• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /DC திரைப்படம் ஓடிடியில் வெளியாவது எப்போது? வெளியான தகவல்!

DC திரைப்படம் ஓடிடியில் வெளியாவது எப்போது? வெளியான தகவல்!

DC OTT Release : அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் உருவான திரைப்படம், டிசி. இந்த படத்தில் ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Aug 09, 2026, 04:19 PM IST|Updated: Aug 09, 2026, 04:26 PM IST
joinshare
DC திரைப்படம் ஓடிடியில் வெளியாவது எப்போது? வெளியான தகவல்!
Image Credit: DC OTT | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

2

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

3

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

4

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

5

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

DC OTT Release : லோகேஷ் கனகராஜ், இயக்குநராக தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகி, தற்போது DC திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். தமிழ் திரையுலகின் முக்கிய ஹீரோக்களான விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரை வைத்து படங்களை எடுத்து விட்ட இவர், ”சரி..நாம ஏன் ஹீரோவாக நடிக்கக்கூடாது?” என முடிவு செய்து, டிசி படத்தில் நடித்திருக்கிறார்.

டிசி திரைப்படம்:

Devdas, Chandraவின் சுருக்கம்தான், DC. இந்த படத்தில் ஹீரோவாக லோகேஷ் கனகராஜும், ஹீரோயினாக வாமிகா கபியும் நடித்துள்ளனர். இதில் முக்கிய கேரக்டர்களில் சஞ்சனா, அவினாஷ், கஸ்தூரி ராஜா, ஜவஹர் சக்தி, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

கதை என்ன?

டிசி திரைப்படம், கேங்ஸ்டர் கதையாக உருவாகி இருக்கிறது. இதில் கேங்க்ஸ்டராக வருவதே நம்ம லோகேஷ் கனகராஜ்தான். இவன் வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் ஒரு திருப்பம் மற்றும் அதில் அவனுடன் பயணிக்கும் பெண் பற்றிய கதைதான், டிசி. 
ஓடிடி வெளியீடு எப்போது?

வழக்கமாக, எந்த படம் வெளியாகிறது என்றாலும் இப்போதெல்லாம் அதன் ஓடிடி உரிமம் விற்கப்பட்ட பிறகுதான் திரையரங்கிலேயே வெளியிடப்படுகிறது. இதையடுத்து, DC திரைப்படமும் அதே போல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட பிறகு தியேட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை சன் நெக்ஸ்ட் நிறுவனம் தக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது. படம் இப்போதைக்கு தியேட்டரில் வெளியாகி இருப்பதால் சில நாட்களுக்கு ஓடிடியில் ரிலீஸ் ஆவதற்கு சற்று தாமதம் ஆகும். தியேட்டரில் ரிலீஸ் ஆகி 1 மாதத்திற்கு பிறகு இந்த படம் ஓடிடியில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

லோகேஷின் அடுத்த ப்ளான் என்ன?

நடிகர் லோகேஷ் கனகராஜ், தான் நடித்து முடித்த பிறகு அடுத்த படத்தை இயக்கும் வேலைகளை தொடங்கி விட்டார். தற்போது அட்லீயின் பான் இந்திய படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுனை வைத்து அவர் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த படம்தான் லோகியின் அடுத்த திரைப்படம் ஆகும்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema