• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /சென்னை அரசு வேலைவாய்ப்பு: பெண்கள் தனிச்சிறையில் பணி - மாதம் ரூ.25,000 ஊதியம்!

சென்னை அரசு வேலைவாய்ப்பு: பெண்கள் தனிச்சிறையில் பணி - மாதம் ரூ.25,000 ஊதியம்!

Chennai Government Job 2026: சென்னையில் பெண்கள் தனிச்சிறையில் மனநல ஆலோசகர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.25,000 ஊதியம்

Written ByKarthikeyan Sekar
Published: Nov 23, 2026, 07:16 IST|Updated: Nov 23, 2026, 07:19 IST
joinshare
சென்னை அரசு வேலைவாய்ப்பு: பெண்கள் தனிச்சிறையில் பணி - மாதம் ரூ.25,000 ஊதியம்!
Image Credit: Chennai Government Job

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
திருச்சி அரசு வேலைவாய்ப்பு: 85 செவிலியர் பணியிடங்கள் - மாதம் ரூ.21,000 ஊதியம்!

திருச்சி அரசு வேலைவாய்ப்பு: 85 செவிலியர் பணியிடங்கள் - மாதம் ரூ.21,000 ஊதியம்!

2

சென்னை அரசு வேலைவாய்ப்பு: பெண்கள் தனிச்சிறையில் பணி - மாதம் ரூ.25,000 ஊதியம்!

3

நாட்டின மாடு வளர்க்கும் பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

4

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

5

இந்தியா ஏ அணி தோல்வி... திலக் வர்மா போராடி அடித்த சதம் வீண் - வென்றது பாகிஸ்தான் ஏ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Chennai Government Job 2026: சென்னை மாவட்டத்தில் அரசுப் பணியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தகுதியான பெண் பட்டதாரிகளுக்கு ஒரு முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை பெண்கள் தனிச்சிறையில் மதிப்பூதிய அடிப்படையில் காலியாக உள்ள மனநல ஆலோசகர் பணியிடத்தை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ளார்.  

மேலும் படிக்க | தூத்துக்குடிக்கு அடித்த மெகா ஜாக்பாட்: ரூ.38,000 கோடி முதலீட்டில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம்!

பணியிடம் மற்றும் ஊதிய விவரங்கள்

சென்னை பெண்கள் தனிச்சிறையில் ஒரு மனநல ஆலோசகர் பணியிடம் காலியாக உள்ளது. இந்தப் பணியிடம் பொது வகுப்புப் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு மாதம் ரூ.25,000/- மதிப்பூதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

கல்வித் தகுதி மற்றும் முன்அனுபவம்

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகவியல் அல்லது உளவியல் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், மனநல நிறுவனங்கள் அல்லது சமூக சேவை அமைப்புகளில் ஆலோசனை வழங்கிய முன்அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.  

வயது வரம்பு நிபந்தனைகள்

விண்ணப்பதாரர்கள் 01.07.2026 அன்று குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். வகுப்புவாரியான அதிகபட்ச வயது வரம்பு விவரங்கள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன:  

SCA, SC மற்றும் ST பிரிவினர்: அதிகபட்சம் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.  

BC மற்றும் MBC பிரிவினர்: அதிகபட்சம் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம்.  

OC (பொதுப் பிரிவினர்): அதிகபட்சம் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.  

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் கீழ்க்காணும் 7 முக்கிய ஆவணங்களின் நகல்களைக் கட்டாயம் இணைத்து அனுப்ப வேண்டும்:  

சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, முன்னுரிமை பெற்றதற்கான சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று, கல்வித் தகுதிச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பணி முன்அனுபவச் சான்றிதழ்  

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசித் தேதி

மேற்குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்ட விண்ணப்பதாரர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய சான்றிதழ் நகல்களை 30.11.2026 ஆம் தேதிக்குள் கீழ்க்காணும் முகவரிக்குச் சென்றடையுமாறு அனுப்பி வைக்க வேண்டும்:  

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
சிறை கண்காணிப்பாளர்,
பெண்கள் தனிச்சிறை,
சென்னை - 66.  

சென்னை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, தகுதியான நபர்கள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்கூட்டியே விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu