இந்தியாவை பொறுத்தவரை, இங்கு சினிமாவிற்கும் கிரிக்கெட்டிற்கும் இருக்கும் உறவை யாராலும் அசைக்கவே முடியாது. இதனாலேயே, இங்கிருக்கும் ஹீரோக்களுக்கெல்லாம் பல லட்சம் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அப்படி, ஒரே படத்தின் மூலம் பான் இந்திய மார்கெட்டை பிடித்த நடிகர்கள் பற்றியும் அவர்கள் அடைந்துள்ள வெற்றி குறித்தும் இங்கு தெரிந்து கொள்வோம்.
பிரபாஸ், தெலுங்கு திரையுலகில் தன்னுடைய ரசிகர்களால் ரெபல் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவர், திரையுலகில் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்த போதில் இருந்தே இவருடைய பல படங்கள் ஹிட் அடிக்க தொடங்கின. ஆனால், அவரை தெலுங்கு திரையுலகிற்குள் மட்டும் முடக்கி விடாமல், பான் இந்திய அளவில் பெரிய ஆளாக காண்பித்த முதல் திரைப்படம், ‘பாகுபலி’ திரைப்படம்தான்.
பிரபாஸ், பாகுபலி படத்தில் ஹீரோவாக இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இந்த படம், பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் பிறகு பிரபாஸின் ரேஞ்சே வேறாக மாறி விட்டது. அவர், இந்த படத்திற்கு பிறகு கமிட் ஆன படங்கள் அனைத்தும் பெரிய பட்ஜெட் படங்கள்தான், சம்பளங்கள் அனைத்தும் ட்ரிப்பில் டிஜிட் மட்டும்தான். பாகுபலி அளிவிற்கு இன்னொரு படத்தை வெற்றிப்படமாக கொடுக்க பிரபாஸிற்கும் சில வருடங்கள் தேவைப்பட்டது. இருப்பினும், ஒரு வழியாக கல்கி, சலார் உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெரிய வெற்றியை தேடி காெடுத்தது.
தென்னிந்தியாவில் பெரும்பாலானோருக்கு, கே.ஜி.எஃப் படத்திற்கு முன்பு வரை யாஷ் என்றால் பெரிதாக யார் என்றே தெரியாது. இவர் கன்னட திரையுலகில் பெரிய ஆள்தான். ஆனால், பிற திரையுலக ரசிகர்களுக்கு இவரை பெரிதாக தெரியாது. அதை நீக்கியது, கே.ஜி.எஃப் திரைப்படம்தான். பிரசாந்த் நீல் இயக்கத்தில் இவர் நடித்திருந்த கேஜிஎஃப் திரைப்படம், தமிழ்நாட்டிலும் செம ஹிட் அடித்தது. அந்த படத்திற்கு பிறகு, அதே அளவு வெற்றியை கொடுக்கும் இன்னொரு படத்தில் நடிக்க வேண்டும் என்று யோசித்த யாஷ், தற்பாேது டாக்ஸிக் படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக ராமாயணா படத்திலும் ராவணனாக நடித்து இருக்கிறார். இனிமேலும் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கப்போகும் படங்கள் இப்படித்தான் இருக்கப்போகிறது என்பதற்கான மாற்றுக்கருத்துகளே இல்லை.
அல்லு அர்ஜுன், நடிப்பில் 2021ஆம் ஆண்டில் புஷ்பா திரைப்படம் வெளியானது. இந்த படத்தை திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கியிருந்தார். இதற்கு முன்னரே தென்னிந்தியாவின் பிரபல ஹீரோவாக இருந்த அல்லு அர்ஜுன், புஷ்பா படத்திற்கு பிறகு உலகம் முழுக்க தெரியும் புஷ்பராஜ் ஆக மாறிவிட்டார். புஷ்பா முதல் பாகம் செம ரீச் கொடுத்ததை தொடர்ந்து, அடுத்ததாக இரண்டாம் பாகம் 2024ல் வெளியானது. இந்த பாகமும் 2000 கோடியை தாண்டி வசூலித்து இவரை தூக்கி விட்டது. தற்போது அட்லீயுடன் இணைந்து இன்னொரு பான் இந்திய படத்தில் பணியாற்றி வருகிறார். அந்த படத்திற்கு ‘ராக்கா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் இன்னும் 2-3 வருடங்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.