முதல்வர் விஜய், இன்று தாராபுரத்தில் 30 கி.மீ தூரத்திற்கு ரோட் ஷோ பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் தாராபுரத்திற்கு ஹெலிகாப்டரில் வந்தடைந்தார். வந்திறங்கிய முதல்வர் விஜய்க்கு, மக்கள் பலத்த வரவேற்பினை அளித்து வருகின்றனர்.
Tamil News LIVE: CM விஜய் ரோடு ஷோ; இன்றுடன் முடியும் இடைத்தேர்தல் பரப்புரை
Tamil News LIVE Updates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரை இன்று முடிகிறது; தாராபுரத்தில் முதல்வர் விஜய் ரோடு ஷோ மேற்கொள்வது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்ஸை இங்கு காணலாம்.
இடைத்தேர்தல் அப்டேட்ஸ்: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரை இன்றுடன் (அக். 4) நிறைவடைகிறது. தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை இறுதிக்கட்ட பரப்புரையில் அரசியல் கட்சிகள் தற்போது தீவிரம் காட்டி வருகின்றனர்.
முதல்வல் விஜய் ரோடு ஷோ: தாராபுரம் தொகுதியில் முதலமைச்சர் விஜய் 50 கி.மீ., தூரத்திற்கு ரோடு ஷோ மேற்கொள்கிறார். மதியம் 1 மணிமுதல் மாலை 6 மணிவரை அவர் ரோடு ஷோ செல்வார் என தெரிகிறது.
நாளை முதல் பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு, மதுராந்தம், தாராபுரம் தொகுதிகளுக்குட்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் அக்டோபர் 5,6ஆம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
சென்னை காசிமேடு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்ட்டுள்ளது. எனவே, அவ்வழியாக செல்பவர்கள் திட்டமிட்டு பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, எந்தெந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம். (மேலும் படிக்க)
தனியார் எரிபொருள் நிறுவனமாக நயாரா பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். (மேலும் படிக்க)
இந்திய ஓடிஐ அணியின் பந்துவீச்சில் பெரும் ஓட்டை இருக்கிறது. அதை 2027 உலகக் கோப்பை தொடருக்கு முன் அடைத்து, பிரச்னையை தீர்க்க இந்திய அணி என்ன செய்ய வேண்டும்? (மேலும் படிக்க)
Flydubai விமானத்தில் தாக்கப்பட்ட இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார், அன்று காக்பிட்டில் நடந்தது என்ன என்பதை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் விரிவாக விவரித்துள்ளார். (மேலும் படிக்க)