SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் தீபம் ஏற்றப்படுமா...? உச்ச நீதிமன்றம் முக்கிய விசாரணை

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாதது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த முழு பின்னணி மற்றும் காரசார வாதங்கள் இதோ

Written By Sudharsan G
Published: Nov 25, 2026, 13:16 IST | Updated: Nov 25, 2026, 13:17 IST
Image Credit: Thiruparankundram Case | AI Generated Image : ChatGPT
Join

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்காவுக்கு அருகே உள்ள சர்ச்சைக்குரிய தூணில் தீபம் ஏற்றலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீடு வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து, உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தது. கடந்த நவ.20ஆம் தேதி (வெள்ளி) அன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், இந்த ஒருமுறை மட்டும், அதாவது கார்த்திகை தீபம் தினத்தன்று (நேற்று - நவ. 24) தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் மதுரை மாவட்ட ஆட்சியிருக்கும், மாவட்ட காவல்துறைக்கும் உத்தரவிட்டிருந்தது.

மேலும் படிக்க | திருப்பரங்குன்றம்: தீபத்தூணில் தீபம் ஏற்ற போராடிய 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

ஜனவரி மாதம் தள்ளிவைப்பு

கோயில் தேவஸ்தானம் மற்றும் அதிகாரிகள் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை, கோஷம் எழுப்ப அனுமதியில்லை என உச்சநீதிமன்றம் அதன் இடைக்கால உத்தரவில் தெரிவித்திருந்தது.

அதேநேரத்தில், தீபம் ஏற்றிய பிறகு அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சர்ச்சைக்குரிய தூண் குறித்து கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க 6 வாரக்காலம் அவகாசம் வழங்கி, அடுத்தக் கட்ட விசாரணையை வரும் ஜனவரி மாதம் ஒத்திவைத்தது.

மதுரை ஆட்சியரின் அறிக்கை தாக்கல்

அந்த வகையில், நேற்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில், மூலவரின் சிரசுக்கு மேல் உள்ள உச்சிபிள்ளையார் கோவிலின் தீப மண்டபத்தில் வழக்கம்போல் தீபம் ஏற்றப்பட்டது. சர்ச்சைக்குரிய தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில், மதுரை ஆட்சியரின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அப்போது, "துரதிருஷ்டவசமாக தூணில் தீபம் ஏற்ற இயலவில்லை" என மதுரை ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் நீதிபதிகள் முன் வாதிட்டார்.

அரசும், தேவஸ்தானமும் கூட்டுச் சதி

இதைத் தொடர்ந்து, இந்து அமைப்புகள் சார்பில் வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாய்மொழி விசாரணையின் போது, "சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயலுக்கு எதிராக, தமிழ்நாடு அரசு முன்கூட்டியே முறையிடும் உத்தியைக் கையாளுகிறது" என்று வாதிட்டார்.

மேலும் படிக்க | திருப்பரங்குன்றத்தில் வழக்கம்போல் தீபம் ஏற்றப்பட்டது!

கார்த்திகை தீபம் அன்று மட்டும் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தவிர்ப்பதற்காக, மாநில அரசு பல்வேறு யுக்திகளையும், தந்திரங்களையும் கையாளுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை நியாயப்படுத்துவதற்காக மாநில அரசும், கோவில் தேவஸ்தானமும் சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக இந்து அமைப்புகள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்து அமைப்புகளின் கோரிக்கை

சாஸ்திரம் அனுமதிக்கவில்லை என்றும்; தீப மண்டபத்திலேயே கோயில் அர்ச்சகர்கள் ஆலோசனையின் பேரில் விளக்கம் ஏற்றப்பட்டது என்றும் அவர் வாதிட்டார். இருப்பினும் கோயில் அர்ச்சகர்கள் அத்தகைய ஆலோசனையை வழங்கவில்லை என்றும் இந்து அமைப்புகள் தரப்பில் வாதிடப்பட்டது.

இன்று மதியம் விசாரணை

மேலும், தீப மண்டபத்தில் விளக்கு இன்னும் எரிந்து கொண்டிருப்பதாகவும் அதை உடனடியாக மலை உச்சியில் உள்ள தீபத்தூணிக்கு மாற்ற வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் தரப்பு நீதிமன்றத்தில் வலியுறுத்தினர்.

சட்டத்தை முழுமையாக மீறிய செயலை மேற்கொண்டுள்ளனர் என்றும் இந்த வழக்கை பிற்பகலில் விசாரிக்குமாறு அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். தனியாக மனுத்தாக்கல் செய்தால் நிச்சயமாக அந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரணை செய்கிறோம்  என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

மதுரை ஆட்சியருக்கு எதிரான அவமதிப்பு மனு

இந்நிலையில், தூணில் தீபம் ஏற்றாமல் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்ததாக, மதுரை ஆட்சியர் மீது நீதிமன்ற நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராமசுப்பு என்பவர் மதுரை ஆட்சியருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு இன்று மதியம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது. அதேநேரத்தில், மனுதாரர் தரப்பு இன்று தீப மண்டபத்தில் எரிந்துவரும் தீபத்தை, தர்கா அருகே உள்ள தூணுக்கு மாற்ற கோரிக்கை விடுத்திருக்கிறது. அந்த வகையில், இன்று மாலைக்குள் சர்ச்சைக்குரிய தூணில் விளக்கேற்றும்படி மீண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | திருப்பரங்குன்றம் விவகாரம் : மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES