• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் புவனேஷ்வர் குமாருக்கு வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், முகமது ஷமிக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

Written ByR Balaji
Published: Oct 09, 2026, 09:29 AM IST|Updated: Oct 09, 2026, 09:33 AM IST
joinshare
IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

2

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

3

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

4

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

5

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்திய கிரிக்கெட் அணியில் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மீண்டும் இடம்பிடித்திருப்பது கவனம் பெற்றுள்ளது. 36 வயதான அவர், சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்காக களமிறங்க உள்ளார். ஐபிஎல் தொடரில் கடந்த 2 சீசன்களாக அவர் வெளிப்படுத்திய சிறப்பான செயல்பாடுகளே இந்த வாய்ப்புக்கு காரணம் என இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு திரும்பும் புவனேஷ்வர் குமார்

இந்திய அணிக்காக புவனேஷவர் குமார் கடைசியாக 2022 நவம்பப் மாதம் விளையாடினார். அதன் பிறகு சர்வதேச போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் புவனேஷ்வர, கடந்த 2 சீசன்களிலும் விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார். 2025 சீசனில் 17 விக்கெட்களையும், 2026 சீசனில் 28 விக்கெட்களையும் கைப்பற்றினார். இரண்டும் சீசன்களிலும் சேர்த்து 45 விக்கெட்களை வீழ்த்தியிருப்பது அவரது திறமையை வெளிப்படுத்துகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு பிறகு இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. அந்த தொடரில் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரின் தேவை கருதியே புவனேஷ்வருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என சிதான்ஷு கோடக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தேர்வுக்குழுவின் முடிவை பற்றி என்னால் உறுதியாக கூற முடியாது. ஆனால், இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டிகளின்போது பும்ரா அணியில் இல்லாத சூழலில் பல இளம் பந்துவீச்சாளர்கள் விளையாடியதை பார்த்தேன்.அப்போது அனுபவத்தின் முக்கியத்துவத்தை உணர முடிந்தது. இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களும் இருப்பது அவசியம். கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களிலும் புவனேஷ்வர் சிறப்பாக பந்துவீசியுள்ளார். நியூசிலாந்து குழுலுக்கு அவரது அனுபவம் உதவும் எனத் தேர்வுக்குழு கருதியிருக்கலாம் என்று தெரிவித்தார்.

முகமது ஷமிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?

புவனேஷ்வர் குமார் இந்திய அணிக்கு திரும்பியுள்ள நிலையில், அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஷமி கடைசியாக 2025 மார்ச் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பிறகு தேசிய அணியில் இடம்பிடிக்காத அவர், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

ஷமியின் எதிர்கால தேர்வு குறித்து சிதான்ஷ் கோடக் கூறுகையில், ”நான் தேர்வுக்குழுவில் இல்லை என்பதால், இதுகுறித்து உறுதியாக சொல்ல முடியாது. ஷமியும் தற்போது விளையாடி வருகிறார். அவரும் சிறப்பாக செயல்படுகிறார். ஒரு வீரர் நன்றாக விளையாடுகிறார் என்றும், அணிக்கு அவருடைய தேவை இருக்கிறது என்றும் தேர்வுக்குழு கருதினால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்” என்றார்.

விவிஎஸ் லட்சுமணுக்கு என்ன பொறுப்பு?

இந்திய அணியின் வீரர்கள் காயமடையும் சூழலில், அணி நிர்வாகத்துக்கும் தேர்வுக்குழுவுக்கும் இடையே தகவல்களை பகிர்வதில் முன்னிலை வீரர் விவிஎஸ் லட்சுமணின் பங்கு குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இது குறித்து தனக்கு முழுமையான விவரங்கள் தெரியாது என்று கூறிய சிதான்ஷு கோடக், லட்சுமணின் அர்பணிப்பை பாராட்டினார். தேசிய அணியின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் லட்சுமண் எப்போதும் கவனமாக இருப்பார் என்றும் தெரிவித்தார்.

பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் லட்சுமணுடன் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்துகொண்ட அவர், இந்திய அணிக்கு ஒரு வீரர் அவசரமாக தேவைப்படும் சூழலில்,அவரை உடனடியாக அணிக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை லட்சுமண் மேற்கொள்வார் என்றும் கூறினார். மேலும், இந்திய கிரிக்கெட்டின் நலனை கருத்தில் கொண்டே லட்சுமண் எந்த பொறுப்பையும் கையாள்வார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

கம்பீர் - லட்சுமண் இடையே தொடர்ந்து ஆலோசனை

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் விவிஎஸ் லட்சுமணும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் சிதான்ஷு கோடக் கூறினார். ”கம்பீரும் லட்சுமணும் எப்போதும் தொடர்பில் இருப்பதை நான் அறிவேன். அணிக்கு தேவையான விஷயங்கள் குறித்து கம்பீர் அவரிடம் பேசுவது வழக்கமான நடைமுறைதான். இதில் புதிதான எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை” என்றார்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் இந்திய அணி உறுதி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முன்பு நடைபெற்ற ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர்ந்து வெற்றிகளை பெற்று வந்தாலும், எதிர்கால அணியை உருவாக்கும் முயற்சியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது அவசியம் என்று சிதான்ஷு கோடக் வலியுறுத்தினார்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும்போது சில அனுபவமிக்க வீரர்கள் அணியில் இடம்பெறாமல் போகலாம். சில நேரங்களில் எதிரணி சிறப்பாக விளையாடி போட்டி கடுமையாக மாறும்போது வெற்றி முக்கியமாக தோன்றும். இருப்பினும், எதிர்காலத்துக்கான வலுவான அணியை உருவாக்குவது ஒரு தொடர்ச்சியான செயல்முறை.

திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து, அணியின் மாற்று வீரர்கள் பலத்தை மேம்படுத்த வேண்டும். பிசிசிஐயின் கட்டமைப்பும் இளம் வீரர்களின் வளர்ச்சியும் இந்திய அணிக்கு வலுவான எதிர்காலத்தை உருவாக்க உதவுகின்றன என்று அவர் தெரிவித்தார். 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer