SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மதுரையில் 500 சவரன் நகைகள் கொள்ளை... கதவை உடைக்காமல் திருடியது எப்படி?

மதுரை பைபாஸ் பகுதியில் உள்ள டாடாவின் தனிஷ்க் நகைக் கடையில் இன்று அதிகாலை, ரூ.50 கோடி மதிப்புள்ள 500 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Written By Sudharsan G
Published: Nov 12, 2026, 01:33 PM IST | Updated: Nov 12, 2026, 01:54 PM IST
Image Credit: Madurai Tanishq Jewellery | Image Source: X
Join

மதுரை நகைக்கடையில் இருந்து 500 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  மதுரை பைபாஸ் பகுதியில் இயங்கி வரும் டாடாவின் தனிஷ்க் நகைக் கடையில் அதிகாலை 3 மணியளவில் ரூ.50 கோடி மதிப்புள்ள 500 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் திறக்கப்பட்ட இந்த கடையின் பின்புறம் வழியாக நுழைந்த முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 29 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டதாக  கூறப்படும் நிலையில், கதவை உடைக்காமல், பூட்டை உடைக்காமல், நகைகள் திருடப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளை நடந்த நகைக்கடையில் தடய அறிவியல் குழுவினர் ஆய்வில் ஈடுபட்டுள்ள நிலையில், எஸ்.எஸ். காலனி காவல் துறையினர் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மொத்த நகைகளில் 30% அளவுக்கு கொள்ளையடிக்கப்பட்டதாக காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளனர். 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES