• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /‘டாக்ஸிக்’ ட்ரைலரில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! Yash vs Yash புதுசா இருக்கே..

‘டாக்ஸிக்’ ட்ரைலரில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! Yash vs Yash புதுசா இருக்கே..

Toxic Trailer : ‘ராக்கிங் ஸ்டார்’ என்று பெயர் கொண்டுள்ள நடிகர் யாஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன், மிரட்டலான த்ரில்லர் அம்சங்கள் கொண்டுள்ள இந்த படத்தில் சில கவனிக்க வேண்டிய விஷயங்களும் உள்ளன. இது குறித்த முழு விவரம், இதோ.

Written ByYuvashree M
Published: Aug 09, 2026, 12:02 PM IST|Updated: Aug 09, 2026, 12:13 PM IST
joinshare
‘டாக்ஸிக்’ ட்ரைலரில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! Yash vs Yash புதுசா இருக்கே..
Image Credit: டாக்ஸிக் ட்ரெயிலர் | YouTube Thumbnail

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

2

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

3

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

4

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

5

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Toxic Trailer : மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘டாக்ஸிக்’  ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்த ட்ரைலரில் படத்தின் பலவித பிரம்மாண்டமான அம்சங்கள் காட்டப்பட்டிருந்தது. இது குறித்து முழுமையாக இங்கு பார்ப்போம்.

கேங்ஸ்டர் கதை!

யாஷ் கதையின் மையக் கதாபாத்திரமாக நடிக்கும் இப்படத்தின் டிரெய்லர், பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் மிகப்பெரிய திரை அனுபவத்துடன், காதல், அதிகாரத்தின் மீதான பேராசை, துரோகம் மற்றும் மீட்சி ஆகியவற்றை மையமாகக் கொண்ட உணர்வுபூர்வமான கதையையும் இணைக்கும் பிரம்மாண்ட படைப்பாக ‘டாக்ஸிக்’ திரைப்படம் காண்பிக்கப்பட்டுள்ளது. பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகள், பல அடுக்குகளைக் கொண்ட கதாபாத்திரங்கள் மற்றும் தீவிரமான உறவுகள் என, இந்த டிரெய்லர் உணர்வுபூர்வமான அதே நேரத்தில் பிரம்மாண்டமான கேங்ஸ்டர் கதையை எதிர்பார்க்க வைக்கிறது.

தந்தை-மகனாக யாஷ் 2 வேடம்..

‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் முக்கிய கருவாக, ராயா மற்றும் அவரது மகன் டிக்கெட் ஆகியோருக்கு இடையிலான சிக்கலான உறவு காண்பிக்கப்பட்டுள்ளது. இது பிரம்மாண்டமான கேங்ஸ்டர் உலகிற்கு ஒரு வலுவான உணர்வுபூர்வமான விஷயத்தை வழங்குவதாக இருக்கிறது. அதேபோல், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி ஆகியோரின் கதாபாத்திரங்களைச் சுற்றியுள்ள உறவுகள் மற்றும் மோதல்களின் வலையையும் டிரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. ஒவ்வொரு நடிகரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு தனித்துவமான பரிமாணத்தையும் தீவிரத்தையும் வழங்கியிருப்பது டிரெய்லரில் அழுத்தமாகத் தெரிகிறது. யாஷ் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

Yash vs Yash:

விருது பெற்ற திரைப்பட இயக்குநர் கீது மோகன்தாஸ், தனது தனித்துவமான கதை சொல்லல் மற்றும் காட்சி அணுகுமுறையின் மூலம் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் ஒரு ஆழமான மற்றும் கணிக்க முடியாத உலகத்தை உருவாக்கியுள்ளார். டிரெய்லரில் ‘Yash vs Yash’ என்ற மோதல் முக்கியமாக இடம்பெறுகிறது. யாஷ், ராயா மற்றும் டிக்கெட் என இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். தந்தை மற்றும் மகன் என இருவரும் எதிரெதிர் அணிகளில் நிற்கும் நிலையில், அவர்களுக்கு இடையிலான வெடிக்கும் மோதலே கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது. கீது மோகன் தாஸ், தமிழில் இதற்கு முன்னர் நள தமயந்தி படத்தில் நடித்திருக்கிறார். மலையாளத்திலும் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

நயன்தாரா தோழியா?

நடிகை நயன்தாரா, டாக்ஸிக் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் வருகிறார். இந்த படத்தில் பிற நடிகைகள் யாஷின் காதலிகளாக காண்பிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நயன்தாரா, யாஷ் கூடவே வரும் ஒரு கேரக்டராக இருக்கிறது. எனவே, இது யாஷின் தோழி கதாப்பாத்திரமாக இருக்குமோ என்கிற கேள்வி அனவருக்கும் உள்ளது.

பல்வேறு மொழிகளில் உருவான படம்..

ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’, இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகவுள்ளது. இதன் மூலம் ஆக்‌ஷன், பரபரப்பு மற்றும் பிரம்மாண்டமான கதை சொல்லல் நிறைந்த இப்படத்தின் உலகம் பல்வேறு மொழி ரசிகர்களையும் சென்றடைய உள்ளது.

எப்போது ரிலீஸ்?

கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள “டாக்ஸிக்” ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஆகஸ்ட் 26, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema