SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

“எம்மதமும் சம்மதம்” விஜயகாந்தின் பூஜையறையில் இருந்த மும்மத கடவுள்கள்! முழு விவரம்..

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு ஆகஸ்ட் 25ஆம் தேதியான இன்று பிறந்தநாள் ஆகும். இந்த நாளில் அவர் குறித்து பெரிதாக யாரும் அறியாத விஷயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Aug 25, 2026, 11:01 IST | Updated: Aug 25, 2026, 11:07 IST
Image Credit: விஜயகாந்த் | X page
Join

திரையுலகிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருந்தவர், விஜயகாந்த். இவருடைய இழப்பு, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இருந்தவர்களின் தனிப்பட்ட இழப்பாக பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 25ஆம் தேதியான இன்று அவருக்கு பிறந்தநாள் ஆகும்.

மாபெரும் தலைமை..!

மக்களுக்காக உண்மையாக களத்தில் நிற்கும் அரசியல் தலைவர்களுள் ஒருவராக இருந்தவர்தான் விஜயகாந்த். இப்போது இருக்கும் பல அரசியல்வாதிகள், “இதை சொன்னால் தவறாகி விடுமோ, அதை சொன்னால் தவறாகி விடுமோ” என பயப்பட, “எது வந்தாலும் பாத்துக்கலாம்” என கேமராவின் கண்களுக்கு முன்னால் கெத்தாக நின்றவர், விஜயகாந்த்.

விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கை, 2005ஆம் ஆண்டில் தொடங்கியது. அந்த ஆண்டில் தேசிய முற்போக்கு திராவிடக்கழகம் எனும் கட்சியை தொடங்கிய அவர், அதே ஆண்டில் மதுரையில் ஒரு மாநாட்டை நடத்தினார். அதில் லட்சக்கணக்கான மக்கள், திரளாக வந்து கலந்து கொண்டனர். இதற்கு ஆறு மாதங்களிலேயே சட்டமன்ற தேர்தல் நடந்தது. அதில், அவருக்கு கிடைத்த வரவேற்பு மிகப்பெரியது. 234 தொகுதிகளில் போட்டியிட்ட இவருடைய கட்சி சுமார் 8.4% வாக்குகளை சேகரித்தது. இதன் பிறகு அவருடைய கட்சியின் வளர்ச்சி அளப்பரியதாக இருந்தது. இதன் காரணமாக, 2011-2016 சமயங்களில், அவர் எதிர்கட்சி தலைவராக செயல்பட்டார்.

மக்களுக்காக நின்றவர்..!

விஜயகாந்த், மிகப்பெரிய கொடையுள்ளம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். சென்னை கோயம்பேட்டில் இருக்கும் இவருடைய அலுவலகத்தில், தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது. அவர் இறந்த பிறகும், உணவு வழங்கப்படுவது தொடர்ந்து வருகிறது. தன்னை தேடி வரும் யாருக்கும் இல்லை என்று கூறத்தெரியாத மனிதராக இருந்தவர், விஜயகாந்த்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த போது, சங்கத்தின் கடன்களை அடைத்து, நடிகர்-நடிகைகளின் நலனுக்காக பல திட்டங்களை உருவாக்கியவர் அவர். வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி, நிதி திரட்டி நடிகர் சங்கத்தை இவர் உயர்த்தி இருக்கிறார்.

பேரிடர் காலத்தில் நிதி கொடுப்பது, நிவாரண பொருட்கள் வழங்குவதில் இவரை மிஞ்ச இயலாது. இதில் ஹைலைட் என்னவென்றால், இதை செய்ததற்கு அவர் எந்த பிரதிபலனையும் எதிர்பார்த்ததில்லை.

எம்மதமும் சம்மதம்..!

விஜயகாந்தின் பூஜை அறையில், யார் வீட்டிலும் இல்லாத ஒரு வித்தியாசமான ஒரு விஷயம் இருக்கிறது. அந்த பூஜை அறையில், மெக்கா மதீனா படங்களும், இயேசு-மேரி மாதா படங்களும், திருப்பதி வெங்கடாசலபதியும், முருகனும், பிள்ளையாரின் படங்களும் இடம் பெற்றிருக்கும். இது குறித்து, ஆளுர் ஷா நவாஸ் இது குறித்து பேசினார். அப்போது, விஜயகாந்த் எம்மதமும் சம்மதம் என ஒரு மேடையில் சொன்னவர் கிடையாது ஆனால் அவர் அந்த கொள்கையை நேரடியாக பின்பற்றியவர் என்றும் கூறியிருக்கிறார்.

சபரிமலை கோயிலுக்கு சென்று வந்தவர்..

விஜயகாந்த் மிகுந்த சாமி பக்தி பெற்றவர். இவர், ஐயப்பன் கோயிலுக்கு 18  வருடங்களாக சென்று வந்தவர்தான். ஆனால் இதற்கிடயே பக்தர்கள் பலர் அவருடைய காலில் விழுந்து வணங்குவதை பழக்கமாக கொண்டவுடன், அவர் கோயிலுக்கு செல்வதை நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.

விஜயகாந்த்தால் வாழ்ந்தவர்கள்..!

ஒரு நல்ல தலைவனுக்கு அழகு, “நான் வளர்ந்தால் மட்டும் போதாது..தன்னுடன் இருக்கும் அனைவரும் வளர வேண்டும்” என்று யோசிப்பதுதான். விஜயகாந்த் அப்படி யோசிக்கவெல்லாம் இல்லை, வாழ்ந்தே காட்டி விட்டார். இவர் வாய்ப்பு கொடுத்த எத்தனையோ இயக்குநர்களும், இவர் படத்தில் அறிமுகமான எத்தனையோ நடிகர்களும், பின்னாளில் சிறந்த நடிகர்களாக உயர்ந்தவர்களாக இருக்கின்றனர். இவ்வளவு ஏன், இப்போது நாம் கொண்டாடும் முதல்வர் விஜய்க்கு, பெரும் திருப்பத்தை கொடுத்த செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் நடித்து கொடுக்க வேண்டும் என விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி கேட்டுக்கொண்டதன் பேரிலேயே விஜயகாந்த் அப்படத்தில் நடித்து கொடுத்தார்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES