• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /மதுரை
  • /திருப்பரங்குன்றத்தில் வழக்கம்போல் தீபம் ஏற்றப்பட்டது!

திருப்பரங்குன்றத்தில் வழக்கம்போல் தீபம் ஏற்றப்பட்டது!

மதுரை திருப்பரங்குன்றத்தில் உச்சிப்பிள்ளையார் அருகே உள்ள தீப மண்டபத்திலேயே வழக்கம்போல் தீபம் ஏற்பட்டது. இதையடுத்து பக்தர்கள் அரோகரா, அரோகரா என முழக்கமிட்டனர்.

Written ByR Balaji
Published: Nov 24, 2026, 18:26 IST|Updated: Nov 24, 2026, 18:49 IST
joinshare
திருப்பரங்குன்றத்தில் வழக்கம்போல் தீபம் ஏற்றப்பட்டது!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
அனைத்து பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் கொடுப்பது கட்டாயம்! அரசு அதிரடி உத்தரவு..

அனைத்து பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் கொடுப்பது கட்டாயம்! அரசு அதிரடி உத்தரவு..

2

திருப்பரங்குன்றத்தில் வழக்கம்போல் தீபம் ஏற்றப்பட்டது!

3

சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம்.. டிசம்பரில் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்!

4

பகத் பாசில்-பிரேம் குமார் இணையும் படத்தின் பெயர் ‘அசரீரி’! எப்போது ரிலீஸ் தெரியுமா?

5

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவதில் என்ன சர்ச்சை? 100 ஆண்டுகால நிலப் பிரச்சினையின் பின்னணி என்ன?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திகை தீபத் திருநாளான இன்று (நவம்பர் 24) மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியிருந்தது. கோயில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே அங்கு செல்ல வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்றும் நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்தது. அத்துடன், இந்த அனுமதியை எதிர்கால ஆண்டுகளுக்கான நிரந்தர உரிமையாக கருதக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.

வழக்கமான மண்டபத்தில் மகா தீபம் ஏற்றம்

பல தசாப்தங்களாக உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே அமைந்துள்ள தீப மண்டபத்தில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருவதாகவும், அந்தப் பாரம்பரிய நடைமுறையே தொடர வேண்டும் என்பதும் தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது. இதன்படி, இந்த ஆண்டும் வழக்கமான இடமான உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

முன்னதாக, சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை தவிர்க்கவும், சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக மதுரை மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளதோடு, மலைப்பகுதியை சுற்றி ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அரசியல் கட்சிகளின் ஆதரவும், பாஜக தலைவர்கள் கைதும்

இதனிடையே, உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்தி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி இந்து அமைப்புகளும், பாஜகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம், காலங்காலமாக பின்பற்றப்படும் மரபின்படியே தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும், அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதே முதன்மையானது என்றும் கூறி, ஆளுங்கட்சியான தவெக அரசின் நிலைப்பாட்டிற்கு அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் முழு ஆதரவு தெரிவித்துள்ளன.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu