• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /மதுரை
  • /மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: நிஷாந்த் கைவரிசை காட்டியது எப்படி? ஏஐ வீடியோ வெளியிட்ட போலீசார்!

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: நிஷாந்த் கைவரிசை காட்டியது எப்படி? ஏஐ வீடியோ வெளியிட்ட போலீசார்!

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் நடைபெற்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான கொள்ளை சம்பவத்தில், நிஷாந்த் எவ்வாறு தனி ஒருவராக செயல்பட்டு நகைகளை திருடினார் என்பதை விளக்கும் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர். கடைக்குள் நுழைந்தது முதல் கொள்ளையை முடித்துவிட்டு தப்பி சென்றது வரையிலான காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

Written ByR Balaji
Published: Nov 16, 2026, 07:19 IST|Updated: Nov 16, 2026, 07:23 IST
joinshare
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: நிஷாந்த் கைவரிசை காட்டியது எப்படி? ஏஐ வீடியோ வெளியிட்ட போலீசார்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
திருச்சி அரசு வேலைவாய்ப்பு: 85 செவிலியர் பணியிடங்கள் - மாதம் ரூ.21,000 ஊதியம்!

திருச்சி அரசு வேலைவாய்ப்பு: 85 செவிலியர் பணியிடங்கள் - மாதம் ரூ.21,000 ஊதியம்!

2

சென்னை அரசு வேலைவாய்ப்பு: பெண்கள் தனிச்சிறையில் பணி - மாதம் ரூ.25,000 ஊதியம்!

3

நாட்டின மாடு வளர்க்கும் பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

4

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

5

இந்தியா ஏ அணி தோல்வி... திலக் வர்மா போராடி அடித்த சதம் வீண் - வென்றது பாகிஸ்தான் ஏ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் உள்ள நேரு நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனிஷ்க் நகைக்கடையில் கடந்த 12ஆம் தேதி அதிகாலை துணிகர கொள்ளை நடைபெற்றது. இதில் சுமார் ரூ.21 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் திருடப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக 9 தனிப்படைகளை அமைத்த போலீசார், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அதன் அடிப்படையில், மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷின் மகன் நிஷாந்த் (25) இந்த கொள்ளையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதற்கிடையே அவர் தலைமறைவானதால், அவரது செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்த போலீசார், காதலியும் இன்ஸ்டாகிராம் பிரபலமுமான மீனாட்சி (23) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, கொள்ளையடிக்க பயன்படுத்த ஸ்கூட்டரை வழங்கியதுடன், சம்பவத்திற்கான திட்டமிடலிலும் அவர் உதவியது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மூன்று நாட்கள் வெவ்வேறு வேடங்களில் நோட்டமிட்ட நிஷாந்த்

தனிஷ்க் நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்கு முன்பாக நிஷாந்த் தொடர்ந்து மூன்று நாட்கள் வெவ்வேறு அடையாளங்களுடன் தனிஷ்க் நகைக்கடைக்கு வந்து சென்றுள்ளார். கடையின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே கவனித்த அவர், திட்டமிட்டபடி கடந்த 12ஆம் தேதி அதிகாலை லிஃப்ட் வழியாக கடைக்குள் சென்றுள்ளார்.

அடையாளம் மற்றும் கைரேகை உள்ளிட்ட தடயங்கள் சிக்காமல் இருப்பதற்காக கையுறை, முகமூடி அணிந்திருந்த அவர், கடையில் இருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியுள்ளார்.

 

மதுரை மாநகரம்: நகைக்கடை கொள்ளை வழக்கில் பெண் உட்பட 2 பேர் கைது – கொள்ளையடிக்கப்பட்ட 5½ கிலோ நகைகள் மீட்பு மதுரையில் நடைபெற்ற தனிஷ்க் நகைக்கடை கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படையினர், சம்பவ இடத்திலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்து, பெண் உட்பட இருவரைக் கைது செய்தனர். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட 5½ கிலோ நகைகளும் மீட்கப்பட்டன. Madurai City: Two Arrested in Tanishq Jewellery Store Robbery Case – 5½ kg of Stolen Jewellery Recovered Special teams formed to investigate the Tanishq jewellery store robbery in Madurai analysed CCTV footage from the crime scene and telephone call records, leading to the arrest of two persons, including a woman. A total of 5½ kg of stolen jewellery was also recovered. #MaduraiCityPolice #JewelleryRobbery #StolenJewelleryRecovered #TwoArrested #TamilNaduPolice

— Tamil Nadu Police (@tnpoliceoffl) November 15, 2026

 இந்த நிலையில், இந்த சம்பவம் எவ்வாறு நடைபெற்றது என்பதை விளக்கும் வகையில் போலீசார் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் வீடியோ ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

 

5.5 கிலோ நகைகள் மீட்பு; நிஷாந்துக்கு வலைவீச்சு

திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம், கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் செல்போன் தொடர்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், நிஷாந்துக்கு அவரது தந்தை சுரேஷ் மற்றும் காதலி மீனாட்சி ஆகியோர் உதவியிருப்பதை கண்டறிந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5.5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து மேலும் விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே, தொடர்ந்து தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு தலைமறைவாக இருந்து வரும் நிஷாந்தை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime