிணைந்த செர்பியா ஆட்சி நடந்து வந்தது. இந்த தேர்தலில் அலெக்சாண்டர் கட்சி மற்றும் ஸ்டூடன்ட் லிஸ்ட் (Student List) என்ற கட்சிக்கு இடையே கடும் போட்டி இருந்து வந்தது. இப்போது வரை வெளியான முதறக்ட்ட தேர்தல் முடிவுகளின்படி, மாணவர் இயக்கம் ஆதரவு பெற்ற ஸ்டூடன்ட் லிஸ்ட் கட்சி அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து, வுசிக் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு இருக்கிறார். 250 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் மாணவர் இயக்கம் ஆதரவு பெற்ற இயக்கம் 135 முதல் 140 இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தனது செர்பிய முற்போக்குக் கட்சி 105 இடங்களைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக வுசிச் கூறினார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பெல்கிரேட் முழுவதும் கொண்டாட்டங்கள் வெடித்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டனர். 2014 முதல் அதிபராக செர்பியா அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த வூசிச்சிற்கு இந்த தேர்தல் முடிவு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
student list கட்சி தேர்தலில் மாணவர்களை வேட்பாளராக நிறுத்தவில்லை. செர்பியாவில் மாணவர்கள் தலைமையிலான மாபெரும் போராட்டங்களின் பின்னணியில் உருவான இக்கட்சி, மாணவர் அமைப்புகளின் ஆதரவு பெற்ற பல்வேறு தரப்பினரை வேட்பாளராக நிறுத்தியது. மாணவர்கள் நேரடியாக போட்டியிடாமல், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், நடிகர்கள், விளையாட்டு பிரபலங்கள் போன்ற அரசியல் அனுபவமே இல்லாதவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி மாபெரும் வெற்றி கண்டுள்ளனர்.
2 ஆண்டுகளாக நீடித்த மாணவர்கள் போராட்டம்
பால்கன் தீபகற்ப பகுதியில் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு சிறிய ஐரோப்பிய நாடு செர்பியா. இந்நாட்டின் மக்கள் தொகை சுமார் 66 லட்சம் மட்டுமே. இது இந்தியாவின் பல பெருநகரங்களின் (Metros) மக்கள் தொகையை விட மிகக் குறைவாகும். 2006-ஆம் ஆண்டு மொண்டெனேக்ரோ (Montenegro) நாட்டிலிருந்து பிரிந்த பிறகே, செர்பியா ஒரு தனிச் சுதந்திர நாடாக உருவெடுத்தது. அதற்கு முன்பாக, 'யுகோஸ்லாவியா கூட்டரசு' (Federal Republic of Yugoslavia) அமைப்பின் ஒரு அங்கமாக செர்பியா இருந்தது. பின்னர் 2003-ஆம் ஆண்டில் செர்பியா என பெயர் மாற்றப்பட்டது.
இந்த நாட்டில் தற்போது மாணவர்கள் ஆட்சி கைப்பற்றியுள்ளது. இந்த மாணவர் இயக்கத்தின் எழுச்சிக்கு பின்னால், நீண்ட போராட்டங்கள் நிறைந்துள்ளது. 2024-ஆம் ஆண்டு நோவி சாட் நகரில் உள்ள ஒரு ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த போராட்டம் துவங்கியது. அன்று தல் ஊழல் உள்ளிட்ட விஷயங்களை முன்வைத்து அரசுக்கு எதிராக மாணவர்கள் போராடினர்.
சுமார் இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். சில பிரச்னைகளுக்கு மட்டும் போராட்டம் நடத்திய இந்த மாணவர் இயக்கம், அதன்பிறகு அரசியல் அமைப்பில் மாற்றங்களை கோரியது. தற்போது தேர்தல் வெற்றியின் மூலம் இந்த மாணவர் இயக்கம் மாபெரும் வெற்றியை பெற்று, நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளது. இந்த ஒட்டுமொத்த உலக நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஏனென்றால், இந்தியா, இத்தாலி என ஐரோப்பா நாடுகளில் மாபெரும் மாணவர்கள் போராட்டம் நடந்து வரும் சூழலில், செர்பியாவில் மாணவர் இயக்கம் ஆட்சி கைப்பற்றி இருக்கிறது.
மேலும் படிக்க: ஆய்வகத்தில் பாதரசத்தை தங்கமாக மாற்றிய ஸ்டார்ட்-அப்!! இனி தங்கம் விலை குறையுமா?