சண்டைக் காட்சிகளுக்கும் சர்ச்சை பேச்சுகளுக்கும் பெயர் போனவர் மன்சூர் அலிகான். இவர், சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படத்தில் வில்லன்களில் ஒருவராக வந்தார். தான் அந்த படத்தில் நிற்பது குறித்து சமீபத்தில் ஒரு பட ப்ரமோஷன் விழாவில் பேசியிருக்கும் அவர், நான் நடித்த காட்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்று ஆவேசத்துடன் பேசி இருப்பது வைரலாகி வருகிறது.
கடந்த மே மாதம், ஆர். ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்த கருப்பு திரைப்படம் வெளியாகி இருந்தது. இருப்பினும் இந்த படத்தில் முக்கியமான சில காட்சிகள் வெட்டப்பட்டு விட்டதாக குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது. குறிப்பாக நடிகர் ஆர்யா இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார். அந்தக் காட்சியும் நீக்கப்பட்டுவிட்டது. அந்த வகையில் நடிகர் மன்சூர் அலி கானும் இது குறித்து பேசியிருக்கிறார்.
கருப்பு படத்தில் இருக்கும் ஒரு பாடலில் மன்சூர் அலிகான் தனது சகோதரர்களுடன் இணைந்து நடமாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சியில் மன்சூர் அலி கான் தான் இடம்பெறுவோம் என எதிர்பார்த்திருக்கிறார். ஆனால், அந்த காட்சிகள் படத்தில் இடம் பெறாமல் போயுள்ளது. இது குறித்து பேசியிருந்த அவர், கருப்பு திரைப்படத்தில் தான் ரிங்க் மேலே ஏறி நின்று டான்ஸ் ஆடியதாகவு, இந்த காட்சிக்ள் எதுவும் பட்த்தில் வரவே இல்லை என்றும் தெரிவித்திருந்தார். மேலும், தயாரிப்பாளரிடம் இது குஇத்து கேட்ட போது யூடியூப்பில் வரும் என்று தெரிவிக்கப்பட்டதாகவும், கடைசி வரை அந்த காட்சிகள் வரவே இல்லை என்றும் தெரிவித்தார். தன்னை மட்டும் டம்மி மாதிரி நிற்க வைத்ததாக கூறிய அவர், தான் சிரமப்பட்டு அடிய இரண்டு நிமிட காட்சிகளையாவது வைத்திருக்கலாம் என கூறியிருக்கிறார்.
மன்சூர் அலிகான், தன்னைப்போல பல துணை நடிகர்கள் மற்றும் கதாப்பாத்திர நடிகர்கள் நடித்த காட்சிகள் கதாநாயகனின் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக நீக்கப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
கதாநாயகனுக்காக அவர்கள் இருட்டடிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய் மன்சூர் அலிகன், அவருடைய காட்சிகளை பில்ட்-அப் செய்வதற்காக, பிறரின் காட்சிகளை வெட்டி எடுக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். இதனுடன் மலையாள படங்களை ஒப்பிட்ட அவர், அந்த மொழி படங்கள் வெற்றி பெறுவதற்கு காரணமே அதில் வரும் எல்லா கதாப்பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அமைக்கப்படுவதுதான் என்றும், தமிழ் படங்களில் அப்படி நடக்கப்படுவது இல்லை என்றும் தெரிவித்து இருக்கிறார்.
சூர்யாவிற்கு, படுத்து கிடந்த பட மார்கெட் கருப்பு படத்திற்கு பிறகுதான் கொஞ்சம் உயர்ந்துள்ளது. இந்த சமயத்தில், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படமும் வெளியாகி இருக்கிறது. இந்த படமும் மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது. இப்படி பல ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவின் படங்கள் மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருவதற்கு மத்தியில் மன்சூர் அலிகான் இவ்வாறு பேசியிருப்பது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மன்சூர் அலிகான், சினிமாவில் மட்டுமல்லாது நடந்து முடிந்த தேர்தலிலும் ஆக்டிவாக இருந்தார். ஆனால் அவர் நின்ற லால்குடி தொகுதியில் அவரை விட நோட்டாவிற்கே ஓட்டு அதிகமாக விழுந்தது. இது மட்டுமன்றி அவர் பேசிய பல விஷயங்கள் கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சையாகி வருவது குறிப்பிடத்தக்கது.