Explained : அமெரிக்காவின் தலையெழுத்தை மாற்றிய தேர்தல்! வரலாற்றில் இடம்பிடித்த வெற்றியாளர்கள்
அமெரிக்காவின் இத்தனை ஆண்டுகால வரலாற்றில், முதல் முறையாக கறுப்பினத்தை சேர்ந்த பெண் ஒருவர் கவர்னர் ஆகி இருக்கிறார். அவர் போல, பல பேர் இத்தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்கள் குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
அமெரிக்காவில் நடந்த இடைத்தேர்தலில், செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபையை ஜனநாயக கட்சி கைப்பற்றியிருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் ட்ரம்ப் அரசாங்கத்திற்கு கடும் அதிர்ச்சியளிக்கும் முடிவுகளை கொடுத்துள்ளது. இதையடுத்து, அமெரிக்காவில் முதன்முதலாக கருப்பிண பெண் தலைவர் கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே போல, முதல் லத்தீன் அமெரிக்க பெண் கவர்னர், முதல் தன்பாலின ஈர்ப்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகள் இம்முறை பதிவாகி இருக்கின்றன. அவை குறித்த முழு விவரம், இதோ.
ட்ரம்ப் கட்சியின் தற்போதைய நிலை!
நாடாளுமன்ற பிரதிநிதிகள், சபையில் மொத்தம் இருக்கும் 435 உறுப்பினர் இடங்களுக்கும், செண்ட் சபையில் 35 இடங்களுக்கு, 36 மாகாணங்களில் ஆளுநர் பதவிகளுக்கும் தேர்தல் நடைப்பெற்றது. தேர்தல் முடிவுகளின்படி, ஜனநாயக கட்சி, செனட் சபையில், மொத்தமாக 53 இடங்களையும், குடியரசு கட்சி 42 இடங்களையும் கைப்பற்றி இருக்கிறது. மேலும், 435 உறுப்பினர்களை கொண்ட பிரதிநிதிகள் அவையிலும், 200 இடங்களுக்கும் மேல் ஜனநாயக கட்சி கைப்பற்றி இருக்கிறது.
வரலாற்றில் முதன்முறையக நடந்த நிகழ்வு..
அமெரிக்கவின் ஜார்ஜியா மாகாணத்தின் ஆளுநராக, ஜனநாயக கட்சியை சேர்ந்த கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் வெற்றி பெற்றிருக்கிறார். இவ்வெற்ரியின் மூலமாக, அமெரிக்க வரலாற்றில் ஆளுநராக வெற்றி பெற்ற முதல் கருப்பின பெண் எனும் பெருமையை கீஷா லான்ஸ் பெற்றிருக்கிறார். 1998ஆம் ஆண்டுக்கு பிறகு, ஜார்ஜியா மாகாண ஆளுநர் தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.
கீஷா லான்ஸ், 54.2% வாக்குகளை பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சியை சேர்ந்த தொழிலதிபர் ரிக் ஜான்சனை வீழ்த்தி இருக்கிறார். இது மட்டுமல்ல இன்னும் பல்வேறு புதிய விஷயங்கள் இந்த அமெரிக்க இடைத்தேர்தலில் நடந்திருக்கிறது.
அமெரிக்காவின் முதல் வெளிப்படையான தன்பாலின ஈர்ப்பாளர் செனட்:
டெமாக்ரட்டிக் கட்சியை சேர்ந்த க்ரிஸ் பாப்பாஸ் அமெரிக்காவின் செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வெளிப்படையான ஓரினச்சேர்க்கை ஆண் (First Openly Gay Man Elected to The US Senate) எனும் வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார்.
நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் நடந்த, அமெரிக்க இடைக்கால தேர்தலில் குடியரசு கட்சியின் ஜான் சுனுவை தோற்கடித்து க்ரிஸ் பாப்பாஸ் செனட் இடத்தை கைப்பற்றி இருக்கிறார்.
46 வயதான இவர், இதற்கு முன்பு பிரதிநிதிகள் சபையில் உறுப்பினராக பணியாற்றியிருக்கிறார். தற்போது, அமெரிக்க செனட் வரலாற்றில் முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிப்படையான தன்பாலின ஈர்ப்பாளர் ஆணாக பதிவாகி இருக்கிறார்.
இதற்கு முன்னதாக, அமெரிக்க செனட்டில் ஏற்கனவே வெளிப்படையான LGBTQ+ பெண் செனட்டராக டெமி பால்ட்வின் 2013ஆம் ஆண்டில் பதவியில் இருக்கிறார். அனால், வெளிப்படையாக ஆண் தன்பாலின ஈர்ப்பாளர் ஒருவர் செனட் ஆக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
முதல் லத்தின் அமெரிக்க கவர்னர் தேர்வு..!
ஜீனா ஹினோஜோசா, இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் கவர்னரான க்ரெக் அபாட்டை எதிர்த்து வெற்றி பெற்று, கடந்த 30 ஆண்டுகளில் டெக்ஸாஸின் முதல் லத்தின் அமெரிக்க கவர்னர் எனும் சாதனையை படைத்திருக்கிறார்.
கடைசியாக, 90களில் Ann Richards என்ற லத்தின் அமெரிக்கர்தான் இந்த தேர்தலில் வென்றது சாதனையாக இருந்தது. தன் தேர்தல் பரப்புரைகளின் போது, பொதுமக்கள் நலனுக்காகவும், கல்விக்கான நிதி ஒதுக்குதல் குறித்தும், ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்டவை குறித்தும் அவர் பேசியிருந்தார். இதையடுத்து மக்கள் பலர் அவருக்கு வாக்களித்துள்ளனர்.
Native American - முதல் பூர்வக்குடி அமெரிக்க பெண் ஆளுநர்:
அமெரிக்க வரலாற்றிலேயே, முதன்முறையாக Native American எனப்படும் பூர்வக்குடி அமெரிக்க பெண்மணி ஒருவர், நியூ மெக்ஸிகோ மாகாணத்தின் ஆளுநராக வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்திருக்கிறார். அவருடைய பெயர், டெப் ஹாலாண்ட். இவர், குடியரசு கட்சியை சேர்ந்த க்ரெகரி டி.ஹல் என்பவரை எதிர்த்து போட்டியிட்டார். அவரை 104,519 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி இவர் வெற்றி பெற்ரிருக்கிறார்.
டெப் ஹாலாண்டிற்கு 65 வயதாகிறது. இவர் மொத்தம் 57 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறார். இவர் ஏற்கனவே, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு தேர்வான முதல் இரு பூர்வக்குடி பெண்களில் ஒருவராகவும், ஜோ பைடன் அமைச்சரவையில் உள்நாட்டு துறை செயலாளராக பொறுப்பேற்று முதல் பூர்வக்குடி அமெரிக்கராகவும் சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் கருப்பின கவர்னர் : வெஸ்கான்சின்
விஸ்கான்சின் வரலாற்றின் முதல்முறையாக, கருப்பின ஆளுநராக டேவிட் கிரௌலி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர், 2026ஆம் ஆண்டு நடந்த விஸ்கான்சின் ஆளுநர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டாம் டிஃபனி என்பவரை தோற்கடித்து, வரலாற்று வெற்றியை பெற்றிருக்கிறார்.இதற்கு முன்னதாக, இவர் மில்வாக்கி கவுண்டி நிர்வாகியாக பதவி வகித்து வந்தார்.
நியூயார்க் மாநில சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பாலஸ்தீனிய-அமெரிக்கர்:
அபெர் கவாஸ் எனும் ஹிஜாப் அணியும் பாலஸ்தீனிய அமெரிக்க பெண் ஒருவர், முதல்முறையாக நியூயார்க் மாநில சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு, நியூயார்கின் மேயர் சோரான் மம்தானி முழு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
நியூயார்கின் ப்ரூக்லின் மாகாணத்தை சேர்ந்த இவர், பாலஸ்தீனில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த தம்பதியின் மகள் ஆவார். சமீபத்தில் ட்ரம்ப் தலைமையிலான அரசு குடி பெயர்ந்தவர்களின் மீது விதித்திருந்த பல்வேறு சட்ட விதிமுறைகளால் தானும் தன் குடும்பத்தினரும் சிரம்ப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.
முதல் திருநங்கை செனட்..
ஜார்ஜியா சட்டமன்றத்தில், வெளிப்படையாகத் தன்னை ஒரு திருநங்கை என்றும் Non-Binary என்றும் அறிவித்துக்கொண்ட முதல் மாநில சட்டமன்ற உறுப்பினராக பென்ட்லி ஹட்கின்ஸ் வெற்றி பெற்றுள்ளார். இவர் Samantha Boston எனும் குடியரசு கட்சியை சேர்ந்தவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்ரி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.