• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /விஸ்வநாத் அண்ட் சன்ஸ் : சூர்யா-மமிதா பைஜூ வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் : சூர்யா-மமிதா பைஜூ வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

Suriya Mamitha Baiju Age Difference : சூர்யா-மமிதா பைஜூ நடிப்பில், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த சமயத்தில், இவர்கள் இருவருக்கும் இருக்கும் வயது வித்தியாசம் குறித்து அனைவரும் பேசி வருகின்றனர்.

Written ByYuvashree MEdited ByYuvashree M
Published: Aug 08, 2026, 02:42 PM IST|Updated: Aug 08, 2026, 02:53 PM IST
joinshare
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் : சூர்யா-மமிதா பைஜூ வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?
Image Credit: X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

2

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

3

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

4

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

5

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Suriya Mamitha Baiju Age Difference : சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.  இது மகிழ்ச்சி- உணர்வு பூர்வமான தருணங்கள்- இனிமையான சூழல் கொண்ட முழுமையான திரைப்பட  அனுபவத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாரிப்பாளர்கள்சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும்சாய் சௌஜன்யா  ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் - இந்த ஆண்டின் மிகச்சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக அமைய இருப்பதாக நம்பப்படுகிறது.

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ கதை என்ன?

நாற்பது வயதை கடந்தும் தனது கனவுகளை துரத்தும் சர்வதேச துப்பாக்கி சுடும் வீரரான சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தை இந்த ட்ரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. ஸ்டைல் -கனிவு- நகைச்சுவை- உணர்ச்சிகள் - ஆகியவற்றை சூர்யா மிக சிறப்பாக கையாண்டு, பார்வையாளர்களின் மனதை உடனடியாக கவரும் வகையிலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரது கவனம் ஈர்க்கக்கூடிய திரை ஆளுமையும்... வெங்கி அட்லூரியின் உணர்வுபூர்வமான திரைக்கதையும்... இணைந்து சமீப காலங்களில் சூர்யாவின் மிகச்சிறந்த மற்றும் மனதிற்கு நெருக்கமான நடிப்புகளில் ஒன்றாக இந்த படம் அமையும் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன.

திரையில் மமிதா பைஜூ தனது தனித்துவமான வசீகரத்தை வெளிப்படுத்த.. ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன் மற்றும் சிறந்த நட்சத்திர நடிகர்கள் குழு இந்த உணர்வுபூர்வமான பயணத்திற்கு கூடுதலாக வலிமை சேர்த்துள்ளனர். ஜி. வி பிரகாஷ் குமாரின் மனதை வருடும் இசை... நிமிஷ் ரவியின் நேர்த்தியான ஒளிப்பதிவு... வெங்கி அட்லூரியின் தனித்துவமான கதை சொல்லும் பாணி... ஆகியவை இந்த ட்ரெய்லரை மேலும் மெருகூட்டுகிறது.

சூர்யா-மமிதா பைஜு வயது வித்தியாசம்..

படத்திலும் சரி, நிஜத்திலும் சரி, சூர்யாவிற்கும் மமிதா பைஜுவிற்கும் அதிக வயது வித்தியாசம் இருக்கிறது. நடிகர் சூர்யா, 1975ல் பிறந்தவர். தற்போது அவருக்கு 51 வயது ஆகிறது. நடிகை மமிதா, 2001ல் பிறந்தவர். இவருக்கு வயது 25 ஆகிறது. எனவே, மமிதா பைஜுவிற்கும், சூர்யாவிற்கும் கிட்டத்தட்ட 26 வயது வித்தியாசம் இருக்கிறது.

கோயம்புத்தூரில் நடைபெற்ற பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் படத்தின் உணர்வுபூர்வமான ஆழம் மற்றும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் திறன் குறித்தும் படக் குழுவினர் மிகுந்த நம்பிக்கையை பேச்சில் வெளிப்படுத்தினர். அந்த நம்பிக்கையை இந்த ட்ரெய்லர் முழுமையாக உறுதிப்படுத்தி இருப்பதுடன் மறக்க முடியாத திரையரங்க அனுபவத்திற்கான உத்திரவாதத்தையும் பார்வையாளர்களுக்கு அளிக்கிறது.

சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் - ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் வார இறுதியில் மறக்க இயலாத உணர்ச்சிகளின் உலகத்தை இப்படம் பார்வையாளர்களுக்கு வழங்க உள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema