நடிகர், சில நாட்களுக்கு முன்பாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, ரசிகர்கள் மத்தியில் பேசுகையில் “கண்டிப்பா உங்களுக்கு தீபாவளி ட்ரீட் இருக்கு..” என்று கூறினார். இதனால், தீபாவளியை முன்னிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘அரசன்’ படத்தின் The World Of Arasan ப்ரமோ வீடியோ ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களின் ஆசை இந்த தீபாவளியில் நிராசையாகவே போயுள்ளது.
The World Of Arasan ப்ரமோவில், சிம்பு, விஜய் சேதுபதி உள்படம், அரசன் படத்தில் இடம்பெற்றுள்ள அனைவருக்கும் என்னென்ன கதாப்பாத்திரம், அரசன் படத்தில் என்னென்ன இருக்கும்? படப்பிடிப்பு காட்சிகள் உள்ளிட்டவை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடசென்னை யுனிவர்சில் ஒரு கதையாக அரசன் படம் இருப்பதால், வெற்றிமாறன் எங்கு சென்றாலும் வடசென்னை 2 அப்டெட் கேட்பதோடு, அரசன் படத்தின் அப்டேட்டையும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால், வடசென்னை 2 படத்தை ஆரம்பிப்பதில் இருக்கும் அதே தாமதம், அரசன் படத்தின் அப்டேட்டுகளை வெளியிடுவதிலும் இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறனர்.
தீபாவளிக்கு ரசிகர்களை மகிழ்விக்க இருந்த world of arasan வீடியோ, இப்போதைக்கு போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் காரணமாக வெளிவராது என்று கூறப்படுகிறது. இது எவ்வளவு நாள் தள்ளிப்போகும், எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த அறிவிப்புகள் இனி தான் வெளியாகும்.
சிம்பு நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் திரைப்படம், அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைப்பெற்று வருவதையொட்டி, இதில் ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர் எனும் அறிவிப்பு வெளியானது.
அரசன் முன்னோட்ட வீடியோ, எடிட்டிங் மற்றும் டப்பிங் பணிகள் முடிந்து, குறிப்பிட்ட 100 திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்கப்பட்டது. 8 நிமிடம் ஓடக்கூடிய அந்த விடியோவின் ஃபைனல் அவுட்புட் இன்னும் கொடுக்கப்படாமல் இருப்பதால், இந்த வீடியோ இன்னும் வெளியாகவில்லை எனும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.