• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /விஸ்வநாத் அண்ட் சன்ஸ் சூப்பரா-சுமாரா? படத்தின் ப்ளஸ்-மைனஸ் என்ன?

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் சூப்பரா-சுமாரா? படத்தின் ப்ளஸ்-மைனஸ் என்ன?

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா மற்றும் மமிதா பைஜூ கூட்டணியில் உருவாகி திரைக்கு வந்திருக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தோட முழுமையான பளஸ் அண்ட் மைனஸ் என்ன என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்!

Written ByYuvashree M
Published: Aug 15, 2026, 01:21 PM IST|Updated: Aug 15, 2026, 01:29 PM IST
joinshare
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் சூப்பரா-சுமாரா? படத்தின் ப்ளஸ்-மைனஸ் என்ன?
Image Credit: ViswanathAndSons | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

2

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

3

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

4

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

5

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

கடந்த சில ஆண்டுகளாக, நடிகர் சூர்யாவிற்கு தியேட்டரில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் கைக்கொடுக்காமல் போயின. இதையடுத்து, சமீபத்தில் சூர்யாவின் கருப்பு திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதை தொடர்ந்து, அடுத்ததாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படமும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தின் கதை என்ன?

படத்தில் சூர்யாவிற்கு 42 வயது, மமிதா பைஜூ தன்னுடைய 20களில் இருக்கிறார். இந்த வயது வித்தியாசத்தை பின்னணியாக கொண்டு, ஒரு யூனிக்கான கதையை வெங்கி அட்லூரி தொட்டிருப்பதாக ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

கதைப்படி, சூர்யா (சஞ்சய் விஸ்வநாத்) ஒரு பரம்பரை பணக்காரர். ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில தங்கம் வென்று நாடு திரும்புகிறார். இவரின் தாய் ராதிகாவிற்கு ஒரே ஒரு கவலைதான்.  சூர்யாவுக்கு 42 வயசாகியும் கல்யாணம் பண்ணிக்காம இருக்காரே என்று.

குடும்பத்துக்கு ஒரு வாரிசு வேண்டும் என்றுஅம்மா வற்புறுத்துவதால், சூர்யா வாடகைத் தாய் மூலமாக ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்கிறார். பேரக் குழந்தையை ராதிகாவும் ரொம்ப சந்தோஷமாக பார்த்துக்கொள்கிறார்.

ஆனால், இங்கதான் கதையில ஒரு பெரிய திருப்பம் வருகிறது. அந்த குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாம போகிறது. குழந்தைக்கு உடனடியா 'Bone Marrow Transplant' அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அதற்கு குழந்தையை பெற்ற தாயின் எலும்பு மஜ்ஜை தான் தேவைப்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குழந்தையைக் காப்பாற்ற வேற வழியில்லாமல் வெளிநாடு புறப்படும் சூர்யா, அங்கே தன் குழந்தையின் தாயான மமிதா பைஜூவை சந்திக்கிறார். சூழ்நிலையை விளக்கி அவரை இந்தியாவுக்கு அழைத்துக்கொண்டு வருகிறார். குழந்தைக்காக வரும் மமிதா பைஜூவுக்கு சூர்யா மீது காதல் வருகிறது. 'நான் உன்னை விட்டு எங்கும் போகமாட்டேன்'னு கூறுகிறார். ஆனால சூர்யா அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.

கடைசியில் சூர்யாவின் மனம் மாறியதா? மமிதா பைஜுவின் காதல் வென்றதா? குழந்தை காப்பாற்றப்பட்டதா? என்பதே படத்தின் மீதிக் கதை!

படத்தோட பிளஸ் பாயிண்ட்ஸ் பற்றிப் பார்த்தா...

நடிப்பு:

கதாநாயகனான சூர்யாவுக்கு நடிப்பை சொல்லியா தரணும்? கண்டீஷன் போடும் கண்டிப்பான ஆளாக வரும் சீனிலும், மனசுக்குள்ள காதலை மறைச்சு வைக்கும் காட்சியிலும், காமெடி காட்சிகளிலும் வழக்கம்போல தனக்கே உரிய நடிப்பினால் ஸ்கோர் செய்துள்ளார்.

மமிதா பைஜூ & ராதிகா:

கதாநாயகி மமிதா பைஜூ, சூர்யாவுக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சுறுசுறுப்பான பெண்ணாக இவர் செய்யும் குறும்புத்தனங்களும் சேட்டைகளும் ரசிகர்களை கவர்கிறது. அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ராதிகா சரத்குமாரின் அனுபவ நடிப்பு படத்துக்கு மிகப்பெரிய பலம்.

நகைச்சுவை & ஒளிப்பதிவு:

இடைவேளை வரை கதை நகரும் விதமும், ஆங்காங்கே வர்ற நகைச்சுவைக் காட்சிகளும் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கு. ஒளிப்பதிவாளர் சூர்யாவின் வீடு, மருத்துவமனை, திருமணக் காட்சிகளை ரொம்பவே அழகாகவும் பிரம்மாண்டமாகவும் காட்டப்பட்டுள்ளது.

மைனஸ் பாயிண்ட்ஸ்...

திரைக்கதை வேகம்:

20 வயசு வித்தியாசத்தில் வரும் காதலை மையமாக கொண்டு ஒரு நல்ல உணர்வுப்பூர்வமான கதையை வெங்கி அட்லூரி எடுத்திருந்தாலும், திரைக்கதையில் சுவாரஸ்யம் கொஞ்சம் குறைவாக இருக்கிறது. இதனால் சில நல்ல காட்சிகளிலும் தொய்வு ஏற்படுகிறது.

இசை & சண்டைக்காட்சிகள்:

ஜி.வி. பிரகாஷின் இசையில் 'பட்டாம்பூச்சி' பாட்டும், 'அம்மா' பாடலும் தவிர பிற பாட்டுகள் அந்த அளவுக்கு மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. சண்டைக் காட்சிகளும் பெருதிகா ஈர்க்கும்படி இல்லை.

மொத்தத்தில்..

மொத்தத்துல், 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைக்கதையில் சில குறைகள் இருந்தாலும், சூர்யா - மமிதா பைஜூவின் கெமிஸ்ட்ரி, ராதிகாவின் நடிப்பு மற்றும் நல்ல குடும்ப உணர்வுகளுக்காக இந்த வார இறுதியில் குடும்பத்தோட போய் கண்டிப்பா ஒருமுறை பார்க்கலாம்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema