• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /“மாட்டிக்கிட்ட பங்கு..” குரங்குடன் வீடியோ வெளியிட்டு சிக்கிக்கொண்ட விக்ரம்..என்ன மேட்டர்?

“மாட்டிக்கிட்ட பங்கு..” குரங்குடன் வீடியோ வெளியிட்டு சிக்கிக்கொண்ட விக்ரம்..என்ன மேட்டர்?

Vikram Monkey Controversy : நடிகர் விக்ரம், சமீபத்தில் ஒரு குரங்குடன் வீடியாே வெளியிட்டிருந்தார். ஆனால், அந்த குரங்கு குறித்து தற்போது வனத்துறை விசாரணையை ஆரம்பித்திருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Written ByYuvashree M
Published: Aug 11, 2026, 03:52 PM IST|Updated: Aug 11, 2026, 04:05 PM IST
joinshare
“மாட்டிக்கிட்ட பங்கு..” குரங்குடன் வீடியோ வெளியிட்டு சிக்கிக்கொண்ட விக்ரம்..என்ன மேட்டர்?
Image Credit: X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

2

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

3

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

4

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

5

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Vikram Monkey Controversy : தமிழ் திரையுலகில், முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விக்ரம். இவர், வெளிநாட்டு குரங்குடன் ஒரு வீடியோ வெளியிட்டிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
விக்ரம் வெளியிட்ட வீடியோ:

நடிகர் விக்ரம், ஒரு குரங்குடன் funny faces செய்வது போன்ற ஒரு ரீல், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வைரலானது. இரு நாட்களுக்கு முன்பு வெளியான இந்த வீடியோவில் இருந்த குரங்கு, லார் கிப்பன் எனும் வகையை சேர்ந்தது என கூறப்படுகிறது. விக்ரமின் இந்த ரீலை பார்த்த பலரும், இந்த குரங்கு சட்டவிரோதமாக கடத்தி கொண்டு வரப்பட்டதா? என்றும், இந்த குறங்கை வளர்க்க அனுமதி பெறப்பட்டதா? என்றும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.

விக்ரமின் இந்த விவகாரம், தமிழ்நாட்டின் நடக்கும் சட்ட விரோத அயல்நாட்டு வனவிலங்குகள் வர்த்தகம் மற்றும் இடமாற்றம் தொடர்பானவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து, இஞ்சம்பாக்கத்தில் இருக்கும் நடிகர் விக்ரமின் உறவினர் வீட்டில் அந்த குரங்கு இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, விக்ரமின் உறவினர் வீட்டிற்கு அந்த குரங்கு எப்படி கொண்டு வரப்பட்டது என வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனுமதி பெறப்பட்டதா?

விக்ரம் கையிலிருந்த லார் கிப்பன் வகை குரங்குகள், சர்வதேச அளவில், அழியும் அபாயத்தில் இருக்கும் உயிரினங்களின் பட்டியலில், இடம்பெற்றுள்ளது.

அழியும் அபாயத்தில் உள்ள உயிரினங்களின் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தின் கீழ் Appendix Iல்தான் அந்த குரங்கு சேர்க்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த பட்டியலில் இருக்கும் உயிரினங்களை சர்வதேச அளவில் வணிக பயன்பாட்டுக்காக விற்பனையோ, இறக்குமதியோ அல்லது ஏற்றுமதியோ செய்ய முழுமையாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வகை உயிரினங்களை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு இடமாற்றம் செய்வதற்கு, கடும் நிபந்தனைகள் இருக்கிறது.

கட்டுப்பாடுகள்..

மேற்கூறிய பட்டியலில் இருக்கும் உயிரினங்களை ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிறு ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்ய வேண்டும் என்றால், அந்த நாடுகளின் அனுமதிகள், வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகத்தின் ஆவணங்கள் மற்றும் மாநில தலைமை வனவிலங்கு காப்பாளரின் அனுமதி போன்றவை இல்லாமல், இந்த விலங்குகளை யாராலும் வைத்திருக்க இயலாது.

இந்த விவகாரம் தொடர்பாக, முதன்மை வனவிலங்கு காப்பாளர் ராகேஷ்குமார் தோக்ரா பேசுகையில், குறிப்பிட்ட லார் கிப்பன் வகை குரங்கு, எவ்வாறு சென்னைக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும், அதனை வைத்திருக்க தேவையான அனைத்து சட்ட ரீதியான விதிமுறைகளூம் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறதா என்பது பற்றியும் வனத்துஐ ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.

குரங்கு எங்கிருந்து வந்தது?

கிடைத்திருக்கும் ஆவணங்களின் படி, மணிப்பூரைச்சேர்ந்த லைகுரம் சிங் என்பவர்தான், 2020ஆம் ஆண்டில், ‘பரிவேஷ் 1’ எனும் தளம் மூலமாக, 8 லார் கிப்பன் வகை குரங்குகள் தன்னிடம் இருப்பதாக பதிவு செய்திருக்கிறார். இதில், 4 ஆண் மற்றும் 4 பெண் இருக்கின்றன. இவை, மலேசியாவை பூர்வீகமாக கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

உயிருள்ள விலங்கு இனங்கள் விதிகள் 2024ன் படி, லைகுரம் சிங்கிடமிருந்து ஈரோடு பெருந்துறையை சேர்ந்த எஸ்.கே.கேசவநாதன் என்பவருக்கு 3 லார் கிப்பன் குரங்குகள் தத்தெடுக்கப்பட்டுள்ளதாக ஆவணங்களில் பதிவாகி இருக்கின்றன. இப்படி கைமாறப்பட்ட குரங்குகள், 1 ஆண் மற்றும் 2 பெண் குரங்குகள் ஆகும். இருப்பினும், படிவம் 1 தமிழ்நாடு முதன்மை வனவிலங்கு காப்பாளரின் ஒப்புதலுக்காக இன்னும் காத்திருப்பு நிலையிலேயே இருக்கிறது.

இன்னொரு படிவம், இந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி கேசவநாதன் என்பவரிடமிருந்து, சென்னை இஞ்சம்பாக்கத்தை சேர்ந்த சின்னி கிருஷ்ணா ரங்கநாதன் என்பவருக்கு (விக்ரமின் உறவினர்) ‘வளர்ப்புப்பிராணி; எனும் பெயரில், ‘வாங்கும்’ முறையில் இரண்டு லார் கிப்பன் குரங்குகள் கைமாறியிருக்கிறது. அது, ஒரு ஆண்-ஒரு பெண் லார் கிப்பன் குரங்குகள் ஆகும். இந்த படிவத்தின் ஒப்புதலும், தமிழ்நாடு முதன்மை வனவிலங்கு காப்பாளரிடம் நிலுவையில் இருக்கிறது.

சிக்கல் என்ன?

அதிகாரிகளின் கூற்றின்படி, அயல்நாட்டு விலங்கை பதிவு செய்தால் மட்டும், அதனை வைத்திருப்பதும் கைமாறுவதும் சட்டப்பூர்வமாகி விடாதாம். சர்வதேச ஆவணங்களும், அனுமதிகளும் பரிசீலனையின் மூலமே அவை சட்டப்படி செல்லும் என கூறப்படுகிறது.

விக்ரமுடன் வீடியோவில் இருக்கும் லார் கிப்பன் குரங்கு, 2-3 வயதானது என கூறப்படுகிறது. இது, லைகுரம் சிங்கால் பதிவு செய்யப்பட்ட குரங்காக இருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

இந்த குரங்கு, மணிப்பூர்-மியான்மர் எல்லைப்பகுதியில் சட்டவிரோதமாக வனவிலங்கு மற்றும் அயல்நாட்டு வளர்பு பிராணிகள் கடத்தலுக்கான சர்வதேச வழித்தடமாக இருப்பதால், அவ்வழியே கடத்தல் மூலம் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக, லைகுரம் சிங், கேசவநாதன் மற்றும் ரங்கநாதன் உள்ளிட்டோரை விசாரிக்க தொடர்பு கொண்ட போது, அவர்களை தொடர்புகொள்ள முடியாமல் போயிருக்கிறது. விக்ரமின் தரப்பில் இருந்து தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறப்பட்டிருக்கிறது. விக்ரம், வீடியோவை வெளியிட்டு அது பிரச்சனை ஆன பின்பு அதனை நீக்கி விட்டார் என்பது குறிப்பிட்டிருக்கிறார். 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema