சமூகத்தை பொறுத்தவரை, ஒரு பெண் திருமணத்திற்கு முன்னாலேயே கர்ப்பமாகி விட்டார் என்றால் அவருடைய பிறப்பையும், குணாதிசயத்தையும் இழிவு படுத்தி பேசுவதையே வேலையாக கொண்டிருப்பர். இவ்வளவு ஏன், திருமணமான புதிதிலேயே அந்த பெண் கர்ப்பமாகி விட்டார் என்றாலும், சில கிழவிகள் நமட்டு சிரிப்புடன் அவர்களை ஏளன பார்வை பார்ப்பதுண்டு. இப்படிப்பட்ட சமூகத்திற்கு மத்தியில், ஒரு நடிகை திருமணத்திற்கு முன்பே ஒரு பிரபல கிரிக்கெட்டரால் கர்ப்பமானர். அதோடு, அந்த குழந்தையை தனியாக வளர்த்தும் காட்டியிருக்கிறார். அந்த நடிகை யார் தெரியுமா?
அந்த நடிகையின் பெயர், நீனா குப்தா. இவர், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் ஸ்டார் கிரிக்கெட்டராக இருந்த விவியன் ரிச்சர்ட்ஸ் உடன் உறவில் இருந்தார். இவர் பாலிவுட் திரையுலகின் நடிகை மட்டும் கிடையாது. பல சீரியலிலும் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பதாய் ஹோ திரைப்படம் பெரிய ஹிட் அடித்தது. இத்தனைக்கும் அந்த திரைப்படம், அவர் வயதான பின்பு நடித்த படமாகும். இவர், லேடிஸ் ஸ்பெஷல், டார்ட், ஜஸ்ஸி ஜஸ்ஸி கோய் நஹின் உள்ளிட்ட தொடர்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.

நீனா குப்தாவுடன் உறவில் இருந்த விவியன் ரிச்சர்ட்ஸ், கிரிக்கெட் உலகின் மிகப்பெறும் ஜாம்பவான்களுள் ஒருவராக இருந்தவர். கிட்டத்தட்ட 121 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர், சுமார் 8ஆயிரத்திற்கும் மேலான ரன்களை கடந்திருக்கிறார்.
நீனாவும், விவியனும் 1980களில் காதல் உறவில் இருந்தனர். ஆனால், அந்த சமயத்தில் விவியன் ஏறகன்வே மிரியம் ரிச்சர்ட்ஸ் என்பவருடன் திருமண உறவில் இருந்தார். அதையும் தாண்டி, அவரை திருமணம் செய்யக்கூடாது என்று நீனா குப்தா முடிவு செய்ததால், தனக்கும் தன் பிள்ளைக்கும் நிதி ரீதியான உதவியும் விவியனிடமிருந்து வேண்டாமென சொல்லிவிட்டார். ஆரம்பத்தில், குழந்தை வேண்டுமா என்று யோசித்த அவர், பின்னர் பெற்றுக்கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளார். இதையடுத்து, 1989ல் இவருக்கு மசிபா குப்தா எனும் பெண் குழந்தை பிறந்தார்.
நீனாவின் நண்பராக இருந்தவர், சதீஷ் கௌஷிக். இவரும், பாலிவுட்டின் பிரபல நடிகராவார். இவர், நீனா கர்ப்பமாக இருந்த சமயத்தில் ‘நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன், நீ யார் கேட்டாலும் இந்த குழந்தை என்னுடையது என்று கூறிவிடு’ என்று கூறியிருக்கிறார். ஆனால், நீனா அதற்கு சம்மதிக்கவில்லை. ’என் குழந்தையை நானே வளர்த்துக்கொள்கிறேன்’ என அவர் கூறியதோடு அதை அவர் செய்தும் காட்டினார்.
தன்னுடைய காதல், குழந்தை குறித்து சுய சரிதையில் நீனா குறிப்பிட்டிருக்கிறார். அதில், சமூகம் என்ன கூறினாலும் தனக்கு ஒரு தாய் ஆவது குறித்து நிறையவே எதிர்பார்ப்புகள் இருந்ததாக தெரிவித்திருக்கிறார்.
குழந்தை பிறந்த பிறகு, தான் உணர்ச்சி ரீதியாக விவியனுடன் உறவில் இருந்ததாக கூறிய அவர், மசாபா வளரும் போது அவருடைய தந்தையுடன் நேரத்தை செலவிட வைத்ததாக தெரிவித்திருக்கிறார்.
நீனாவிற்கு, 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர், விவேக் மெஹ்ரா எனும் சார்டட் அக்கவுண்டண்ட்டை திருமணம் செய்து கொண்டார். மசாபா, சத்யதீப் மிஸ்ரா எனும் வழக்கறிஞரை 2023ஆம் ஆண்டில் கரம் பிடித்தார். இதில் இந்த திருமணத்தில் ரிச்சர்ட், அவருடைய மகள்கள், நீனா உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.