• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /தர்மன் படத்தில் நயன்தாரா! 5வது முறை ரஜினியுடன் கூட்டணி..கன்ஃபார்ம் ஹிட்தான்!

தர்மன் படத்தில் நயன்தாரா! 5வது முறை ரஜினியுடன் கூட்டணி..கன்ஃபார்ம் ஹிட்தான்!

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மீண்டும் இணைந்த நயன்தாரா - தர்மன் படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் ஃபிலிம்ஸ்

Written ByYuvashree M
Published: Oct 26, 2026, 05:57 PM IST|Updated: Oct 26, 2026, 06:11 PM IST
joinshare
தர்மன் படத்தில் நயன்தாரா! 5வது முறை ரஜினியுடன் கூட்டணி..கன்ஃபார்ம் ஹிட்தான்!
Image Credit: Nayanthara | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சிஎஸ்கே அணியின் புதிய பேட்டிங் கோச்... யார் இந்த கேரத் பேட்டி...?

சிஎஸ்கே அணியின் புதிய பேட்டிங் கோச்... யார் இந்த கேரத் பேட்டி...?

2

தர்மன் படத்தில் நயன்தாரா! 5வது முறை ரஜினியுடன் கூட்டணி..கன்ஃபார்ம் ஹிட்தான்!

3

Explained : சென்சார் போர்டில் இருந்து..ரிலீஸ் ஆகாத 500 படங்களின் தரவுகள் லீக்! என்ன நடந்தது?

4

ஜாமியாவில் என்ன நடக்கிறது? தேர்தல் அறிவிப்புக்குப் பிறகும் வெடித்த புதிய போராட்டம்

5

அன்பில் மகேஷ் கைது... ரூ.100 கோடி லஞ்ச வழக்கில் போலீசார் அதிரடி

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘தர்மன்’ படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தர்மன் திரைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் அஸ்வத் மரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, அன்பரிவ்  சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.

இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களையும், திறமையான தொழில்நுட்ப கலைஞர்களையும் ஒருங்கிணைக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நடிகை நயன்தாரா இந்தப் படத்தில் இணைந்திருப்பது படத்தின் மீதான ரசிகர்களின் ஆவலை மேலும் அதிகரித்துள்ளது.

பிரம்மாண்டமான திரை அனுபவம், விறுவிறுப்பான காட்சிகள் மற்றும் அதிரடியான ஆக்‌ஷன் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாகும் ‘தர்மன்’, தற்போது படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்டத்தை நோக்கி நகர்கிறது. இந்தப் படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்களின் சார்பில் திரு. கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.

ரஜினியுடன் 5வது படம்!

நடிகை நயன்தாரா, சந்திரமுகி திரைப்படத்தில் தன் சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே ரஜினியுடன் ஜோடியாக நடித்து விட்டார். தொடர்ந்து, அவருடன் குசேலன், அண்ணாத்த, தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அந்த படங்கள் அனைத்தும் ஹிட் ஆனது. இதையடுத்து, 5வது முறையாக இணைந்திருக்கும் இந்த படமும் கண்டிப்பாக ஹிட் ஆகும் என கூறப்படுகிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema