SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

2 நாளாக காணாமல் போன சிறுவன்... பாழடைந்த வீட்டில் சடலமாக மீட்பு - மதுரையில் ஷாக்

மதுரையில் நேற்று முன்தினம் (அக். 24) காணாமல் போன சிறுவன், இன்று (அக். 26) சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இருப்பினும் அவரது உயிரிழப்பில் மர்மம் நீடிக்கிறது, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Written By Sudharsan G
Published: Oct 26, 2026, 04:04 PM IST | Updated: Oct 26, 2026, 05:09 PM IST
Join

Madurai Crime News: மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியாமங்கலத்தை சேர்ந்தவர் பெரியகருப்பன். இவருக்கு சத்தியா என்பவருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் 7 வயதில் முத்துச்செல்வம் என்ற ஆண் குழந்தை இருந்தது.

பெரியகருப்பன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தனியாமங்கலத்தில் உள்ள சொந்த வீட்டில் தாய் சந்தியா, மகள்கள், மகன் முத்துச்செல்வம் ஆகியோருடன் வசித்து வந்தார்.

மேலும் படிக்க | செஞ்சி சிறுமி மாயம்: திமுக ஆட்சியில் இது வெளியிலேயே வந்திருக்காது... அமைச்சர் சிடிஆர்

காணாமல் போன சிறுவன் முத்துச்செல்வம்

சிறுவன் முத்துச்செல்வம் தனியாமங்கலம் அருகே வெள்ளலூரில் உள்ள தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் (அக். 24) விடுமுறை தினம் என்பதால் வீட்டின் அருகே பகல் 11 மணியளவில் விளையாட செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார்.

மாலை வரை சிறுவன் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த சிறுவனின் தாயார் மற்றும் உறவினர்கள், கிராம பொதுமக்களுடன் சேர்ந்து காவல்துறை உதவியுடன் அப்பகுதி முழுவதும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சிறுவன் சடலமாக மீட்பு

இன்றும் 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று அதேபகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் சிறுவன் முத்துச்செல்வம் மர்மமான முறையில், உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனை அடுத்து காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வேணுகோபால் மற்றும் மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | தூத்துக்குடியில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை.. கோயில் விழாவில் நடந்த சம்பவம்.. என்ன காரணம்?

ஏற்கெனவே, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சிறுமி ஹேமலதா காணாமல் போய் 15 நாட்களாகிவிட்ட நிலையில், இன்றும் அந்த வழக்கில் பெரியளவில் முன்னேற்றம் இல்லை. சிபிசிஐடி காவல்துறையினரும் அந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

வீடியோ கேம்களை மிஞ்சும் குற்றங்கள்

இந்தச் சூழலில், முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அவரது X பக்கத்தில் தமிழ்நாட்டில் பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் படுகொலைகள் என்ற தலைப்பில் இன்று பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், "சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது. மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான். காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது.

வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன. தவெக ஆட்சியில் Free Run கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள்.

முதலமைச்சர் விஜய் மீது சாடல்

தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது. சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை?" என தவெக ஆட்சியையும், முதலமைச்சர் விஜய்யையும் கடுமையாக சாடி உள்ளார்.

மேலும் படிக்க | விஜய் vs தனுஷ்: தேவர் குருபூஜையில் திண்டுக்கல் சீனிவாசன் ஓபன் டாக்!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES