SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அச்சுறுத்தும் ஏஐ.. பீதியில் ஐடி ஊழியர்கள்.. விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்த கூகுள்!

Google Voluntary Exit Package: உலக நாடுகளில் டெக் நிறுவனங்கள் பணிநீக்கம் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், முன்னணி டெக் நிறுவனமான கூகுள் விருப்ப ஓய்வு திட்டத்தை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written By Umabarkavi K
Published: Nov 05, 2026, 04:56 PM IST | Updated: Nov 05, 2026, 05:04 PM IST
Join

Google Voluntary Exit Package: இந்தியா உட்பட பல்வறு நாடுகளில் வேலைவாப்பின்மை உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு வருகையால் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. ஏஐ தொழில்நுட்பத்தால் எவ்வளவோ நன்மைகள் இருந்தாலும், அதே நேரத்தல், கட்டுப்பாடற்ற ஏஐ வளர்ச்சியால் வரும் காலங்களில் மனித குலத்திற்கே ஆபத்தாக அமையும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுகிறார்கள்.  

தொடரும் பணிநீக்கம் நடவடிக்கை

குறிப்பாக, வேலைவாய்ப்புத்துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக ஐடி துறையில் ஏஐ வருகையால் லட்சக்கணக்கனோர் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் மைக்ரோசாப்ட் நறுவனம் 60 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது. 

இதில், இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா இருந்த ஊழியர்கள் அனைவருக்கு இந்த விருப்ப ஓய்வு திட்டம் பொருந்தும் என அறிவித்தது. இது ஐடி ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது கூகுள் நிறுவனம் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. டெக் துறையில் முன்னிணி நிறுவனமாக செயல்பட்டு வரும், கூகுள் நிறுவனம் இந்த முடிவை எடுத்திருப்பது டெக் துறையில் பணியாற்றும் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருப்ப ஓய்வு அறிவித்த கூகுள் நிறுவனம்

மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகுள் போன்ற பிற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களைப் போலவே, மெட்டா நிறுவனமும் பிரான்சில் உள்ள தனது ஊழியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்குப் பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு அல்லது வெளியேறும் தொகுப்புத் திட்டத்தை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.  இதனை பிரெஞ்சு ஊடகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா, பிரான்சில் உள்ள தனது கிளையில் பணியாற்றும் சுமார் 300 ஊழியர்களில், தோராயமாக 100 பேரை வெளியேற்ற பரிசீலித்து வருகிறது.

பிரான்ஸ் நாட்டு வேலைவாய்ப்பு விதிகளின்படி, நிறுவனங்களும் ஊழியர்களும் பரஸ்பர சம்மதத்துடன் பணியை விட்டு விலக அனுமதிக்கக் கூடிய கூட்டு ஒப்பந்த முறை (RCC) மூலம் இந்த வெளியேற்றங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கையின்படி , அறிக்கைகளின்படி, இந்த முன்மொழிவு ஜூலை மாதம் முதல் விவாதத்தில் இருந்து வருகிறது. இதில் பங்கேற்க விரும்பும் ஊழியர்கள் நவம்பர் 5-ஆம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.  

5 நாடுகளில் கூகுளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பணியாற்றுவர்களுக்கு இது பொருந்தும் என கூறப்படுகிறது. இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை கூகுள் நிறுவனத்தில் எத்தனை பேர் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது குறித்த எந்த விவரங்களும் வெளியாகவில்லை.

கூகுள் விருப்ப ஓய்வு திட்டம் என்ன?

இழப்பீட்டுத் தொகை விவரங்கள்: கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை விருப்ப ஓய்வு பெற்றுச் செல்ல ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த  நிறுவனத்தில் பணியாற்றிய ஒவ்வொரு ஆண்டுக்கும் 2 மாதச் சம்பளம் இழப்பீடாக வழங்கப்படவுள்ளது.

சம்பளத்துடன் கூடிய விடுப்பு: மேலும், ஊழியர்களுக்கு 10 மாதங்கள் வரை சம்பளத்துடன் கூடிய தொழில் மாற்ற விடுப்பு (career transition leave) வழங்கப்படலாம். இந்தக் காலத்தில் அவர்களுக்கு மொத்தச் சம்பளத்தில் 80 சதவீதம் வழங்கப்படும்.  

கூடுதல் உதவிகள்: புதிய தொழில் தொடங்க உதவி செய்தல் மற்றும் மறுபயிற்சி வாய்ப்புகள் போன்ற கூடுதல் உதவிகளையும் வழங்க நிறுவனம் பரிசீலித்து வருகிறது.  

இது குறித்து பிரான்ஸ் வர்த்தக நாளிதழான Les Echos நிறுவனம் தொடர்பு கொண்டு கேட்டபோது, மெட்டா நிறுவனத்தின் பிரான்ஸ் கிளை இந்தத் திட்டம் குறித்த தகவல்களுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டதாக கூறிப்பிடப்பட்டுள்ளது.

ஏஐ பிரிவு ஊழியர்களுக்கு விலக்கு

கூகுள் கொண்டுவந்துள்ள விருப்ப ஓய்வுத் திட்டம் அதன் அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தாது. ஊழியர்கள் பணிபுரியும் நாடு, துறை மற்றும் அவர்களின் பொறுப்பைப் பொறுத்தே இதற்கான தகுதி தீர்மானிக்கப்படுகிறது. இந்த சர்வதேசத் திட்டம் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் பல பிரிவுகளுக்கு இது பொருந்தினாலும், கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சிப் பிரிவான 'டீப்மைண்ட்' (DeepMind) இதில் சேர்க்கப்படவில்லை.

கூகுள் கிளவுட் (Google Cloud) மற்றும் டீப்மைண்ட் ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட விருப்ப ஓய்வுச் சலுகைகளிலும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. செயற்கை நுண்ணறிவு மற்றும் மேகக்கணிமை (Cloud Computing) துறைகளில் மைக்ரோசாஃப்ட் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிட இந்த இரு பிரிவுகளுமே கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டுக்கு (Alphabet) மிக முக்கியமானவை என்பதால் இவை விலக்கி வைக்கப்பட்டுள்ளன.  மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடர்ந்து, கூகுள் எடுத்த விருப்ப ஓய்வு திட்ட முடிவு  ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் என்ன?

உலகளவில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், செலவுகளைக் கட்டுப்படுத்தவும் செயல்பாடுகளைச் சீரமைக்கவும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கி ஆள் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறு சேமிக்கப்படும் நிதியை, செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பப் பிரிவுகளில் முதலீடு செய்ய இந்நிறுவனங்கள் முன்னுரிமை அளித்து வருகின்றன என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றன.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES