Actress Shakeela : தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கவர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்ட கதாநாயகிகளில் ஷகிலாவும் ஒருவர். இவர், இவருடைய படங்கள், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் திரையிடபட்டிருக்கிறது. 18 வயதிலேயே சினிமாவில் அறிமுகமான ஷகீலாவின் இமேஜ், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பெரிதாக உயர்ந்தது. தனக்கு வாழ்வின் இரண்டாம் பாதியில் கிடைத்த ஏணியை பிடித்து ஏறி வந்து, தொடர்ந்து நேர்காணல்கள், புது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த ஷகீலா, தற்போது மருத்துவமனையிலிருந்து ரிட்டர்ன் ஆகியிருக்கும் சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
“மம்மி..மம்மி” என்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் ஷகீலாவை அழைத்ததை அடுத்து, பொது மக்களில் பலரும் கூட அவரை அப்படியே அழைக்க ஆரம்பித்தனர், பாசமாகவும் பேசி வருகின்றனர். அவர்கள், “அவருக்கு இப்படி ஆகும்ன்னு கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல..” என்று சமீபத்திய சம்பவம் ஒன்று குறித்து கூறி வருகின்றனர்.
கழுத்தில் பேண்டேஜ் உடன், முகம் வத்திப்போய், நைட்டியுடன் மருத்துவமனையில் அமர்ந்திருக்கும் புகைப்படமும், காரில் இருந்து இறங்குவது போன்ற புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.
ஷகீலா, தனக்கென ஒரு யூடியூப் சேனலை வைத்திருக்கிறார். அதில், தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் வீடியோஒ வெளியாகி இருக்கிறது.
அந்த வீடியோவில், ஷகீலாவின் மகள் மிலாதான் தன்னுடைய தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்துமுதலில் பேசினார். அந்த வீடியோவில், ஷகீலாவை இரண்டு பேர் படுக்க வைப்பது, அவருக்கு ஜூஸ் கொடுப்பது, பிபி செக் செய்வது உள்ளிட்ட பல்வேறு க்ளிப்பிங்ஸ் இடம் பெற்றிருக்கிறது.
சமீபத்தில் தனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்ததாக கூறிய ஷகீலா, தான் ஒரு பக்கமாக ஒரே இடத்தில் படுத்துக்கொண்டு கேம்ஸை 4 மணி நேரம் ஆனாலும் விளையாடி வந்ததாகவும், சாப்பிட எழுப்பினாலும் சாப்பிட்டு விட்டு மீண்டும் அதையே செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இப்படியே ஒரு பக்கமாக படுத்துக்கொண்டு யூடியூப்பையும் இன்ஸ்டாகிராமையும் பார்த்து வந்தஹ்டால் ஏற்பட்ட விளைவுதான் இது என்று தன்னுடைய அறுவை சிகிச்சையை சுட்டிக்காட்டி கூறினார்.
தனக்கு கழுத்து பகுதியில், எலும்புக்கு நடுவில் செல்லும் ஜவ்வு வெளியில் வந்து விட்டதாகவும் அதற்கு தற்போது டிட்டானியம் டிப் வைத்து ஸ்க்ரூ வைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதனை அனாவசிய செலவு மற்றும் வலி என்று தெரிவித்த ஷகீலா, அனைவரையும் போன் உபயோகிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். குழந்தைகள் கையில் போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், பெரியவர்களும் போன் உபயோகிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இல்லையென்றால் தன் நிலைதான் அனைவருக்கும் வரும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஷகீலாவின் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். ”உங்களுக்கு சீக்கிரம் உடல் நிலை சரியாகி விடும்” என்று அவர்கள் கூற, அவர் சொல்வது சரியான விஷயம்தான் என்று ஒரு சிலர் கூற்றி வருகின்றனர்.
ஷகீலாவிற்கு இந்த நிலை நேர்ந்ததற்கு போன் உபயோகித்ததுதான் காரணம் என்று அவர் கூறியிருந்தாலும், மருத்துவர்கள் தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இது குறித்து வெளியாகவில்லை. இது குறித்து கருத்து தெரிவிக்கும் மருத்துவர்கள், வைட்டமின் D அளவு குறைந்திருந்தாலும், மிக விரைவில் எலும்பு தேய்மானம் வரக்கூடும் என தெரிவித்துள்ளனர்.