SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Tamil Nadu By Election Voting Live: இடைத்தேர்தல்... மதுராந்தகத்தில் 15.99% வாக்குகள் பதிவு; தாராபுரத்தில் 17.55 % வாக்குகள் பதிவு

Tamil Nadu Bypolls 2026 Voting Live Updates: தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் இன்று (அக்டோபர் 6) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மேலும், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது . இடைத்தேர்தல் தொடர்பான முக்கிய அப்டேட்ஸை இங்கு காணலாம்.

Written By Umabarkavi K
Published: Oct 06, 2026, 07:00 AM IST | Updated: Oct 06, 2026, 09:38 AM IST
Join

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதனை அடுத்து, இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது. தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட் என 5 முனைப்போட்டி நிலவுகிறது. இதில், மதுராந்தகததில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில்  கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் சார்பில் சுகந்தி, நாம் தமிழர் சார்பில் ஜானகிராமன் போட்டியிடுகின்றனர். தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய  கம்யூன்ஸ்ட் சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் சார்பில் கார்த்திகா போட்டியிடுகின்றனர். இந்த நிலையில, இன்று மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. 

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. மாலை 6 மணி வரையிலும் வாக்காளர்கள் வாக்களிக்கலாம். இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதே போல, புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடக்கிறது. இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்த நிலையில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிய்ல என்ஆர் காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த், காங்கிரஸ் சார்பில் விநாயகம், திமுக சார்பில் சேதுசெல்வம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அ.மு.சலீம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  எனவே, இடைத்தேர்தல் தொடர்பான முக்கிய அப்டேட்ஸை இங்கு காணலாம். 
 

06 Oct 2026, 9:28 AM
Tamil Nadu By Election Voting Live: சித்தரிக்கப்பட்ட வீடியோ - சத்தியபாமா

தான் பேசியதாக வீடியோ ஒன்று வெளியானது குறித்து தவெக வேட்பாளர் சத்தியபாமா விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோ உண்மையில்லை என்றும் அது சித்தரிக்கப்பட்ட வீடியோ. மக்கள் தெளிவாக உள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்காது என தெரிவித்துள்ளார்.

06 Oct 2026, 9:11 AM
Diwali Bonus News: அரசு ஊழியர்களுக்கு Good News?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2026 தீபாவளி போனஸ் தொடர்பாக முக்கிய எதிர்பார்ப்பு. ரூ.7,000 உச்சவரம்பு ரூ.21,000 ஆகுமா? போனஸ் எப்போது கிடைக்கும்? முழு தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்... (மேலும் படிக்க)

06 Oct 2026, 8:56 AM
Tamil Nadu By Election Voting Live: மதுராந்தகம் தொகுதி தேர்தல் அலுவலர் பேட்டி

எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியா நடந்து வருகிறது. வாக்குச்சாவடிகளில் எல்லா அடிப்படை வசதிகளும் செய்துள்ளோம் என்று வாக்குப்பதிவு நிலவரத்தை பார்வையிட்ட பின் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரும், மதுராந்தகம் தொகுதி தேர்தல் அலுவலருமான எம்.விரப்பன்  பேட்டி அளித்துள்ளார்.

06 Oct 2026, 8:44 AM
Tamil Nadu By Election Voting Live: தவெக வேட்பாளர் சத்தியபாமா வாக்களித்தார்

தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா தனது வாக்கினை செலுத்தி இருக்கிறார். தாராபுரம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.

06 Oct 2026, 8:26 AM
Tamil Nadu By Election Voting Live: தாராபுரம் அதிமுக கோட்டை

தாராபுரம் அதிமுக கோட்டை என தாராபுரம் அதிமுக வேட்பாளர் பானுமதி தெரிவித்துள்ளார். தாராபுரம் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடந்து வரும் நிலையில், தனது வாக்கினை செலுத்திய அவர், இவ்வாறு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

06 Oct 2026, 7:59 AM
Tamil Nadu By Election Voting Live: தாராபுரத்தில் திமுகவின் வெற்றி உறுதி

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவில் வெற்றி உறுதி என திமுக வேட்பாளர் சுகன்யா பேட்டி அளித்துள்ளார். தனது வாக்கினை செலுத்திய பிறகு, செய்தியாளர்களுக்கு இவ்வாறு பேட்டி  அளித்துள்ளார்.

06 Oct 2026, 7:40 AM
Tamil Nadu By Election Voting Live: முதல் ஆளாக வந்து வாக்கினை பதிவு செய்த சுகன்யா

தாராபுரத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய உள்ள நிலையில், முதல் ஆளாக வந்து தனது வாக்கினை திமுக வேட்பாளர் சுகன்யா செலுத்தி இருக்கிறார். மேலும், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

06 Oct 2026, 7:12 AM
Tamil Nadu By Election Voting Live: வேட்பாளர்கள் விவரம்

மதுராந்தகததில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில்  கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் சார்பில் சுகந்தி, நாம் தமிழர் சார்பில் ஜானகிராமன் போட்டியிடுகின்றனர். 

தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய  கம்யூன்ஸ்ட் சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் சார்பில் கார்த்திகா போட்டியிடுகின்றனர். 

 

06 Oct 2026, 7:10 AM
Tamil Nadu By Election Voting Live: வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் என்ன செய்யலாம்?

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இன்று (அக்டோபர் 6) வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம். (மேலும் படிக்க)

06 Oct 2026, 7:08 AM
Puducherry By Election Voting Live: தட்டாஞ்சாவடியில் வாக்குப்பதிவு துவங்கியது

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இன்று (அக்டோபர் 6) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. காலையிலேயே வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் தங்கள் வாக்குகுளை செலுத்தி வருகின்றனர். 

06 Oct 2026, 7:07 AM
Tamil Nadu By Election Voting Live: இருதொகுதிகளிலும் எத்தனை வாக்குச்சாவடிகள்?

மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடி மையங்களும், தாராபுரத்தில் 320 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மதுராந்தகம் தொகுதியில் 60 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. தாராபுரத்தில் 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இதனால், அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

06 Oct 2026, 7:03 AM
Tamil Nadu By Election Voting Live: இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து, தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES