• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தீபாவளி அன்று கனமழை வெளுக்கும்! டெல்டா, தென் மாவட்டங்களுக்கு அலர்ட்.. வெதர்மேன் வார்னிங்

தீபாவளி அன்று கனமழை வெளுக்கும்! டெல்டா, தென் மாவட்டங்களுக்கு அலர்ட்.. வெதர்மேன் வார்னிங்

TN Weather Update on Diwali: தீபாவளி அன்று மழை பெய்யுமா என்பது குறித்து டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுளள்ளார். தீபாவளிக்கு டெல்டா, தென் மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

Written ByUmabarkavi K
Published: Nov 04, 2026, 05:20 PM IST|Updated: Nov 04, 2026, 05:33 PM IST
joinshare
தீபாவளி அன்று கனமழை வெளுக்கும்! டெல்டா, தென் மாவட்டங்களுக்கு அலர்ட்.. வெதர்மேன் வார்னிங்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தீபாவளிக்கு பின் ஊர் திரும்ப... சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - தென் மாவட்ட மக்களே நோட் பண்ணுங்க

தீபாவளிக்கு பின் ஊர் திரும்ப... சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - தென் மாவட்ட மக்களே நோட் பண்ணுங்க

2

செம மிஸ்ட்ரி த்ரில்லராக உருவாகியுள்ள ‘ஜான் டோ’! எப்போ ரிலீஸ்?

3

தீபாவளி அன்று கனமழை வெளுக்கும்! டெல்டா, தென் மாவட்டங்களுக்கு அலர்ட்.. வெதர்மேன் வார்னிங்

4

83 வயதில் உயிரை மாய்த்துக்கொண்ட எம்.ஜி.ஆர் பட நடிகை! திரையுலகினர் அதிர்ச்சி..

5

அக்னிவீர்களுக்கு மத்திய அரசின் மெகா அறிவிப்பு: சேவை காலம் 4 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாக உயர்வு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TN Weather Update on Diwali: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் அடுத்தடுத்து அர்னாப் மற்றும் முரசு புயல் உருவாகி, தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில், தீபாவளி அன்று மழை பெய்யுமா என்பது குறித்து டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் முக்கியமான அறிவிப்பை வெளிட்டுள்ளது.

தீபாவளி அன்று கனமழை பெய்யுமா?

இது தொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, இன்று (04.11.2026) காலை 8:30 மணி நிலவரப்படி ஈரோடு மாவட்டம் தல்குனி 9 செ.மீ, திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர், ஈரோடு மாவட்டம் திங்களூர், கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை தலா 8 செ.மீ மழை பதிவு. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் 6 செ.மீ மழை பதிவு.

தென்சீனக்கடலில் இருந்து ஈரப்பதமிகுந்த கீழைக்காற்று நவம் 6 முதல் 11ம் தேதி வரை தமிழகத்திற்கு வருகை தருகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கி,  சீரான கீழைக்காற்றின் முதல் வருகையாக இது அமையும். தமிழ்நாட்டில் இன்றும் (04.11.2026) & நாளையும் (05.11.2026) தெளிவான வானத்துடன் வெப்பமான சூழலும், ஆங்காங்கே திடிரென மேகம் சுழ்ந்து இடி,மின்னலுடன் கூடிய மழையும் பதிவாககூடும்.

வடகிழக்கு பருவமழையின் இரண்டாம் சுற்று மழை நவம்பர் 6ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு பரவலாகும் என எதிர்ப்பர்க்கப்படுகிறது. கடலோர மாவட்டங்கள்,காவிரி டெல்டா, தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், மேற்கு & மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் என மாநிலம் முழுதும் சீரான மழைப்பொழிவை இரண்டாம் சுற்று மழை கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நவம்பர் 7ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வைரை தீபாவளி தினம் உட்பட காவிரி டெல்டா, தென் மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ரியல் எஸ்டேட் பில்டர்களுக்கு புதிய விதிமுறை! அரசு கொடுத்த முக்கிய அப்டேட்

தீபாவளி பண்டிகைகால அறிவுறுத்தல்கள்

தற்போது ஆங்காங்கே பெய்து வரும் 2ம் சுற்று மழை நவ 6 முதல் 10 வரை பரவலாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த மழை தொடர் மழையாகவோ, அடை மழையாகவோ இல்லாமல் சீரான மழையாகவும்/விட்டு விட்டு பெய்யக்கூடிய மழை என்பதால் பண்டிகைகால கொண்டாட்டங்களை பாதிக்காது ஆனால் இடையூறு அளிக்கும்.

பண்டிகை கால பயணங்கள் மேற்கொள்பவர்கள் வெயில் அடித்தாலும் குடை, ரெயின் கோட்டுடன் வெளியில் செல்வது நல்லது. பண்டிகை கால வியாபாரிகள், புதிய வெடிக்கடைகள் அமைப்பவர்கள் திடிர் கனமழையில் பொருட்கள் நனையாதவாறு பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். நல்ல வெயில் அடித்தாலும் திடிரென மேகம் சூழ்ந்து 30-45 நிமிடம் கனமழை பெய்யும் என்பதால் கடை வியாபாரிகள் விழுப்புடன் இருக்க வேண்டும்.

தீபாவளி விடுமுறையில் வால்பாறை, சின்னக்கல்லாறு, ஏற்காடு, கொடைக்கானல், தேக்கடி, மூனாறு, உதகமண்டலம், குற்றாலம் போன்ற மலை தொடர்கள் செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் தாராளமாக செல்லலாம். செல்லும் போது மழை இடையூறு இருக்க கூடும், பயணத்தை பாதிக்கும் மழை இருக்காது. அருவிகளில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது. அர்னாப், முரசு என தொழிலுக்கு செல்லமுடியாமல் முடங்கிய மீனவர்களுக்கு நவ 10 வரை எந்தவித எச்சரிக்கையும் இல்லை மீன்பிடி தொழிலுமக்கு தாரளமாக சென்று வரலாம் என டெல்டா வெதர்மேன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: MLA-க்களை வாங்கும் டம்மி CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி சரமாரி கேள்வி..

இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்?

நவம்பர் 4ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். நவம்பர் 5ஆம் தேதி தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். நவம்பர் 6ஆம் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: ஆவின் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ்.. முதல்வர் விஜய் அறிவிப்பு!
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather