• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /‘ரிசார்ட்’ வெப் தொடர் புதிய சாதனை! 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்ததாக அறிவிப்பு..

‘ரிசார்ட்’ வெப் தொடர் புதிய சாதனை! 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்ததாக அறிவிப்பு..

ஜியோஹாட்ஸ்டாரின் தமிழ் ஒரிஜினல் வெப் தொடராக வார எபிசோடுகளாக வெளியாகி வரும் ‘ரிசார்ட்’ தொடர், 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

Written ByYuvashree M
Published: Aug 18, 2026, 05:51 PM IST|Updated: Aug 18, 2026, 05:58 PM IST
joinshare
‘ரிசார்ட்’ வெப் தொடர் புதிய சாதனை! 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்ததாக அறிவிப்பு..
Image Credit: Resort Series | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

2

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

3

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

4

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

5

SA vs AUS: 8 ஆண்டுகளுக்கு பின் மோதல்... காயம்பட்ட ஆஸ்திரேலியா; திடமான தென்னாப்பிரிக்கா

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ் தொடரான இது, மொத்த பார்வை நேரத்தில் கிட்டத்தட்ட பாதி இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி பார்வையாளர்களிடமிருந்து கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மைல்கல்:

ஜியோஹாட்ஸ்டாரின் தமிழ் தொடரான ‘ரிசார்ட்’ 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் பிக்‌ஷன் ஒரிஜினல் தொடராக ‘ரிசார்ட்’ உள்ளது.

தொடங்கப்பட்ட நாள் முதல், எளிதில் அனவைராலும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய கதாபாத்திரங்கள், உணர்வுப்பூர்வமான கதைக்களம் மற்றும் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் வெளியாகும் எபிசோடுகள் மூலம் ‘ரிசார்ட்’ தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த பார்வையாளர்களிடமும் ‘ரிசார்ட்’ வரவேற்பைப் பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் பார்வையாளர்கள்..!

உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் தொடர்புபடுத்திக் கொள்ளும்படியான கதைக்களங்கள், தங்களது சொந்த மொழி மற்றும் சந்தையைத் தாண்டியும் ரசிகர்களை சென்றடைய முடியும் என்பதை ’ரிசார்ட்’ மீண்டும் நிரூபித்துள்ளது. ‘ரிசார்ட்’ தொடரின் மொத்த வாட்ச் டைமில் 53% தமிழக பார்வையாளர்களிடமிருந்து கிடைத்துள்ளது. மீதமுள்ள 47% பார்வை நேரம் தமிழகத்திற்கு வெளியிலிருந்து கிடைத்துள்ளது. இதில் 22% இந்தி பார்வையாளர்களிடமிருந்தும், 15% தெலுங்கு பார்வையாளர்களிடமிருந்தும், 10% மலையாளம் மற்றும் கன்னட மொழி பார்வையாளர்களிடமிருந்தும் கிடைத்துள்ளது.

இந்த மைல்கல், ஜியோஹாட்ஸ்டாரின் ‘லாங் ரன்னிங் ஷோஸ்’ என்ற வித்தியாசமான கதை சொல்லல் வடிவத்திற்கான திட்டமிட்ட முதலீட்டின் வெற்றியை பிரதிபலிக்கிறது. வாரந்தோறும் பல எபிசோடுகளை வெளியிடுவதன் மூலம், தொடர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பழக்கத்தை பார்வையாளர்களிடம் உருவாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக, தென்னிந்தியா முழுவதும் ‘லாங் ரன்னிங் ஷோஸ்’ எனப்படும் நீண்டகால தொடர்களின் எண்ணிக்கையை ஜியோஹாட்ஸ்டார் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம், குறுகிய காலம் என்பதைத் தாண்டி, நீண்டகாலம் பார்வையாளர்களை தக்க வைக்கவும் அவர்களை மீண்டும் கொண்டு வரவும் இது உதவுகிறது.

முக்கிய கதாப்பாத்திரங்கள்:

பிரவீன் பென்னட் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரிசார்ட்’ தொடரில் விஜய் குமார் ராஜேந்திரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆர்ஆர் ரிசார்ட்டில் ஹவுஸ்கீப்பிங் ஊழியராக பணியாற்றும் வெற்றி, ஒரு சமையல் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன் வாழ்கிறார். அந்த ரிசார்ட்டின் பின்னணியில் இருக்கும் லட்சியங்கள், உறவுகள் மற்றும் பல்வேறு சவால்களை வெற்றி எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே ‘ரிசார்ட்’ தொடரின் கதைக்களமாகும்.

‘ரிசார்ட்’ தொடரை ஜியோஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பிரத்யேகமாக பார்க்கலாம்.

பல சர்ச்சைகளுக்கு பின்..

ரெசார்ட் தொடரில், துணை கதாப்பாத்திரத்தில் நடித்த ஒரு பெண், தனக்கு சம்பள பாக்கி இருப்பதாகவும், தான் வலிப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அந்த தொடரின் நாயகன் விஜயகுமார் மற்றும் அவரது மனைவி பேசிய விதம் மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகவும் கூறி சில வீடியோக்களை வெளியிட்டார். ஆனால் இறுதியில் அந்த பெண் தான் செய்ததை தவறு என்று கூறி அந்த பதிவுகளை நீக்கி விட்டார். இதையடுத்து, இத்தனை சர்ச்சைகளையும் தாண்டி அந்த தொடர் வெற்றிகரமாக ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Add Zee News as a Preferred Source
TAGS:
OTT Release