• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /ராஜமெளலியின் மருமகள் யார் தெரியுமா? செம பெரிய கை..யாருக்கும் தெரியாத விஷயம்

ராஜமெளலியின் மருமகள் யார் தெரியுமா? செம பெரிய கை..யாருக்கும் தெரியாத விஷயம்

இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநர்களுள் ஒருவராக கருதப்படுபவர், ராஜமெளலி. இவருடைய மருமகள் குறித்த சில விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் யார் என்பது குறித்த விவரத்தை இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Written ByYuvashree M
Published: Aug 12, 2026, 06:20 PM IST|Updated: Aug 12, 2026, 06:25 PM IST
joinshare
ராஜமெளலியின் மருமகள் யார் தெரியுமா? செம பெரிய கை..யாருக்கும் தெரியாத விஷயம்
Image Credit: Rajamouli | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

2

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

3

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

4

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

5

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்திய சினிமாவை, நெக்ஸ்ட் லெவலுக்கு கொண்டு போன இயக்குநர்களுள் ஒருவராக இருக்கிறார், எஸ்.எஸ்.ராஜமௌலி. அது மட்டும் கிடையாது, இவரால் பல நடிகர்களின் மார்கெட்டும் பெரிதாகவே உயர்ந்துள்ளது. இவரைப்பற்றி கேள்விப்படும் பலர், “பெத்த கைதான் போல..” என நினைக்கின்றனர். ஆனால், அவருடைய மருமகளைப்பற்றி கேள்வி பட்டால்..அவர் இவரை விட பெரிய ஆள் போல என நினைப்பீர்கள்.

ராஜமௌலியின் குடும்பம்..

இயக்குநர் ராஜமௌலியின் மனைவி பெயர் ரமா. இவர்களுக்கு கார்த்திகேயா எனும் மகன் இருக்கிறார். இவர், ராஜமௌலியின் படங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கு இவரும் பெரும்பங்காற்றி இருக்கிறார். ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு, ‘நாட்டு நாட்டு’ எனும் பாடலுக்கு ஆஸ்கர் விருது வென்றதிலும் இவருக்கு பெரும்பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. இத்தனை நாட்களாக தன்னுடைய தந்தைக்கு படங்களில் உதவி செய்து வந்தவர், இப்போது அறிமுக இயக்குநராக அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

கார்த்திகேயாவிற்கு, பூஜா பிரசாத் என்பவருக்கும் 2018ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களின் திருமணம், ராஜஸ்தானில் இருக்கும் ஜெய்பூரில் நடந்தது. இந்த திருமணத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, ராம் சரண், சுஷ்மிதா சென் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த திருமணம், தடபுடலாக நடந்ததை அடுத்து பூஜா குறித்த விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூஜா பிரசாத் யார் தெரியுமா?

பூஜா பிரசாத், ஒரு பிரபலமான பாடகியாக இருக்கிறார். இவர், சினிமா பாடல்கள் மட்டுமல்ல, பல பக்தி பாடல்களையும் பாடியிருக்கிறார். இதை தாண்டியும், அவருக்கு பலவித சினிமா பின்னணியும் இருக்கிறது. பூஜா பிரசாத்தின் தாத்தா பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான வி.பி ராஜேந்திர பிரசாத்தான். இவர், தெலுங்கு திரையுலகில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களை தயாரித்திருக்கிறார்.

தெலுங்கு திரையுலகில், முக்கிய வில்லன் நடிகராக திகழ்பவர் ஜெகபதி பாபு. இவர் தமிழிலும் மதராஸி, புத்தகம், பைரவா, தாண்டவம், லிங்கா உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். இவர்தான், பூஜா பிரசாத்தின் பெரியப்பா. ஜெகபதி பாபுவின் இளைய சகோதரரின் மகள்தான், பூஜா. இதனால், ராஜமௌலி மற்றும் ஜெகபதி பாபு ஆகிய இருவரும் சம்பந்திகள் ஆகியிருக்கின்றனர்.

அரசியல் பின்புலம்..

ராஜமௌலியின் மருமகளிடம் மேற்கூறிய விஷயங்கள் மட்டும் ஹைலைட்டாக இல்லை, அவருடைய குடும்பத்திற்கும் ஆந்திர அரசியல் வட்டாரத்திலும் நல்ல தொடர்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ராஜமெளலியின் மருமகள் குறித்து அனைவரும் பேசி வருகின்றனர்.

ராஜமெளலியின் அடுத்த படம்..

இயக்குநர் ராஜமெளலிக்கு முதன் முதலில் பெரும் புகழை தேடிக்கொடுத்த திரைப்படம், ‘மகதீரா’. இந்த படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்திருக்கிறார். பாகுபலி படத்திற்கு முன்னரே, பிரபாஸை வைத்து ஒரு சில படங்களை எடுத்திருக்கும் ராஜமெளலி அதை வைத்துதான் அவரை பாகுபலி திரைப்படத்திலும் ஓகே செய்தார்.

ராஜமெளலிக்கு, பாகுபலி படத்திற்கு பின்னர் ஒரு பெரிய உலக மார்கெட் கிடைத்தது. இதன் பிறகு அவர் அவருடைய படங்கள் வெளிநாடுகளிலும் நிறைய தியேட்டர்களில் வெளியாக ஆரம்பித்தது. கடைசியாக ஆர்ஆர்ஆர் படத்திற்கு இவருக்கு ஆஸ்கர் அங்கீகாரமே கிடைத்ததை அடுத்து, தற்போது மகேஷ் பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema