SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained : Shamando வைரஸ் என்றால் என்ன? முதன் முதலாக மனிதருக்கு தொற்று பரவியது எப்படி?

Shamando வைரஸ் எனும் நோய் தொற்று முதன் முதலாக பிரான்ஸில் இருக்கும் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்றின் பின்னணி என்ன? இதை பற்றி அனைவரும் பேசிக்கொண்டிருப்பது ஏன்? இதோ முழு விவரத்தையும் இங்கு பார்ப்போம்.

Written By Yuvashree M
Published: Oct 24, 2026, 01:28 PM IST | Updated: Oct 24, 2026, 01:37 PM IST
Join

பிரான்ஸ் நாட்டில், முதல் Shamando நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் தொற்று ஏற்பட்ட நபரும் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எப்போதும் மிருகங்களுக்கு மட்டுமே வரும் இந்த தொற்று, எப்படி இம்முறை மனிதனுக்கு வந்தது எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது.

Shamando Virus என்றால் என்ன?

Shamando நோய் தொற்று, முதன் முதலில் கால்நடைகளிடையே 1965ஆம் ஆண்டு நைஜீரியாவில் கண்டுபிடிக்கப்பட்டது என உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது. கால்நடைகளான செம்மறி ஆடுகள், ஆடுகள், குதிரைகள், அல்பாகா எனும் ஒட்டக இனத்தை சேர்ந்த ஒரு வகை விலங்குகள் உள்ளிட்டவையை மட்டுமே இந்த நோய் இதுவரை தாக்கி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட  மிருகங்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, குறைவான பால் சுரப்பு உள்ளிட்டவை அறிகுறிகளாக இருக்கும் என, உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், இந்த வைரஸ், புதிதாகப் பிறந்த கன்றுகளுக்கு பிறவிக் குறைபாடுகளையும் ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவருக்கு என்ன ஆனது?

Shamando Virus தொற்றால் முதன் முதலில் பாதிக்கப்பட்டவர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். இவரது பெயர், Lyon.அந்த நபருக்கு நோய் எதிர்ப்பு சக்தி கடுமையாகக் குறைந்திருந்ததுடன், அவர் ஏற்கனவே ஒரு தீவிரமான அடிப்படை நோய்க்காக சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. மேலும், இவர் இறக்கும் முன்பு பல்வேறு   நரம்பியல் சிக்கல்களால் பாதிக்கப்பட்டிருந்தார். இது குறித்து தகவல் தெரிவிக்கும் பிரான்ஸ் அதிகாரிகள், அவர் நோய் தொற்றை பரப்பும் Culicoides midge பூச்சியால் கடிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

தற்போது, ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ECDC) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) உள்ளிட்ட சுகாதார நிறுவனங்கள், அந்த வைரஸ் மரணத்தை நேரடியாக ஏற்படுத்தியதா அல்லது அதற்கு ஒரு காரணமாக அமைந்ததா என்பதைத் தீவிரமாக விசாரித்து வருகின்றன.

அந்நாட்டின் சுகாதார அதிகரிகள் இது குறித்து பேசுகையில், இந்த நோய் பாதிப்புக்கு உள்ளான ஒரு நபர்தான் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், இது ஒரு நபரில் இருந்து இன்னொரு நபருக்கு மாறும் என்பதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர். பொது மக்களுக்கும் இது குறித்த எந்த எச்சரிக்கையும் இவர்கள் இதுவரை விடுவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது..!

இந்த Shamando வைரஸ் நோய் தொற்று அதிகமாக ஆப்ரிக்கா மற்றும் ஜப்பானில் பரவும் என தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கடந்த வெயில் காலத்தின் போது ஐரோப்பாவின் தெற்கு ஜெர்மனி மற்றும் ஸ்விச்சர்லாந்தில் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு, ஆஸ்திரியா, பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பாவின் பிற பகுதிகளில் உள்ள விலங்குகளிலும் இது கண்டறியப்பட்டுள்ளது.

எப்படி பரவும்?

Culicoides Midge எனும், சிறிய அளவிலான பூச்சிக்கடியால், இந்த நோய் ஏற்படுவதாக இப்போது வரை நடைப்பெற்ற ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசும் உலக சுகாதார மையம், இந்த நோய் பரவல் குறித்து, இதனால் பாதிக்கப்பட்ட விலங்குகளை வைத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.

இதில் குறிப்பிடப்படவேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், கர்ப்ப காலத்தில் பாதிக்கப்பட்ட விலங்கிலிருந்து அதன் கருவிற்கு இந்த நோய் பரவுகிறதே அன்றி, இது விலங்கிலிருந்து விலங்கிற்குப் பரவுவதாக அறியப்படவில்லை.

மேலும் படிக்க | ஆய்வகத்தில் பாதரசத்தை தங்கமாக மாற்றிய ஸ்டார்ட்-அப்!! இனி தங்கம் விலை குறையுமா?

Shamando வைரஸ் தொற்றுக்கு மருந்து இருக்கிறதா?

இந்த Shamando வைரஸிற்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது பலருக்கும் பயத்தை ஏற்படுத்தும் விஷயமாக இருப்பினும். இருப்பினும், அதிகாரிகள், இறந்த நபர் ஏற்கனவே நாள்பட்ட நோய் காரணமாக சிகிச்சையில் இருந்ததால் அவருக்கு ஒரு சாதாரண நபரை விட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்ததாக ஐரோப்பாவின் நோய் தடுப்பு அராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் தொற்றுகள் விலங்குகளை விட மனிதர்களிடத்தில் பரவுவதில் பல வித்தியாசம் இருப்பதாக உலக விலங்கு சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. மேலும், ஆய்வகத்தில் தொற்றுப் பொருட்களைக் கையாளுவதற்குத் தேவைப்படும் உயிரியல் பாதுகாப்பு மற்றும் உயிரியல் தடுப்பு நடவடிக்கைகள் ஆகிய இரண்டையும் தீர்மானிப்பதற்காக, குறிப்பிட்ட இடர் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறியிருக்கிறது.

இதற்கு மருந்து இல்லை என்றாலும், இதை தவிர்க்கும் சில வழிகளை உலக விலங்கு சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இவற்றை தடுக்கும் விதத்தில், நுண்ணிய வலைத் திரைகள் மற்றும் இரட்டைக் கதவு நுழைவு மற்றும் வெளியேறும் அமைப்புகள் போன்ற தடைகள், நோய் பரவலை இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் குறைத்தல் அல்லது அகற்றுதல், கட்டிடங்களைச் சுற்றி நோய் பரவலை கண்காணித்து கட்டுப்படுத்துதல், விலங்குகளைக் கொண்டு செல்லும் போது பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்துதல், மற்றும் நோய் பரவலின் செயல்பாடுகள் குறைவாக உள்ள காலங்களில் விலங்குகளைக் கொண்டு செல்லுதல் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.

இதைப்பற்றி ஏன் அனைவரும் பேசி வருகின்றனர்?

உலகை இப்போது நாம் இருவகையாக பிரிக்கலாம். ’கொரோனா தொற்றுக்கு முன் கொரோனா தொற்றுக்கு பின்’ என்று. அந்த அளவிற்கு ஒவ்வொரு மனிதரையும் இந்த கொரோனா தொற்றும், அந்தந்த நாடுகள் இதற்காக போட்ட ஊரடங்குகளும் தனி மனிதரின் சிந்தனை, யோசிக்கும் திறன், பொருளாதார நிலை என பலவற்றை மாற்றியிருக்கிறது. இதன் விளைவாகத்தான், உலகின் எந்த மூளையில் நோய் தொற்று என்கிற செய்தி வந்தாலும், அது உலக தொற்றாக மாறிவிடுமோ எனும் கேள்வி அவர்களுக்குள் எழுகிறது.

இந்த நோய் தொற்று, இதுவரை கால்நடைகளுக்கு இடையே மட்டும்தான் இருந்தது. ஆனால், அவை இப்போது ஒரு மனிதரிடமும் பரவி, அவர் மடிந்தும் போயிருக்கிறார் என்பது பலர் மத்தியில் ஆச்சரியத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் ஒரு விஷயமாக இருக்கிறது. இதனால், இந்த நோய் தொற்று விஷயத்தில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கவலை கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க | சவுதி சட்டம்: பின்பற்ற வேண்டியவை என்னென்ன? எதற்கெல்லாம் தடை.. Explained

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES