திமுக - பாஜக கூட்டணி? முருகப்பெருமானின் கையில்தான் உள்ளது... திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன்
Nainar Nagenthran: திருப்பரங்குன்ற தீப விவகாரத்தில் தவெக அரசு நூற்றுக்கு நூறு தவறு செய்து விட்டது, முதலமைச்சர் ஜோசப் விஜய் தவறு செய்துவிட்டார் என்று கூறிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக - பாஜக கூட்டணி வாய்ப்பு குறித்தும் பேசி உள்ளார்.
Thiruparankundram Deepam, Nainar Nagenthran: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று (நவ. 28) மாலை நேரில் வருகை தந்தார். பாஜக நிர்வாகி ஒருவரின் வீட்டின் மாடியில் நின்று தீபத்தூணை வழிபாடு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டது குறித்த கேள்விக்கு, "150 வருட போராட்டத்துக்கு பின் தீபம் ஏற்றப்பட்டது மிக்க மகிழ்ச்சி. முருகனுக்கு இங்கு தீபம் ஏற்றாமல் வேறு எங்கு ஏற்ற முடியும்.
முதல்வர் விஜய் தவறு செய்துவிட்டார்...
அந்நியப் படையெடுப்புகளால் பாதிக்கப்பட்ட கோவில்கள் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் மீட்கப்பட்டு, பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் தர்மம் வென்றுள்ளது, இந்த உலகத்தில் முருகனுக்கு மிஞ்சிய கடவுளே கிடையாது.
தமிழக வெற்றிக் கழக அரசு நூற்றுக்கு நூறு தவறு செய்து விட்டது, முதலமைச்சர் ஜோசப் விஜய் தவறு செய்துவிட்டார். அங்கேயும் சில இந்துக்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
திமுக - பாஜக கூட்டணியா...?
உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் குறித்த கேள்விக்கு, "இந்தியாவின் உச்சநீதிமன்ற தீர்ப்பு தவறு என்று சொன்னால் இந்தியாவிலேயே இருக்கும் தகுதி அவர்களுக்கு கிடையாது. தகுதியற்றவர்கள் வெளிநாடு செல்ல வேண்டும்" என சாடினார்.
தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவுக்கு திமுக ஆதரவு குறித்த கேள்விக்கு, "எந்த காலகட்டத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டுமோ அதை எடுத்துள்ளார்கள். அது இந்த நாட்டிற்கு செய்யும் நல்ல செயல்" என பதிலளித்தார். மேலும், பாஜக கூட்டணியில் திமுக சேருமா என்ற கேள்விக்கு, "அது முருகப்பெருமானின் கையில் உள்ளது" என பதிலளித்தார்.
டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பின் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, பாஜக கூட்டணியில் திமுக இணையுமா என்ற கேள்விக்கு பதிலளித்தார். ஒரு மசோதாவை ஆதரித்தால் பாஜகவுடன் கூட்டணி என்று பல கட்சிகள் பேசி வருகின்றனர் என அந்த கூற்றுக்கு மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அமித்ஷா உடன் சந்திப்பு... காங்கிரஸை கதறவிட்ட கனிமொழி - பாஜக கூட்டணிக்கு நோ
உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி நடந்தோம்...
முன்னதாக, மலை உச்சியில் தீபம் ஏற்றிய பின் உச்ச நீதிமன்ற நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஓய்வுபெற்ற நீதிபதி வைத்தியநாதன், "மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் எதுவும் முடிவு செய்யவில்லை. உச்ச நீதிமன்றம் கூறியதால் இன்று தீபம் ஏற்றி இருக்கிறோம். நிர்வாகம் பற்றி தொடர்ந்து ஆலோசித்து முடிவு செய்வோம்.
எத்தனை நாட்களுக்கு எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் என தெரியாது. உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை செய்வோம். தீபம் ஏற்றியது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. திருவண்ணாமலைக்கு சென்று இருக்கிறேன், இங்கு எங்கள் கைப்பட ஏற்றியது சந்தோஷமாக இருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இது நடந்திருக்கிறது. ஏற்பாடுகளை நன்றாக செய்திருக்கிறார்கள், திருப்பரங்குன்றத்திற்கு இதற்கு முன் பலமுறை வந்திருக்கின்றேன்.
இதை அரசியலாக்குகிறார்கள்...
ஒரு இஸ்லாமியர் கூட தகராறு செய்யவில்லை, அவர்கள் நமது சகோதரர்கள். ஆனால் இதனை அரசியலாக்கி சர்ச்சையாக்குகிறார்கள். அனைவருமே நண்பர்களாகதான், சகோதரர்களாகதான் இருக்கிறார்கள்.
கொரோனா காலத்தில் நாம் இதை கண்கூடாக பார்த்தோம். பொதுமக்கள் யாரும் மலை மீது அனுமதிக்கவில்லை, இந்த இடம் சூழல் காரணமாக அனுமதிக்கப்படவில்லை. அடுத்த டிசம்பர் 15ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை வருகிறது. உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதன்படி அடுத்த நடவடிக்கையை மேற்கொள்வோம்" என்றார்.
மதப் பிரச்னைகள் இல்லை...
நீதிபதி பார்த்தீபன் கூறுகையில், "மத பிரச்சனைகள் எதுவும் இங்கு இல்லை. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க செயல். ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக எதையும் நாங்கள் ஆலோசிக்கவில்லை, தீபம் ஏற்றுவதை மட்டுமே நாங்கள் பார்த்தோம்" என்றார்.