• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /ஜந்தர் மந்தர் போராட்டம்: பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் அத்துமீறல்? – டெல்லி போலீஸ் மீது குற்றச்சாட்டு!

ஜந்தர் மந்தர் போராட்டம்: பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் அத்துமீறல்? – டெல்லி போலீஸ் மீது குற்றச்சாட்டு!

ஜந்தர் மந்தர் போராட்டத்தின்போது போலீசார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 3 பெண் பத்திரிகையாளர்கள் புகார் அளித்த நிலையில், விசாரணை குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Written ByR Balaji
Published: Oct 04, 2026, 12:45 PM IST|Updated: Oct 04, 2026, 12:49 PM IST
joinshare
ஜந்தர் மந்தர் போராட்டம்: பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் அத்துமீறல்? – டெல்லி போலீஸ் மீது குற்றச்சாட்டு!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
மாஃபியா கும்பல்களுக்கான தவெக ஆட்சி... வேட்பாளரை துரத்தி அடியுங்கள் - ஸ்டாலின் போட்ட வீடியோ

மாஃபியா கும்பல்களுக்கான தவெக ஆட்சி... வேட்பாளரை துரத்தி அடியுங்கள் - ஸ்டாலின் போட்ட வீடியோ

2

Explained : LGBTQ இன்ஸ்டா இன்ஃப்ளுவன்சர் சுட்டுக்கொலை! பஞ்சாப்பில் பரபரப்பு..என்ன நடந்தது?

3

ஜந்தர் மந்தர் போராட்டம்: பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் அத்துமீறல்? – டெல்லி போலீஸ் மீது குற்றச்சாட்டு!

4

IND vs WI: "இப்படி பீல்டிங் பண்ணா உலகக் கோப்பையை மறந்திர வேண்டியதுதான்" – கொந்தளித்த சுப்மன் கில்!

5

பிக்பாஸ் 10 : 3 பேர் எவிக்ஷன்..3 பேர் வைலட் கார்ட் என்ட்ரி! யார் தெரியுமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது போலீசார் தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 3 பெண் பத்திரிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பான புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவை பாரபட்சமற்ற விசாரணைக்காக குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர் பரபரப்பு புகார்

போரட்டத்தை செய்தியாக பதிவு செய்து கொண்டிருந்தபோது, உதவி காவல் ஆணையர் (ACP) ஒருவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். போலீஸாரின் நடவடிக்கைகளை கேமராவில் பதிவு செய்துக்கொண்டிருந்தபோல், அந்த அதிகாரி தன்னை முறையற்ற வகையில் தொட்டதுடன், பின்னர் தள்ளிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தானும் மற்றவர்களும் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்க முயன்றதாகவும், ஆனால் புகார் உடனடியாக பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக 3 பெண் பத்திரிகையாளர்களிடமிருந்தும் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. புகார்கள் அனைத்தும் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்காக குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பிரஸ் கவுன்சில் அதிருப்தி

இந்த சம்பத்திற்கு இந்திய பிரஸ் கவுன்சில் அதிருப்தி தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்களிடம் போலீஸார் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துவதாக பேரவை தெரிவித்துள்ளது. ஜனநாயக நாட்டில் இதுபோன்ற நடத்தையை சாதாரணமாக கருத முடியாது என்றும், பல்வேறு பிரச்சினைகளுக்காக போராடும் மக்களின் நடவடிக்கைகளை அச்சமின்றி பதிவு செய்வதற்கான சுதந்திரம் பத்திரிகையாளர்களுக்கு இருக்க வேண்டும் என்றும் பிரஸ் கவுன்சில் கூறியுள்ளது.

மேலும், பெண் பத்திரிகையாளர் அளித்த புகார் மீது டெல்லி போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊடகவியலாளர்கள் தங்கள் பணியை செய்வதற்கு தேவையான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

அமித் ஷாவிடம் ராகுல் காந்தி கேள்வி

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விளக்கம் கோரியுள்ளார். டெல்லி போலீஸ் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பட்டில் செயல்படுவதால், இந்த விவகாரத்தில் அமித் ஷா பதிலளிக்க வேண்டும் என்று அவர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஜந்தர் மந்தரில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் பல மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், பெண் பத்திரிகையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருப்பதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மேலும், சனிக்கிழமை மட்டும் ஜந்தர் மந்தரில் நூற்றுக்கணக்கானோர் காவலில் எடுக்கப்பட்டதாகவும் பெண் போராட்டக்காரர்களிடம் போலீஸார் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். போராட்டத்தை செய்தியாக பதிவு செய்த பத்திரிகையாளர்களின் கேமராக்கள் பறிக்கப்பட்டதாகவும் சிலர் போலீஸாரால் இழுத்து செல்லப்பட்டதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

இந்த விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர்கள் அளித்துள்ள புகார்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. 

Add Zee News as a Preferred Source
TAGS:
India