• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் பரிசு: முன் பணம் பெறும் விதிமுறைகளில் முக்கிய மாற்றம்

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் பரிசு: முன் பணம் பெறும் விதிமுறைகளில் முக்கிய மாற்றம்

Tamil Nadu government employees : அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் பரிசு. கணினி, பைக், கார் முன்பணம் பெற இனி 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டாம். இந்த விதிமுறைகளில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Written ByKarthikeyan Sekar
Published: Oct 24, 2026, 02:11 PM IST|Updated: Oct 24, 2026, 02:20 PM IST
joinshare
அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் பரிசு: முன் பணம் பெறும் விதிமுறைகளில் முக்கிய மாற்றம்
Image Credit: Tamil Nadu government employees

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அப்டேட்

நீலகிரிக்கு ரெட் அலர்ட்... சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அப்டேட்

2

அரசு ஊழியர்களுக்கு அதிரடி எச்சரிக்கை: நேரடியாக மனு அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை!

3

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் பரிசு: முன் பணம் பெறும் விதிமுறைகளில் முக்கிய மாற்றம்

4

விவசாயிகளுக்கு மெகா தீபாவளி பரிசு: 50,000 புதிய இலவச மின் இணைப்புகள் வழங்க உத்தரவு!

5

மண் சரிவில் சிக்கிய அரசு பஸ்... ஓட்டுநர் பலி - ஊட்டிக்கு செல்ல தடை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu government employees : தமிழக அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கடன் மற்றும் முன்பணம் பெறும் நடைமுறைகளில் மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க தளர்வுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, கணினி, இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் வாங்குவதற்காக வழங்கப்படும் அரசு முன்பணத்தைப் பெறுவதற்கான தகுதிகள் கணிசமாக எளிமையாக்கப்பட்டுள்ளன. 2026-2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த திருத்தங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் பல்லாயிரக்கணக்கான இளம் அரசு ஊழியர்கள் நேரடியாகப் பயனடைவார்கள்.  

பணிக்காலத் தகுதியில் அதிரடி மாற்றம்:

இதுநாள் வரை நடைமுறையில் இருந்த விதிகளின்படி, நிரந்தர அரசுப் பணியாளர்கள் கணினி அல்லது வாகனம் வாங்குவதற்கான முன்பணம் பெற வேண்டுமென்றால், அவர்கள் குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் தொடர்ந்து அரசுப் பணியில் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. ஆனால், தற்போது இந்த 6 ஆண்டுகால பணிக்கால வரம்பு முழுமையாகத் தளர்த்தப்பட்டுள்ளது.  

புதிய விதிகளின்படி, பணியில் சேர்ந்து தகுதிகாண் பருவத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த அரசு ஊழியர்கள் அனைவரும் கணினி, பைக் மற்றும் கார் முன்பணம் பெற உடனடியாக விண்ணப்பிக்கலாம். இதனால் பணியில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே அரசு ஊழியர்கள் தங்களின் சொந்த வாகன மற்றும் கணினிக் கனவை எளிதாக நனவாக்கிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

அடுக்குமாடி படிவங்களுக்கு விடை:

முன்பு வாகன முன்பணம் பெற படிவம் 12, 13 மற்றும் 14 என தனித்தனி படிவங்களையும், கணினி முன்பணத்திற்கு படிவம் 1, 2, 3, 4 எனப் பல படிவங்களையும் நிரப்பிச் சமர்ப்பிக்க வேண்டிய அலைச்சல் இருந்தது. இந்த நடைமுறைச் சிக்கல்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இனி வாகன முன்பணத்திற்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே ஒரு படிவம் எண் 12 மட்டுமே போதுமானது. கணினி முன்பணத்திற்கு அதற்கான சிறப்பு இணைப்பு-1 மட்டும் சமர்ப்பித்தால் போதும் என விண்ணப்ப நடைமுறை மிகவும் சுருக்கப்பட்டுள்ளது.  

முழுக்க முழுக்க டிஜிட்டல் மயம்:

அரசு அலுவலகங்களில் காகிதப் படிவங்களை நேரில் சமர்ப்பித்து மாதக்கணக்கில் காத்திருக்கும் கைமுறை விண்ணப்ப முறை முழுமையாக மாற்றப்பட்டுள்ளது. இனி அரசு ஊழியர்கள் தங்கள் இருப்பிடம் அல்லது அலுவலகத்தில் இருந்தபடியே, கருவூலக் கணக்குத் துறையின் IFHRMS இணையதளம் மற்றும் களஞ்சியம் செயலி (e-Sevai) வழியாக ஆன்லைனிலேயே தங்களின் முன்பணக் கோரிக்கைகளை நேரடியாக விண்ணப்பிக்க முடியும். இதன் மூலம் விண்ணப்பங்களின் நிலை குறித்து வெளிப்படைத்தன்மையுடன் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.  

பட்ஜெட் முறையில் முக்கிய மாற்றம்

முன்பணத் தொகை விரைவாக ஊழியர்களுக்குச் சென்று சேர்வதை உறுதிசெய்யும் வகையில் நிர்வாக அமைப்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அந்தந்த வரைவு மற்றும் வழங்கல் அலுவலருக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட பட்ஜெட்டில் நிதி இருந்தால் மட்டுமே முன்பணம் கிடைக்கும் நிலை இருந்தது. ஆனால் இனி கருவூல கணக்குத் துறை இயக்குநர் நிலையில் மையப்படுத்தப்பட்ட பட்ஜெட்டில் இருந்து நிதி நேரடியாக விடுவிக்கப்படும். இதனால் நிதி பற்றாக்குறை அல்லது நிதி ஒதுக்கீட்டுத் தாமதம் இன்றி, ஊழியர்களின் கோரிக்கைகள் மிக வேகமாகப் பரிசீலிக்கப்பட்டு முன்பணத் தொகை விரைவாக வங்கிக் கணக்கிற்கு வந்து சேரும்.  

இந்த நடைமுறை மாற்றங்கள் அரசு ஊழியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், அவர்களின் பணிகளை மேலும் உற்சாகத்துடன் தொடர வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Add Zee News as a Preferred Source
TAGS:
TN Govt Schemes