• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /Explainer: விஜய்க்கு எதிராக தனுஷ்? தவெக-வை டார்கெட் செய்யும் டெல்லி? பின்னணி என்ன?

Explainer: விஜய்க்கு எதிராக தனுஷ்? தவெக-வை டார்கெட் செய்யும் டெல்லி? பின்னணி என்ன?

முதலமைச்சர் விஜய்யின் பலமான இளைஞர் வாக்கு வங்கியை பிரிக்க தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களை டெல்லி மேலிடம் களமிறக்க திட்டமிடுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Written ByR Balaji
Published: Oct 26, 2026, 12:11 PM IST|Updated: Oct 26, 2026, 12:17 PM IST
joinshare
Explainer: விஜய்க்கு எதிராக தனுஷ்? தவெக-வை டார்கெட் செய்யும் டெல்லி? பின்னணி என்ன?

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
கைதாகிறாரா அன்பில் மகேஷ்? முன்ஜாமீன் மனு தள்ளுபடி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

கைதாகிறாரா அன்பில் மகேஷ்? முன்ஜாமீன் மனு தள்ளுபடி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

2

சிவகார்த்திகேயன் அசிங்கப்படுத்தினாரா? சர்ச்சைகளுக்கு பிளாக் பாண்டி விளக்கம்..உண்மை என்ன?

3

Explainer: விஜய்க்கு எதிராக தனுஷ்? தவெக-வை டார்கெட் செய்யும் டெல்லி? பின்னணி என்ன?

4

அர்னாப் புயல் தீவிரம்: 125 கி.மீ. வேக காற்று, 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் -யாருக்கு பாதிப்பு?

5

செர்பியாவில் மாணவர் ஆட்சி! 14 ஆண்டு கால கொடுங்கோலாட்சிக்கு முடிவு.. Students இயக்கம் வெற்றி பெற்றது எப்படி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழக அரசியலில் விஜய் ஏற்படுத்திய தாக்கம், வளர்ந்து வரும் நடிகர்களுக்கும் அரசியல் ஆர்வத்தை துண்டி உள்ளது. குறிப்பாக நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திக்கேயனின் சமீபகால செயல்பாடுகள் அவர்களின் அரசியல் வருகையை உணர்த்தும் விதமாகவே இருக்கிறது. அதேசமயம், தவெக தலைவர் விஜய்யை வீழ்த்த பாஜகவால் இறக்கப்படும் புதுமுகங்களே இவர்கள் எனவும் பேசப்படுகிறது. இப்படி பல விஷயங்கள் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன. இந்த நிலையில், நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திக்கேயன் அரசியல் வருகிறார்களா? அப்படி வந்தால் அவர்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்குமா? உண்மையிலேயே இவர்களின் பின்னால் பாஜக உள்ளதா? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

விஜய் ஏற்படுத்திய தாக்கம்

தமிழகத்தில் சினிமாவுக்கும் அரசியலுக்கும் நீண்டகால தொடர்பு இருந்து வருகிறது. திரைத்துறையில் புகழ்பெற்ற பலர் அரசியலுக்கு வந்து தங்களுக்கென தனி இடத்தை பிடித்துள்ளனர். அந்த வரிசையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றிருப்பது, திரைத்துறையினரின் அரசியல் பிரவேசம் குறித்த விவாதங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

விஜய்யின் ரசிகர் வட்டமும் இளைஞர்களிடையே அவருக்கு இருக்கும் செல்வாக்கும் அரசியல் விவாதங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. இதனால், தற்போது பிரபலமாக இருக்கும் மற்ற நடிகர்களும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தனுஷ், சிவகார்த்திக்கேயன் அரசியல் வருகிறார்களா?

சமீப காலமாகவே நடிகர் தனுஷும், சிவகார்த்திக்கேயனும் தங்களது ரசிகர் மன்ற நிர்வாகிகளைத் தொடர்ந்து சந்தித்துப் பேசி வருகிறார்கள். பார்ப்பதற்கு இது வழக்கமான சினிமா ரசிகர் சந்திப்பு போலத் தெரிந்தாலும், உள்ளே நடப்பது எல்லாமே பக்கா அரசியல் பிளான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

பல்ஸ் பார்க்கும் ஹீரோக்கள்: களத்தில் உடனே இறங்கிவிடாமல், 'நாம் அரசியலுக்கு வந்தால் ரசிகர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள்?' என நிர்வாகிகளின் எண்ணங்களை முதலில் சோதித்துப் பார்க்கிறார்கள். அதேபோல், பொதுமக்களின் மைண்ட்செட் எப்படி இருக்கிறது? விஜய் ஆட்சி மீது மக்களுக்கு என்ன மாதிரியான பார்வை இருக்கிறது? நாம் இறங்கினால் ஆதரவு கிடைக்குமா? என நிர்வாகிகளிடம் விவாதித்து கள நிலவரத்தை எடைபோட்டு வருகிறார்கள்.

ஆதவ் அர்ஜுனா ஆவேசம்

சென்னையில் நடந்த முஸ்லீம் லீக் இளைஞரணி பொதுக்கூட்டத்தில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியது இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கி உள்ளது.

"2029 எம்பி தேர்தல்ல இந்தியாவின் வெற்றியே தமிழ்நாட்டில இருந்துதான் உருவாகப் போகுது. அந்த பலத்தை உடைக்கத்தான் புதுசு புதுசா நடிகர்கள் டெல்லிக்குப் போறாங்க, அங்கேயே முகாமிடுறாங்க. எந்த நடிகர் டெல்லிக்குப் போனார்? பொங்கலுக்கு யார் டெல்லியில முகாமிட்டிருந்தார்? எல்லாத்தையும் நாங்க பார்த்துட்டுதான் இருக்கோம்."

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, யாருடைய பெயரையும் நேரடியாக சொல்லவில்லை என்றாலும், அவர் குறிவைத்து பேசியது தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனைத்தான் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

முதல்வர் டேபிளுக்கு வந்த சீக்ரெட் ஃபைல்: உளவுத்துறை சொன்னது என்ன?

ஆதவ் அர்ஜுனா பொது மேடையில் இப்படி ஆவேசமாக பேசுவதற்கு முன்பே, முதலமைச்சர் விஜய்யின் மேசைக்கு உளவுத்துறையின் ஒரு முக்கிய ஃபைல் வந்துள்ளது.

அதாவது, சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் முக்கிய அமைச்சர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தியபோது, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனின் சமீபத்திய சந்திப்புகள் பற்றிய ரிப்போர்ட் விவாதிக்கப்பட்டுள்ளது. "இவங்களும் அரசியலுக்கு வரப் பார்க்கிறார்களா?" என விஜய் கேட்டுள்ளார்.

அதற்கு ஆலோசகர்கள், "திமுக, அதிமுகவை விட விஜய் ஆகிய உங்களுக்குத்தான் இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களிடம் பெரிய ஈர்ப்பு இருக்கிறது. இன்னும் இரண்டு தேர்தலுக்கு உங்களின் இந்த இமேஜை பாரம்பரிய கட்சிகளால் அசைக்க முடியாது. அதனால், உங்களின் பலமான இளைஞர் ஓட்டுகளைப் பிரிக்க சினிமா ஹீரோக்கள்தான் சரியான சாய்ஸ் என பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் நினைக்கிறது" எனக் கூறி உள்ளனர்.

டெல்லி பிளான்.. பின்னணி என்ன?

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய், "நாம் டெல்லியுடன் சுமுகமான நட்போடுதானே போகிறோம், அப்புறம் ஏன் நமக்கு எதிராக இப்படி செய்ய வேண்டும்?" எனக் கேட்டாராம்.

அதற்கு ஆலோசகர்கள், "மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் சரி, பாஜக நேரடியாக ஆளாத மாநிலங்களில் இப்படி மாற்று சக்திகளை உருவாக்கி ஆளும் கட்சியை பலவீனப்படுத்துவது வழக்கமான டெல்லி பாலிடிக்ஸ்தான்" என விளக்கம் தந்துள்ளனர்.

அடுத்தது என்ன?

இதை கேட்ட முதலமைச்சர் விஜய் ஆடிபோயுள்ளார். பின்னர்தான், இனியும் இந்த விஷயத்தை அமைதியாக வேடிக்கை பார்க்க கூடாது. பொது மேடைகளிலேயே மக்கள் மத்தியில் போட்டுடைக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு உத்தரவு போட்டுள்ளார். அதன் முதல் பாய்ச்சலாகத்தான் ஆதவ் அர்ஜுனா பேசியிருக்கிறார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் நாட்களில் மற்ற தவெக அமைச்சர்களும் இதே விஷயத்தைக் கையில் எடுத்துப் பேசுவார்கள் என்கிறார்கள். இதற்கு நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திக்கேயன் தரப்பிலிருந்து பதில் வருகிறதா அல்லது அமைதியாகவே காய் நகர்த்துவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer