• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம்: 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் வாக்குப்பதிவு தீவிரம்

தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம்: 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் வாக்குப்பதிவு தீவிரம்

Bypolls: இன்று மூன்று மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு இது முதல் முக்கிய சோதனையாக அமைவதால், இந்த இடைத்தேர்தல் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

Written BySripriya Sambathkumar
Published: Oct 06, 2026, 09:52 AM IST|Updated: Oct 06, 2026, 09:57 AM IST
joinshare
தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம்: 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் வாக்குப்பதிவு தீவிரம்
Image Credit: Social Media / Bypolls for 6 seats across India

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
IGNOU பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு: கை நிறைய சம்பளம்..... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

IGNOU பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு: கை நிறைய சம்பளம்..... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

2

தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம்: 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் வாக்குப்பதிவு தீவிரம்

3

தீபாவளி Jackpot? அரசு ஊழியர்களுக்கு ரூ.21,000 போனஸ்? வெளியான முக்கிய தகவல்!

4

8வது ஊதியக் குழு: மாத பென்ஷன் ரூ.68,234 ஆக உயருமா? குஷியில் ஓய்வூதியதாரர்கள்

5

தாராபுரம் வாக்காளர்களுக்கு சேலை, காமாட்சி விளக்கு.. பகீர் கிளப்பிய திமுக.. தவெக விளக்கம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

India Bypolls: தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் இன்று இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன. இந்த தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவும் அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். இந்த இடைத்தேர்தல்கள் ஆளும் கூட்டணிகளையும் எதிர்க்கட்சிகளையும் சோதிக்கும் ஒரு பலப்பரிட்சையாக இருக்கும் என்பது உறுதி.

5 சட்டமன்றத் தொகுதிகள், ஒரு மக்களவைத் தொகுதி

இன்று மூன்று மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன:

  • தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகள், 
  • புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி, 
  • மேற்கு வங்கத்தில் ரெஜினகர் மற்றும் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 
  • அசாமில் நாகான் மக்களவைத் தொகுதி

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு இது முதல் முக்கிய சோதனையாக அமைவதால், இந்த இடைத்தேர்தல் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. இடைத்தேர்தல் முடிவுகள் அக்டோபர் 9-ஆம் தேதி அறிவிக்கப்படும்.

மேலும் படிக்க | நடுவானில் மரண பயம்: 34,000 அடியில் கோடரி தாக்குதல்... 170 பயணிகள் உயிர் தப்பியது எப்படி? Flydubai FZ1073 Explainer!

முதல்வர் விஜய்யின் முதல் பெரிய சவால்

தமிழகத்தில் உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில், இரண்டு அதிமுக எம்எல்ஏக்கள் ஆளும் தவெக கட்சிக்கு மாறியதைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தவெக: இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக கட்சி யாரும் எதிர்பாராத வண்ணம் ஒப்பீட்டளவில் பெரும்பான்மையைப் பெற்றாலும், ஆட்சியமைக்கத் தேவையான எண்களைப் பெற முடியாமல் போனது. அதன் பின்னர் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், தேர்தல் சதுரங்கத்தில் இந்த இடைத்தேர்தல் ஆளும் தவெக அரசுக்கு முதல் முக்கிய சவாலாக இருக்கும்.

திமுக: இதற்கு முன் ஆளும் கட்சியாக ஆட்சியில் இருந்த திமுக-வைப் பொறுத்தவரை இது ஒரு முக்கியமான இடைத்தேர்தல். சட்டமன்ற தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய பின், மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க இந்த தேர்தலை திமுக வெகுவாக நம்பியுள்ளது.

அதிமுக: அதே சமயம், இன்று இடைத்தேர்தல் நடைபெறும் இரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று, அதன் பிறகு அதன் வேட்பாளர்கள் தவெக-வுக்கு மாறியுள்ளனர். ஆகையால், இரு தொகுதிகளில் கிடைத்த வெற்றி வேட்பாளர்களுக்கு கிடைத்த வெற்றி அல்ல, மாறாக கட்சிக்கு கிடைத்த வெரற்றி என்பதை அதிமுக நிரூபிக்க காத்துக்கொண்டிருக்கிறது.

புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்

புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல், நான்கு மாதங்களே ஆன தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய சோதனையாகக் கருதப்படுகிறது. ஆளும் கட்சியின் பலத்தையும், பரந்த அளவிலான தேர்தல் வெற்றியைத் தொகுதி அளவிலான வெற்றிகளாக மாற்றும் அதன் திறனையும் சோதிக்கும் களமாக இந்த இடைத்டேர்தல் உருவெடுத்துள்ளது.

மேலும் படிக்க | இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த மாணவி! யார் இந்த நேஹா போரா?

மேற்கு வங்கத்தில் கௌரவப் போட்டி

முன்னதாக மே மாதம் நடைபெற்ற தேர்தலில், முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸை (TMC) எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக, மொத்தம் உள்ள 294 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. நந்திகிராம் தொகுதி சுவேந்து அதிகாரி (தற்போது பாஜகவில் உள்ளார்) பதவி விலகியதாலும், ரெஜினகர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸின் தலைவரான ஹுமாயூன் கபீர் விலகியதாலும் காலியாகின.

மேற்கு வங்க ஆளும் கட்சிக்கு இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானது என்றாலும், தேர்தலில் தோல்வியடைந்த மற்றும் பெரும் உட்கட்சிப் பூசலைச் சந்தித்து வரும் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இது ஒரு முக்கிய சோதனையாக அமையும்.

நந்திகிராமில், மம்தா பானர்ஜி நிறுத்திய வேட்பாளர் விலகியதைத் தொடர்ந்து, காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானுக்கு அவர் ஆதரவு அளித்தார். ரிதாப்ரதா பானர்ஜி தலைமையிலான பிரிவினரும் தேர்தலில் போட்டியிடுவதால், முன்னாள் முதல்வருக்கு இந்த இடைத்தேர்தல் சவால்கள் நிறைந்ததாக உள்ளது. இந்த தேர்தலின் மூலம் மாநில அரசியலில் தனது முக்கியத்துவத்தை நிரூபிப்பதோடு, திரிணாமுல் காங்கிரஸின் அசைக்க முடியாத தலைவராகவும் தன்னை நிலைநிறுத்த மம்தா பானர்ஜி முயன்று வருகிறார்.

அசாமில் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல்

ஏப்ரல் மாதத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலோய் பதவி விலகியதைத் தொடர்ந்து, அசாமின் நாகோன் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

மேலும் படிக்க | Explained : LGBTQ இன்ஸ்டா இன்ஃப்ளுவன்சர் சுட்டுக்கொலை! பஞ்சாப்பில் பரபரப்பு..என்ன நடந்தது?

Add Zee News as a Preferred Source
TAGS:
Election
India