• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /சிவகார்த்திகேயன் அசிங்கப்படுத்தினாரா? சர்ச்சைகளுக்கு பிளாக் பாண்டி விளக்கம்..உண்மை என்ன?

சிவகார்த்திகேயன் அசிங்கப்படுத்தினாரா? சர்ச்சைகளுக்கு பிளாக் பாண்டி விளக்கம்..உண்மை என்ன?

நடிகர் பிளாக் பாண்டி, சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த நேர்காணலில், தான் உதவி கேட்க போகும் போது தன்னை அசிங்கப்படுத்தினார் என ஒரு நடிகரை பற்றி பெயர் குறிப்பிடாமல் பேசியிருந்தார். அது சிவகார்த்திகேயன்தான் என அனைவரும் கூற, இதற்கு பிளாக் பாண்டியே விளக்கம் கொடுத்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Oct 26, 2026, 12:38 PM IST|Updated: Oct 26, 2026, 12:54 PM IST
joinshare
சிவகார்த்திகேயன் அசிங்கப்படுத்தினாரா? சர்ச்சைகளுக்கு பிளாக் பாண்டி விளக்கம்..உண்மை என்ன?
Image Credit: Black Pandi Sivakarthikeyan | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: ஒரே மாதத்தில் 10 குழந்தைகள் மாயம்.. தவறவிடும் தமிழக காவல்துறை.. என்ன பிரச்னை?

Explained: ஒரே மாதத்தில் 10 குழந்தைகள் மாயம்.. தவறவிடும் தமிழக காவல்துறை.. என்ன பிரச்னை?

2

கைதாகிறாரா அன்பில் மகேஷ்? முன்ஜாமீன் மனு தள்ளுபடி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

3

சிவகார்த்திகேயன் அசிங்கப்படுத்தினாரா? சர்ச்சைகளுக்கு பிளாக் பாண்டி விளக்கம்..உண்மை என்ன?

4

Explainer: விஜய்க்கு எதிராக தனுஷ்? தவெக-வை டார்கெட் செய்யும் டெல்லி? பின்னணி என்ன?

5

அர்னாப் புயல் தீவிரம்: 125 கி.மீ. வேக காற்று, 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் -யாருக்கு பாதிப்பு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ் திரையுலகிற்கு, சின்னத்திரை மூலம் நடிக்க வந்தவர், பிளாக் பாண்டி. இவர், கனா காணும் காலங்கள், அங்காடித்தெரு உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். இவ்வளவு ஏன், விஜய்யின் கில்லி படத்தில் கூட, அவரிடம் சிகரெட் விற்கும் பையனாக வந்திருக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 10ல் பிளாக் பாண்டி:

நடிகர் பிளாக் பாண்டி, இந்த வருடம் ஆரம்பித்துள்ள பிக்பாஸ் சீசன் 10ல் முக்கிய போட்டியாளராக களமிறங்கினார். ஆனால், நிகழ்ச்சியில் நுழைந்த 1 வாரத்திலேயே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை போட்டியில் இருந்து பிக்பாஸ் குழுவினரே வெளியேற்றினர். இவ்வளவு கடன உழைப்புக்கு மத்தியில் முன்னேறி பிக்பாஸிற்குள் வந்த பிளாக் பாண்டிக்கு, போட்டி ஆரம்பித்த உடனேயே தன்னை வெளியேற்றியது மனதை நொறுக்கிய விஷயமாக இருந்தது. இருப்பினும், அவர் வெளியில் வந்த பின்பு தன் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார். இந்த சமயத்தில்தான், பிளாக் பாண்டி முன்னர் கொடுத்த நேர்காணல் ஒன்று வைரலாகி வருகிறது.

வைரலான பேட்டி..

நடிகர் பிளாக் பாண்டி, சில ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்திருந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் அவர் ஒரு நடிகர் பற்றி எதிர்மறையாக பேசியிருந்தார். அதில், தான் ஒரு நடிகரிடம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்க போனதாகவும், அந்த நடிகர் தனக்கு பணத்தை கொடுத்ததாகவும் கூறியிருந்தார். தனக்கு வாய்ப்பு இருந்தால் கொடுங்கள், பணமெல்லாம் வேண்டாம் என கூறிவிட்டு அந்த காசை திருப்பி கொடுத்ததாகவும் தெரிவித்திருந்தார். அந்த நடிகர் சிவகார்த்திகேயன்தான் என்று கூறி பலரும் வீடியோக்களை வைரலாக்கி வந்தனர். இதற்கு நடிகர் பிளாக் பாண்டி விளக்கமளித்து ஒரு வீடியாேவை வெளியிட்டிருக்கிறார்.

பிளாக் பாண்டி விளக்கம்:

தான் 8 வருடங்களுக்கு முன்பு கொடுத்திருந்த நேர்காணலில், ஒவ்வொரு ஆர்டிஸ்டை பற்றி கேட்கும் போது தன்னிடம் கேட்டதாகவும், அப்போது அதற்கு தான் பதில் கூறிக்கொண்டே வந்ததாகவும் அப்போது சிவகார்த்திகேயனை பற்றியும் கேட்டதாகவும் கூறியிருந்தார்.

அப்போது, தான் சிவகார்த்திகேயனுடன் தொடர்பு கொள்ள முடியாத ஒரு சூழலில் இருந்த போது அவருடைய மேனேஜர் தான் கேட்டதை தவறாக கூறி விட்டதாகவும், அப்போது தான் கஷ்டப்படுவதாக நினைத்து சிவகார்த்திகேயன் அவருடைய மேனேஜரை விட்டு பணம் கொடுத்தாராம். அதை வேண்டாமென திரும்பி கொடுத்து விட்டு, அதிலிருந்து 20 ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்டு இதை வேண்டாமென கொடுத்து விட்டதாகவும், இதற்கு பதில் வாய்ப்பு மட்டும் கொடுங்கள் என்று கூறியதாக குறிப்பிட்டிருக்கிறார்.

Glad that actors like Blackpandi coming up for SK against the narratives spread here in this social media!!👏🏻♥️ #Sivakarthikeyan https://t.co/vEb5U8qsEX

— HARISH (@SKHarishbabu) October 25, 2026

அந்த நேர்காணலில் அதை பேச்சுவாக்கில் சொன்னது, தவறாக வெளியில் நெகடிவாக மாறிவிட்டதாக பிளாக் பாண்டி கூறியிருக்கிறார். பின்னர், நேர்காணலை யாருக்கு கொடுத்தாரோ அவர்களிடமே போன் செய்து அந்த வீடியோவை டெலிட் செய்ய சொன்னதாகவும் அதை அவர்களும் பெருந்தன்மையுடன் டெலிட் செய்ததாகவும் தெரிவித்தார்.

இது சம்பந்தமாக நேரடியாகவே சிவகார்த்திகேயனை சந்தித்து தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியதாகவும் தெரிவித்தார். மேலும், தான் அவரிடம் காசு வாங்க வேண்டாம் என்று நினைத்ததாகவும், அதை அவரிடமே தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். இதை சிவகார்த்திகேயனே பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறிவிட்டதாக தெரிவித்த பிளாக் பாண்டி, தற்போது சிவகார்த்திகேயன் குறித்து தன்னை வைத்து அவதூறாக சிலர் பதிவிட்டு வருவதாகவும் பேசியிருக்கிறார்.

யாரும் தவறான செய்திகளை பதிவிட வேண்டாம் என கூறும் அவர், சமூக வலைதளங்களில் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். தொடர்ந்து, இது சிவகார்த்திகேயனுக்கோ, பிளாக் பாண்டிக்கோ அது நெகடிவாக மாறும் என்று கூறியிருக்கிறார்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema