• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /மதுரை
  • /மதுரையில் போலீஸ் அடித்ததில்... கணவர் உயிரிழப்பு - மனைவி அடுக்கும் குற்றச்சாட்டுகள்

மதுரையில் போலீஸ் அடித்ததில்... கணவர் உயிரிழப்பு - மனைவி அடுக்கும் குற்றச்சாட்டுகள்

Madurai Latest News: மதுரையில் காவல்துறையினர் தாக்கியதில் தனது கணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது மனைவி குற்றஞ்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறும் நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இதுகுறித்து சில கேள்விகளை எழுப்பி உள்ளார்.

Written BySudharsan G
Published: Aug 17, 2026, 02:54 PM IST|Updated: Aug 17, 2026, 03:02 PM IST
joinshare
மதுரையில் போலீஸ் அடித்ததில்... கணவர் உயிரிழப்பு - மனைவி அடுக்கும் குற்றச்சாட்டுகள்
Image Credit: Represenational Image : Custodial Death

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

2

பிரதமர் மோடி சென்னை வருகை: SPG குழுவின் கட்டுப்பாட்டில் சென்ற விமான நிலையம்

3

புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு - தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு

4

அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

5

உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Madurai Latest News: மதுரை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் 52 வயதான நபர் நேற்று (ஆகஸ்ட் 16)உயிரிழந்தார், அவரை போலீசார் கடந்த மாதம் விசாரித்தபோது தாக்கியதில், அவரது தலையில் காயம் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாகவே அவர் உயிரிழந்துவிட்டார் என்றும் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

உயிரிழந்தவரின் பெயர் பரமசிவம் என்றும்; மதுரையின் மேல அனுப்பானடி பகுதியில் உள்ள ஹவுசிங் போர்ட் காலனியைச் சேர்ந்தவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. பரமசிவனின் மரணம் குறித்து போலீசார் மீது அவரது மனைவி அய்யம்மாள் (48) குற்றஞ்சாட்டி உள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவியின் குற்றச்சாட்டுகள்

ஜூலை 17 - நடந்தது என்ன?

அய்யம்மாளின் கூற்றுப்படி, அய்யம்மாளும் பரமசிவனும் கடந்த ஜூலை 17ஆம் தேதி அன்று சிந்தாமணி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்க சென்றுள்ளனர். தங்களின் வீட்டின் அருகே உள்ள பகுதியில் வாகன பார்கிங் பிரச்னை ஏற்பட்டதில் பக்கத்துவீட்டக்காரர் தன்னை தாக்கிவிட்டதாக கூறி அய்யம்மாள் சிந்தாமணி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 18 - நடந்தது என்ன?

ஆனால் அடுத்த நாளே, போலீசார் மிரட்டியதன் காரணமாக புகாரை திரும்பப் பெற்றதாக அய்யம்மாள் தெரிவித்துள்ளார். அடுத்த மீண்டும் காவல் நிலையத்திற்கு வரச் சொல்லி காவல்துறையினர் தெரிவித்ததாகவும், ஆனால் பரமசிவம் - அய்யம்மாள் ஆகியோர் அன்றைய தினம் காவல் நிலையத்திற்கு போகாமல் இருந்துள்ளனர்.

ஜூலை 19 - நடந்தது என்ன?

உடனே ஜூலை 19ஆம் தேதி அன்று போலீசார் அய்யம்மாள் - பரமசிவனின் வீடு தேடி வந்து, அவர்களை காவல் நிலையத்திற்கு வலுகட்டாயமாக அழைத்துச் சென்றதாக அய்யம்மாள் கூறுகிறார். அங்குதான் பரமசிவனை போலீசார் தாக்கியதாக அய்யம்மாள் தெரிவிக்கிறார்.

பரமசிவனை தாக்கியது குறித்தும் காவல் கட்டுப்பாட்டு மையத்திலும் அய்யம்மாள் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கும் போலீசார் மிரட்டியதால் அந்த புகாரையும் பின்னர் வாபஸ் பெற்றுள்ளார்.

காவல்துறையினர் தாக்கியதில் தலையில் காயம்

காவல் நிலையத்தில் போலீசார் தாக்கிய பின்னர், அடுத்தடுத்த நாள்களில் பரமசிவனின் உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டதாகவும், கடும் தலைவலியும் ஏற்பட்டிருக்கிறது என்றும்  இதற்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் என்றும் அய்யம்மாள் தெரிவித்துள்ளார்.

அவருக்கு தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது பின்னர் கண்டறியப்பட்டதாகவும், இதுவே அவர் உயிரிழப்பதற்கான காரணம் என்றும் அய்யம்மாள் குற்றஞ்சாட்டி உள்ளார். கணவனை இழந்ததை தொடர்ந்து தங்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குமாறும், காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறும் அய்யம்மாள் கோரிக்கை வைத்துள்ளார்.

காவல்துறை தரப்பு சொல்வது என்ன?

காவல்துறை தாக்குதலால் பரமசிவம் உயிரிழந்தார் என்ற குற்றச்சாட்டுகளை மூத்த காவல்துறை அதிகாரி மறுத்துள்ளார் என TNIE ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த கூற்றை நிரூபிக்க காவல்துறையிடம் சிசிடிவி வீடியோ ஆதராமும் இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

உடல்நலப் பிரச்னைகளுக்காக பரமசிவம் பலமுறை சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்றும் சில உடல்நலப் பிரச்னைகளுக்காக சமீபத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

வழக்குப்பதிவும்... விசாரணையும்...

இருப்பினும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு

இச்சம்பவம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றஞ்சாட்டி உள்ளார். உயிரிழந்த பரமசிவம் மரண வாக்குமூலம் அளித்ததாக ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, "எஸ்ஐ உட்பட 5 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் விஜய்க்கு, உயிரிழந்த பரமசிவம் போலீசார் தாக்கி உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தபோது வீடியோ மூலம் மரண வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

அதில் நான் எந்த தப்பும் செய்யவில்லை; அடிதடி பிரச்சனை என்று கூறி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, போலீசார் விசாரணையின் போது வேண்டுமென்றே என் மண்டையிலே அடித்ததில் ரத்தம் கசிந்து உறைந்து போய் வாந்தி வாந்தியாக வருகிறது; என் உயிருக்கு ஏதாவது ஒன்றால் அந்த 5 பேர்தான் போலீசார் தான் காரணம் என தெரிவித்துள்ளார்" என ஆர்.பி. உதயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முந்தைய ஆட்சியில் நிகழ்ந்த லாக்கப் டெத் மரணங்களை எதிர்த்து கடுமையாக குரல் எழுப்பி வந்த முதல்வர் விஜய், இந்த 100 நாள் தன்னுடைய ஆட்சியில் லாக்கப் மரணங்களுக்கு வாய் திறக்க மறுப்பது ஏன்? மௌனம் கடைப்பிடிப்பதின் மர்மம் என்ன? என முதலமைச்சர் விஜய்க்கு, ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu