• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /US Midterm Election: அமெரிக்க இடைக்காலத் தேர்தல் என்றால் என்ன? டிரம்புக்கு காத்திருக்கும் ஷாக்!

US Midterm Election: அமெரிக்க இடைக்காலத் தேர்தல் என்றால் என்ன? டிரம்புக்கு காத்திருக்கும் ஷாக்!

US Midterm Election 2026: அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு எப்படி தேர்தல் நடக்கும் என்பது குறித்து விரிவாக பார்ப்போம். மேலும், இத்தேர்தலில் டிரம்ப் கட்சி வெற்றி பெறுவதில் சவால்கள் உள்ளதாக கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Nov 01, 2026, 12:25 PM IST|Updated: Nov 01, 2026, 01:12 PM IST
joinshare
US Midterm Election: அமெரிக்க இடைக்காலத் தேர்தல் என்றால் என்ன? டிரம்புக்கு காத்திருக்கும் ஷாக்!
Image Credit: Image Source: Chatgpt

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரயில் பயணிகள் கவனத்திற்கு... மதுரை கோட்டத்தில் வழித்தடம் மாற்றம் - முழு விவரம்

ரயில் பயணிகள் கவனத்திற்கு... மதுரை கோட்டத்தில் வழித்தடம் மாற்றம் - முழு விவரம்

2

விராட் கோலி சொதப்பல்.. NZ ஒருநாள் தொடரில் விளையாடுவாரா? என்ன நடந்தது?

3

மின்வாரிய ஊழியர்களுக்கு போனஸ்! நவ.4-ல் அக்கவுண்டில் கிரெடிட் - முழு விவரம்

4

US Midterm Election: அமெரிக்க இடைக்காலத் தேர்தல் என்றால் என்ன? டிரம்புக்கு காத்திருக்கும் ஷாக்!

5

ஈரானுக்கு மீண்டும் குறிவைக்கும் டிரம்ப்? '10 நிமிட' கெடு.. கமேனி வார்னிங்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

US Midterm Election 2026: உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி நடந்து வரும் நிலையில், இடைக்காலத் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறுவது கவனம் பெறுகிறது. இத்தேர்தல் எப்படி நடைபெறும்? இத்தேர்வில் யார் வெற்றி பெற வாய்ப்பு? இந்திய வேட்பாளர்கள் விவரம் போன்றவற்றை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்

அமெரிக்காவில் நடக்கும் இடைக்காலத் தேர்தல் இந்திய இடைக்காலத்களில் இருந்து பெரிதும் மாறுப்பட்டது. இந்தியாவில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலமானலோ அல்லது பதவியை ராஜினாமா செய்தாலோ தான் இடைக்காலத் தேர்தல் நடக்கிறது. அந்தந்த தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் மட்டுமே வாக்களிப்பார்கள். ஆனால், அமெரிக்கா இதில் இருந்து முற்றிலும் வேறுபடுகிறது.

அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். அதிபரின் பதவிக்காலத்தில் இரண்டாவது ஆண்டின் முடிவில் இடைக்காலத் தேர்தல் (Midterm Election) நடக்கும். இந்த இடைத்தேர்தலில் மொத்த நாடும் வாக்களிக்கும். அமெரிக்காவில் இந்தியாவில் உள்ள மக்களவை/மாநிலங்களவை போல இரண்டு அவைகள் உள்ளன.  அதன்படி, உறுப்பினர் அவை (House Of Representative)  மற்றும் செனட் (Senate) என இரு  அவைகள் உள்ளன. இந்த இரு அவைகளில் உள்ள உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கவே இந்த தேர்தல் நடக்கிறது.

மேலும் படிக்க: ஈரானுக்கு மீண்டும் குறிவைக்கும் டிரம்ப்? '10 நிமிட' கெடு.. கமேனி வார்னிங்!

பிரதிநிதித்துவ அவை (House Of Representative)

அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில், மக்கள் தொகை அடிப்படையில் 435 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கும்.  உறுப்பினர் அவையில் மொத்தம் 435 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க அந்தந்த மாகாணங்களில் உள்ள மக்கள் வாங்களிப்பார்கள். இவர்களின் பதவிக் காலம் 2 வருடம் ஆகும். ஒவ்வொரு இரண்டு ஆண்டு முடிவிலும் மொத்தம்  கீழவைக்கும் (உறுப்பினர் அவை) தேர்தல் நடக்கும்.

செனட் அவை (Senate)

ராஜ்ய சபாவுக்கு இணையானது செனட் அவை. இச்சபையின் உறுப்பினர்கள், 50 மாநிலங்களுக்கு தலா 2 பேர் என்ற கணக்கில் மொத்தம் 100, மூன்று ‘வகுப்பாக’ (class) பிரிக்கப்படுவார்கள். செனட் அவைக்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கு நடைபெறும். செனட் அவை உறுப்பினர்களின் பதவிக்காலம்  ஆறு ஆண்டுகளாகும்.  2024 நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலின்போது, கூடவே செனட் அவையின் மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கான தேர்தல் நடந்தது. வரும் நவம்பரில் மீண்டும் கீழவைக்கு தேர்தல் நடக்கிறது.

மேலும் படிக்க: 53 vs 48... தேவை 61.. யாருக்கும் பெரும்பான்மை இல்லை இஸ்ரேலை ஆளப்போவது யார்? -தீர்மானிக்கும் அரபு கட்சிகள்

இடைக்காலத் தேர்தல் விவரம்

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் நாள் - நவம்பர் 3ம் தேதி வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு நேரம் - உள்ளூர் நேரப்படி, காலை 8 மணிக்கு துவங்கம். அமெரிகக் நேரப்படி காலை 6 மணிக்கு துவங்கி, மதியம் 1 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு. (ஒவ்வொரு மாகாணங்களிலும் வாக்குப்பதிவு நேரம் மாறுபடும்)

தேர்தல் முடிவுகள் - நவம்பர் 3ஆம் தேதியே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்

கட்சிகள் - குடியரசு கட்சி vs ஜனநாயக கட்சி

தேர்தல் நடக்கும் தொகுதிகள் - செனட் அவை - 35 இடங்கள், உறுப்பினர் அவை - 435  இடங்கள்

பெரும்பான்மை  -  பிரதிநிதிகள் சபையில் 435 இடங்களில் 218 இடங்கள், செனட் சபையில் 100 இடங்களில் 51 இடங்கள் தேவை

இடைக்காலத் தேர்தல் யாருக்கு சாதகம்?

இந்தியாவில் இடைத்தேர்தலில் பெரும்பாலும் ஆளும்கட்சியே வெற்றி பெறும். ஆனால், அமெரிக்காவில் அப்படி இல்லை.  ஜனாதிபதி தேர்தலில் ஜெயித்து ஆளும் கட்சி என்று குறிக்கப்படும் கட்சிக்கு எதிராகத் தான் முடிவுகள் இருக்கும். இந்த ஆண்டு இடைத்தேர்தலில் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்க வாய்ப்புள்ளது. ஜனாதிபதி மீதான அதிருப்திகள் இதன் முக்கியக் காரணம். அதற்காக இடைத் தேர்தலில் ஜெயித்த எதிர்கட்சி அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜெயிக்கும் என்றும் சொல்ல முடியாது.

2008-இல் மிகப் பெரிய வெற்றி அடைந்த ஒபாமாவும் அவர் கட்சியும் 2010 இடைத் தேர்தலில் மோசமானத் தோல்வியை சந்தித்தனர்,  இருந்தாலும் 2012ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி வாகை சூடினார். இருந்தாலும், இத்தேர்தலில் கடும் போட்டி இருக்கக் கூடும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அங்கிருக்கும் இந்தியர்கள், யூதர்களின் வாக்குகள் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சிக்கு பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது. இவர்கள் யாருக்கு வாக்காளர்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அதுவும் தற்போது டிரம்ப் மீது அதிருப்தி நிலவுவதாக செல்லப்படுகிறது. இதனால், டிரம்பின் குடியரசு கட்சி வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கருத்துக்கணிப்புகள் சொல்வது என்ன?

பெரும்பாலான கருத்துக் கணிப்பின்படி, இடைக்காலத் தேர்தலில் ஜனநாயக கட்சியினர் பிரநிதித்துவ சபையை கைப்பற்றுவார்கள் என கூறப்பட்டுள்ளது. செனட் சபையை ஜனநாயக கட்சியினர் கைப்பற்ற 60 சதவீதம் வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிரம்ப் மீது உள்ள அதிருப்தி  இந்த இடைத்தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் கூறுகின்றனர். 

அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஜனநாயக கட்சி முன்னிலை வகுத்து வருவதாக கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில் டிரம்ப்புக்கு 50 சதவீதத்திற்கு குறைவாக ஆதரவு குறைந்துள்ளது. கருத்துக்கணிப்புகள் தேர்தல் முடிவுகளாக இருந்தாலும், அமெரிக்க அரசியலில் பெரும் பூதாகரம் வெடிக்கும். அதுவும் 2028ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கும் நேரத்தில், அவர் கட்சி தோல்வி அடைவது சவாலானதாக இருக்கும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க: இஸ்ரேலில் ஆட்சி அமைக்கும் புதிய திட்டம்: எதிர்க்கட்சியுடன் கைகோர்க்கும் நெதன்யாகு?

இடைக்காலத் தேர்தலில் கவனம் பெற்ற பிரச்னைகள்

  • அமெரிக்காவில் விலைவாசியும், பணவீக்கம் தொடர்ந்து அதிகமாக இருப்பது. இதற்கு காரணம் ட்ரம்ப் ஈரான் மீது தொடந்து நடத்தும் போர் தான்.
  • அமெரிக்கா இறக்குமதி செய்யும் பல பொருட்கள் மீது வரி விதிப்பு
  • ஏரிபொருள் விலையின் உயர்வு
  • குடியேற்றத்தில் கட்டுப்பாடுகள்
  • எச்-1பி விசாவில் உள்ள சிக்கல்கள்

இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் யார்?

அமெரிக்கா இடைக்காலத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் போட்டியிடுகின்றனர். இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் கலிபோர்னியா, வாஷிங்டன், வர்ஜீனியா, அரிசோனா, புளோரிடா, டெக்சாஸ், ஓஹியோ, நியூயார்க் மற்றும் மேரிலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிடுகின்றனர். டெக்சாஸ், புளோரிடா, அரிசோனா, ஓஹியோ, நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய பகுதிகளில் பல இந்திய அமெரிக்கர்கள் களத்தில் உள்ளனர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களான ரோ கன்னா, பிரமீளா ஜெயபால், அமி பெரா மற்றும் சுஹாஸ் சுப்ரமணியம் ஆகியோர் அமெரிக்க பிரநிதித்துவ சபை உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer