• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /SA vs AUS: 8 ஆண்டுகளுக்கு பின் மோதல்... காயம்பட்ட ஆஸ்திரேலியா; திடமான தென்னாப்பிரிக்கா

SA vs AUS: 8 ஆண்டுகளுக்கு பின் மோதல்... காயம்பட்ட ஆஸ்திரேலியா; திடமான தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்க மண்ணில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சுமார் 8 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இன்று தொடங்கும் இத்தொடரை இந்தியாவில் எப்போது, எதில் நேரலையில் காணலாம் என்பதை இங்கு விரிவாக காணலாம்.

Written BySudharsan G
Published: Oct 09, 2026, 01:28 AM IST|Updated: Oct 09, 2026, 01:34 AM IST
joinshare
SA vs AUS: 8 ஆண்டுகளுக்கு பின் மோதல்... காயம்பட்ட ஆஸ்திரேலியா; திடமான தென்னாப்பிரிக்கா
Image Credit: SA vs AUS 1st Test Durban | Image Source : X/@ProteasMenCSA

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
SA vs AUS: 8 ஆண்டுகளுக்கு பின் மோதல்... காயம்பட்ட ஆஸ்திரேலியா; திடமான தென்னாப்பிரிக்கா

SA vs AUS: 8 ஆண்டுகளுக்கு பின் மோதல்... காயம்பட்ட ஆஸ்திரேலியா; திடமான தென்னாப்பிரிக்கா

2

விக்கெட் கீப்பராகும் ஜெய்ஸ்வால்... இந்திய அணியில் இது ஏன் ரொம்ப முக்கியம்?

3

CM விஜய்க்கு முக்கியமான தேர்தல்: மதுராந்தகம், தாராபுரத்தில் காலை 8 மணிக்கு கவுன்டிங்

4

இந்தியாவின் பாஸ் அம்பானியா? எலான் மஸ்க் மீண்டும் சீண்டல்... முழு பின்னணி

5

21 மனைவிகளுடன் வாழும் பிச்சைக்காரர்... பெண்களே தேடி வருவார்களாம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சர்வதேச கிரிக்கெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெஸ்ட் தொடர் இன்று (அக். 9) தொடங்குகிறது. சுமார் 8 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி விளையாட இருக்கிறது.

2018ஆம் ஆண்டில் ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய சம்பவம், தென்னாப்பிரிக்காவில் நடந்த ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரில்தான் நடந்தேறியது. அந்த சம்பவத்திற்கு பிறகு தற்போதுதான் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு வருகை தந்திருப்பதால் கிரிக்கெட் உலகமே இத்தொடரை உற்றுநோக்குகிறது.

மேலும் படிக்க | புவனேஷ்வர் குமார் இந்திய அணி கம்பேக்.. RCB-க்கு ஏற்பட்ட சிக்கல்? Explained

WTC பைனலுக்கு பின் மோதல்...

இதற்கிடைய 2021ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா செல்ல இருந்த ஆஸ்திரேலியா கொரோனா காரணமாக சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. மேலும் 2022-23இல் ஆஸ்திரேலியா சென்ற தென்னாப்பிரிக்கா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது.

அதைத் தொடர்ந்து, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவை கோப்பையை வென்றது. டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்காவின் இந்த வெற்றி கிரிக்கெட் உலகில் சமீபத்தில் அதிகம் கொண்டாடப்பட்டது.

SA vs AUS டெஸ்ட் தொடர்

அந்த போட்டிக்கு பிறகு தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் டெஸ்ட் போட்டியில் தற்போதுதான் மோத உள்ளன. ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவை பழிவாங்க இந்த போட்டியை பயன்படுத்த முயற்சிக்கும். தென்னாப்பிரிக்கா அணி தொடர்ச்சியாக தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பும். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க இருக்கிறது.

மேலும் படிக்க | கேப்டன் பதவியில் இருந்து சுப்மன் கில் நீக்கம்? கம்பீர் அதிரடி.. பிசிசிஐ கைகாட்டும் வீரர்!

தென்னாப்பிரிக்கா அணியின் பிளேயிங் 11

தென்னாப்பிரிக்கா அணி அதன் பிளேயிங் லெவனை ஒருநாள் முன்னதாகவே அறிவித்துவிட்டது.

எய்டன் மார்க்ராம், ரியான் ரிக்கல்டன், டேவிட் பெடிங்ஹாம், டெம்பா பவுமா (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வியான் முல்டர், கைல் வெர்ரின்னே (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சன், சைமன் ஹார்மர், கேசவ் மகாராஜ், அன்ரிச் நார்ட்ஜே.

  • தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா தொடை எலும்பு காயம் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகிவிட்டார்.
  • 2025ஆம் ஆண்டுக்கு பின் டேவிட் பெடிங்ஹாம் தென்னாப்பிரிக்க அணியில் இடம்பிடித்துள்ளார்.
  • 2023ஆம் ஆண்டுக்கு பிறகு அன்ரிச் நார்ட்ஜே தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணிக்கு திரும்பி உள்ளார்.
  • மேலும், மார்கோ யான்சன், அன்ரிச் நார்ட்ஜே பிரீமியம் வேகப்பந்துவீச்சாளராக இருப்பார்கள். வியான் முல்டர் 3வது வேகப்பந்துவீச்சாளராக செயல்படுவார்.
  • சைமன் ஹார்மர், கேசவ் மகாராஜ் ஆகியோர் சுழற்பந்துவீச்சை கவனித்துக்கொள்வார்கள். தேவைப்பட்டால் மார்க்ரம் ஆஃப் ஸ்பின் வீசுவார்.

Dafabet First Test Playing XI vs Australia! 🚨 #TheProteas Skipper Temba Bavuma announces the team set to take the field against Australia in the opening Test of the three-match series. 🇿🇦🏏 #Unbreakable https://t.co/WiZxw3OJaJ

— Proteas Men (@ProteasMenCSA) October 8, 2026

ஆஸ்திரேலிய பிளேயிங் 11 கணிப்பு

முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதன் கணிப்பை இங்கு காணலாம்.

டிராவிஸ் ஹெட், மேத்யூ ரென்ஷா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், நிக் மேடின்சன்/கூப்பர் கானோலி, அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பியூ வெப்ஸ்டர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜாஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க்.

  • கேம்ரூன் கிரீன் காயம் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகி உள்ளார். அவர் அடுத்த போட்டியில் விளையாடினாலும் இந்த தொடரில் இனி அவர் பந்துவீச மாட்டார்.
  • 2 ஸ்பின்னர்களை விளையாட வேண்டும் என்பது ஆஸ்திரேலிய பயிற்சியாளர் மெக்டொனால்டின் திட்டம். எனவே, லயான் உடன் சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் விளையாடுவது உறுதி.
  • எனவே, கூப்பர் கானோலி அல்லது நிக் மேடின்சன் விளையாடுவது உறுதி. இதில் நிக் மேடின்சன் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய ஸ்குவாடில் இடம்பெற்றிருக்கிறார். அவர் புற்றுநோயின் பாதிப்பில் இருந்து போராடி அணிக்குள் வந்திருக்கிறார்.
  • ஜாஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், பாட் கமின்ஸ் ஜோடி இதிலும் கலக்க காத்திருக்கிறது. தேவைப்பட்டால் வெப்ஸ்டரும் பந்துவீசுவார்.

எப்போது, எதில் நேரலை?

டர்பன் நகரில் நடைபெறும் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு தொடங்கும். Fan Code தளத்தில் போட்டியை நேரலையில் காணலாம்.

மேலும் படிக்க | விக்கெட் கீப்பராகும் ஜெய்ஸ்வால்... இந்திய அணியில் இது ஏன் ரொம்ப முக்கியம்?

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket