• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /காசிமேடு மீனவர்கள் மாயமான விவகாரம்! ஆந்திராவில் ஒதுங்கிய 6 பேரின் சடலம்..

காசிமேடு மீனவர்கள் மாயமான விவகாரம்! ஆந்திராவில் ஒதுங்கிய 6 பேரின் சடலம்..

சென்னை காசிமேட்டில் இருந்து விசைப்படகில், ஓட்டுநர் சூர்யா உள்ளிட்ட 9 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட புயலில் சிக்கிய அவர்கள், விசைப்படகுடன் மாயமாகியுள்ளனர்.

Written ByYuvashree M
Published: Nov 05, 2026, 03:39 PM IST|Updated: Nov 05, 2026, 03:47 PM IST
joinshare
காசிமேடு மீனவர்கள் மாயமான விவகாரம்! ஆந்திராவில் ஒதுங்கிய 6 பேரின் சடலம்..
Image Credit: Tamil Fishermen Body In Andhra | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
காசிமேடு மீனவர்கள் மாயமான விவகாரம்! ஆந்திராவில் ஒதுங்கிய 6 பேரின் சடலம்..

காசிமேடு மீனவர்கள் மாயமான விவகாரம்! ஆந்திராவில் ஒதுங்கிய 6 பேரின் சடலம்..

2

ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தில் தமிழ்நாடு முதலிடம்: நிதி ஆயோக் அறிக்கை

3

சிஎஸ்கே கலீல் அகமது, எல்லிஸை கழட்டிவிட்டது சரியா? லிவிங்ஸ்டன் தேவையா?

4

இந்தியா விசா விதிகளில் பெரிய மாற்றம்: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய அரசின் புதிய திட்டம்

5

Explained : 28 ஆண்டுகள் நடந்தே உலகை சுற்றிய நபர்! ஒரு வழியாக வீடு திரும்பியது எப்படி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வரகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், ஓட்டுநர் சூர்யா உள்ளிட்ட 9 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட புயலில் சிக்கிய அவர்கள், விசைப்படகுடன் மாயமாகினர்.

காணாமல் போன மீனவர்கள்..!

காணாமல் போன 9 மீனவர்களையும் விரைந்து மீட்கக் கோரி, அவர்களது குடும்பத்தினர் காசிமேடு மீன்பிடித் துறைமுக காவல் நிலையம் மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.

ஆனால், மூன்று நாட்களைக் கடந்தும் மீனவர்கள் குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால், அவர்களது குடும்பத்தினர் கடும் வேதனையடைந்துள்ளனர். இதனால், அதிகாரிகள் இந்த விவகாரத்தில் அலட்சியமாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, காசிமேடு காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

ஆந்திராவில் கரை ஒதுங்கிய சடலங்கள்!

விவரங்களின்படி, காசிமேட்டை சேர்ந்த படகு ஓட்டுநர் சூர்யா (49), குப்பன் (48), மோகன் (47), ராஜேஷ் (52), முருகன் (48), குப்புசாமி (58), விஜயகாந்த் (44), அரவிந்த் (40), கரலூரை சேர்ந்த நாராயணன் (57) உள்ளிட்டோரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க | அகவிலைப்படி 7% உயர்வு: தீபாவளிக்கு முன் தமிழக ஓய்வூதியர்களுக்கு அரசின் சூப்பர் பரிசு!

ஆந்திராவின் கோத்தப்பட்டினம் பள்ளிப்பாலம் கடற்கையில், மீனவர்கள் 6 பேரின் உடல்கள் கரை ஒதுங்கி இருக்கிறது. இதில், மோகன் என்பவரின் உடல் மட்டுமே தற்போது அடையாளம் காணப்பட்டிருக்கிறது. மீதி 5 பேரின் உடல் அடையாளம் காணப்பட்ட பிறகே, மீனவர்களின் விபரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாயமான 3 மீனவர்களின் உடல்களை தேடும் பணியில், இந்திய கடலோர் காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

உறவினர்கள் கதறல்..!

மீனவர்களின் குடும்பத்தினர் முன்னர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த போது, “எங்களது குடும்பத்தினர் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்பதுகூட தெரியாமல் கடந்த மூன்று நாட்களாகத் தவித்து வருகிறோம். எங்களது துயரத்தைப் புரிந்துகொள்ள எந்த மீனவர் சங்கத்தினரும் எங்களைச் சந்திக்கவில்லை. மீன்வளத்துறை அமைச்சர்கூட இதுவரை எங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை. அந்த ஒன்பது பேரும் எங்களது குடும்பத்தினருக்கு மட்டும்தான் உயிரானவர்களா?" எனக் கண்ணீருடன் கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையே, மாயமான மீனவர்களின் இரண்டு உடல்கள் ஆந்திர மாநிலம் கோட்டகுப்பம் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், மீனவர்களின் குடும்பத்தினர் மேலும் அதிர்ச்சியடைந்து கதறி அழுதது அங்கிருந்தவர்களின் நெஞ்சையும் உருக்கியது.

இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மீன்வளத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | CM விஜய்க்கு பாதுகாப்பு பணி.. பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட எஸ்ஐ.. அதிர்ச்சி சம்பவம்!

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu