• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /மரணமடைந்து 7 நிமிடத்தில் உயிர் பிழைத்த இந்திய நடிகர்! யார் தெரியுமா? முழு விவரம்

மரணமடைந்து 7 நிமிடத்தில் உயிர் பிழைத்த இந்திய நடிகர்! யார் தெரியுமா? முழு விவரம்

இந்திய நடிகர் ஒருவர் மரணமடைந்து 7 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த அதிர்ச்சி சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அவர் பெயர் ஷிவ் க்ரூவல். இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Written ByKarthikeyan Sekar
Published: Aug 12, 2026, 11:29 AM IST|Updated: Aug 12, 2026, 11:38 AM IST
joinshare
மரணமடைந்து 7 நிமிடத்தில் உயிர் பிழைத்த இந்திய நடிகர்! யார் தெரியுமா? முழு விவரம்
Image Credit: Indian Origin Actor Shiv Grewal

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

2

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

3

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

4

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

5

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டு லண்டனில் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் நடிகராக வலம் வருபவர் ஷிவ் க்ரூவல் (Shiv Grewal). இவர் தனது வாழ்வில் நடந்த ஒரு நம்பமுடியாத, மறக்க முடியாத அதிர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். மரணத்தின் விளிம்பிற்குச் சென்று மீண்டு வந்ததாக இவர் கூறிய தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலான கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு:

கடந்த 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி, லண்டனில் உள்ள தனது வீட்டின் அருகில் மனைவி அலிசனுடன் உணவகம் ஒன்றில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஷிவ் க்ரூவலுக்கு திடீரெனக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. அவரது மனைவி உடனடியாகச் செயல்பட்டு அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவுக்குத் தகவல் தெரிவித்தார். மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து முதலுதவி சிகிச்சைகளை அளித்து அவரை மீட்பதற்குள், சுமார் 7 நிமிடங்கள் அவரது இதயம் முற்றிலும் செயல்படாமல் நின்றுபோனது.

அந்த 7 நிமிடங்களில் நடந்த விசித்திர அனுபவம்:

அந்த 7 நிமிட மருத்துவ மரணத்தின் போது தான் உணர்ந்த விஷயங்கள் குறித்து ஷிவ் க்ரூவல் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: "நான் இறந்துவிட்டேன் என்பதைப் பூரணமாக உணர்ந்தேன். எனது ஆன்மா உடலிலிருந்து பிரிந்து காற்றில் மிதப்பது போல இருந்தது. ஆனால், அதே சமயம் எனக்குள் உள்ளுணர்வுகளும் உணர்ச்சிகளும் மிகத் தெளிவாக இருந்தன. தண்ணீரில் மிதப்பது போலவும், எடையற்ற நிலையை அடைந்தது போலவும் தோன்றியது.

ஒரு கட்டத்தில் எனது உணர்வு வான்வெளியை நோக்கி நிலவுக்கு அருகில் பயணித்தது. அப்போது என்னால் விண்கற்களையும் விண்வெளியின் பிரம்மாண்டத்தையும் பார்க்க முடிந்தது. எனக்கு மறுபிறவிக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது போல உணர்ந்தேன். ஆனால், எனக்கு வேறு ஒரு புதிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க விருப்பமில்லை; மீண்டும் எனது சொந்த உடலுக்கே திரும்பி மனைவியோடு வாழ விரும்பினேன்" எனத் தெரிவித்துள்ளார்.

கோமாவில் இருந்து உயிர் பிழைத்த அனுபவம்

மருத்துவக் குழுவினர் அவருக்குத் தொடர் சிகிச்சையளித்து அவரது இதயத் துடிப்பை மீண்டும் மீட்டெடுத்தனர். எனினும், மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் குறைந்ததால் அவர் ஒரு சில நாட்கள் செயற்கைக்கோமா நிலையில் வைக்கப்பட்டு, பின்னர் குணமடைந்தார்.

மருத்துவ மற்றும் அறிவியல் உலகில் இந்த நிகழ்வு Near-Death Experience - NDE என்று அழைக்கப்படுகிறது. இதயம் நின்றுபோகும் தருணங்களில் அல்லது மூளைக்கு ஆக்ஸிஜன் தற்காலிகமாகத் தடைபடும் போது, மனித மூளையின் உணர்வுப் பகுதிகள் செயல்படும் விசித்திரமான முறையே இத்தகைய விண்வெளிப் பயணம், உடலை விட்டுப் பிரிதல் போன்ற உணர்வுகளைத் தருகிறது என்று அறிவியலாளர்கள் விளக்குகின்றனர்.

மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்த ஷிவ் க்ரூவல், இந்த அனுபவத்திற்குப் பிறகு தனது உணர்வுகளையும், தான் கண்ட காட்சிகளையும் ஓவியங்களாக வரைந்து கண்காட்சிகளையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema