/Tamil News LIVE: அபிஜித் தீப்கே, துருவ் ராத்தீ கைது - டெல்லி CJP போராட்டம்; சென்னை வரும் ராகுல்
Live Now
Tamil News LIVE: அபிஜித் தீப்கே, துருவ் ராத்தீ கைது - டெல்லி CJP போராட்டம்; சென்னை வரும் ராகுல்
Today News Live Updates: இன்று சென்னை வரும் ராகுல் காந்தி, முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பேச இருக்கிறார். டெல்லி ஜந்தர் மந்தரில் CJP சார்பில் போராட்டம் நடைபெற இருக்கிறது. இதுபோன்ற முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள ஜீ நியூஸுடன் இணைந்திருங்கள்..
8வது ஊதியக் குழு நவம்பர் 3, 2025 அன்று அமைக்கப்பட்டது. இக்குழு தனது பரிந்துரைகளைத் தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்க 18 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், குழுவின் அறிக்கை 2027-ஆம் ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்திற்குள் வெளியாக வாய்ப்புள்ளது... (மேலும் படிக்க)
10 Oct 2026 11:09 IST (IST)
ஸ்தம்பித்த டெல்லி!!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சனிக்கிழமையன்று ஜந்தர் மந்தரில் 'கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி' (CJP) நடத்தவுள்ள போராட்டத்தை முன்னிட்டு, 35,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) வீரர்களைப் பணியில் அமர்த்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் எவ்வளவு பேர் பங்கேற்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன... (மேலும் படிக்க)
10 Oct 2026 11:09 IST (IST)
விமானத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்ட அபிஜீத் திப்கே
போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து டெல்லி வந்த அபிஜீத் திப்கேவை விமானத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை தடுப்பு காவலில் போலீசார் வைத்துள்ளனர்.
10 Oct 2026 11:07 IST (IST)
சென்னையில் சூப்பர் வேலை
மிழ்நாடு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்குநரகம், தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்புச் சங்கம் (TNSCPS), மாநில தத்தெடுப்பு வள முகமை (SARA) மற்றும் WCD கட்டுப்பாட்டு அறை - குழந்தைகள் உதவி எண் ஆகியவற்றின் கீழ் 9 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது... (மேலும் படிக்க)
10 Oct 2026 10:57 IST (IST)
Tamil News Live : துருவ் ராத்தீ, அபிஜித் தீப்கே கைது
டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி கட்சியினர் போராட்டம் அறிவித்திருக்கும் நிலையில், பிரபல யூ-ட்யூபர் துருவ் ராத்தீ குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே டெல்லி விமான நிலையத்தில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். (மேலும் படிக்க)
நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
சென்னை தீவுத் திடலில் இன்று 10 ஆயிரம் மாணவர்கள் முன்னிலையில் ராகுல் காந்தி பேச இருக்கிறார். இதையடுத்து அவர் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து பேச இருக்கிறாராம். இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் CJP போரட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில், இன்று அக்கட்சி போரட்டத்தை மேற்கொள்ள இருக்கிறது. திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை தருவதை முன்னிட்டு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றியை பெற்றது.