Explained : நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! வீடியோ வெளியிட்ட கேங்ஸ்டர்-நடந்தது என்ன?
பாலிவுட்டின் பிரபல நடிகரான டைகர் ஷ்ராஃப் மீது மும்பையில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதனால், திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது கொலை முயற்சி நடந்துள்ளது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவரை கொல்ல வந்தவர்கள், குறித்த விசாரணையும் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
டைகர் ஷ்ராஃப் மீது கொலை முயற்சி!
சமீபத்தில் வெளியான'ஜெயிலர் 2’ திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தவர் ஜாக்கி ஷ்ராப். இவருடைய மகன்தான் டைகர் ஷ்ராப். இவரும் பாலிவுட்டில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார்.
டைகர் ஷ்ராப், அக்டோபர் 18ஆம் தேதியான நேற்று மாலை, மும்பையில் உள்ள ஜுஹு பகுதியில் இருந்துள்ளார். அப்போது அவரை நோக்கி பைக்கில் வந்த மர்ம நபர்கள், திடீரென அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி இருக்கின்றனர். அந்த துப்பாக்கிச்சூட்டில், டைகர் ஷ்ராஃப்பின் கார் ஓட்டுநரும் அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒருவரும் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து 5 முறை டைகர் ஷ்ராஃப்பை நோக்கி சுடப்பட்டதாக தெரிகிறது.
டைகர் ஷ்ராஃப்பிற்கு என்ன ஆச்சு?
இந்த சம்பவத்தில் டைகர் ஷ்ராஃப்பின் மார்பு மற்றும் வலது கை பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. மற்றபடி அவருக்கு எந்த பலத்த காயமோ, உயிருக்கு ஆபத்தான காயமோ ஏற்படவில்லை.
மருத்துவமனையில் அனுமதி!
துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, அங்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியிருக்கின்றனர். தடயவியல் குழுவினரும் அங்கு வந்து, துப்பாக்கி குண்டுகளை எடுத்து சென்று ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர். மேலும், பைக்கில் பின்பக்கம் அமர்ந்திருந்த நபர்தான், நெருக்கமாக வந்து துப்பாக்கியால் சுட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜாக்கி ஷ்ராப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்பு வீடு திரும்பினார். அவரது ஓட்டுநர் மற்றும் உடனிருந்த ஆட்டோ ட்ரைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
யார் அந்த கும்பல்?
டைகர் ஷ்ராஃப் மீது தாக்குதல் நடத்திய கும்பல், லாரன்ஸ் பிஷ்னோய் எனும் கேங்ஸ்டர் தலைவனின் கும்பலாக இருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதில் குறிப்பிட வேண்டிய விஷயமே, லாரன்ஸ் பிஷ்னோய் குஜராத்தில் உள்ள சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதுதான். அவர் சிறையில் இருந்தாலும், அவருடைய குழு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது. இதில், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த அனில் பண்டிட் என்பவர் பேசுகிறார். அதில் அவர் தங்களின் டார்கெட் லிஸ்டில் ஷ்ராஃப் உள்ளதாகவூம், தாங்கள் சொன்ன அறிவுறுத்தல்களை அவர் பின்பற்றாமல் சல்மான் கானுடன் சேர்ந்து நடித்து வந்தார் என்றும் கூறியிருக்கிறார்.
மகாராஷ்டிரா துணை முதல்வர் சந்திப்பு!
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய டைகர் ஷ்ராஃப்பை, மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்னாத் ஷிண்டே அவரது வீட்டில் சந்தித்து, உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். அதன் பிறகு, ஷிண்டே மும்பை நகரில் யாரும் அவர்களின் வன்முறையையும் அதிக்க தனத்தையும் செலுத்த முடியாது என்று வார்னிங் கொடுத்துள்ளார்.
மேலும் படிக்க | கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?
டைகர் ஷ்ராஃப்பிற்கு துப்பாக்கிச்சூடு நடந்த போது வெளியேறிய கன் பவுடர் மற்றும் கிளாஸ் உடைந்ததன் காரணமாக அடிப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அவரது குடும்பத்திற்கு அரசாங்கம் துணை நிற்கும் என தெரிவித்த அவர், எந்த வகையிலும் வன்முறையை பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறினார்.
மும்பையில் கேங் வார் வரலாறு!
ஷிண்டே, இதற்கு முன்னர் மும்பையில் இருந்த கேங் வார் அதாவது இரு கேங்ஸ்டர் குழுக்களுக்கு இடையே நடந்த போர் குறித்து பேசினார். 1990களில், இது போன்ற கேங் வார் சகஜம் என்றும் அவற்றிற்கு முடிவு கட்டியது மும்பை போலீசார்தான் என்றும் கூறினார். மேலும் அது போன்ற் ஒரு விஷயத்தை மீண்டும் இந்த அரசு அனுமதிக்காது என்று கூறியதோடு, இதற்கு சீக்கிரமே முடிவு கட்டுவோம் என கூறியிருந்தார்.
அடுத்து யார்?
டைகர் ஷ்ராப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, அரசாங்கமும் போலீசாரும் இது போல சினிமா தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்த தவறி விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ”இன்று டைகர் ஷ்ராஃப், நாளை யார்? மும்பை நகரில் ஒரு சினிமா பிரபலத்துக்கே இந்த நிலை என்றால், எப்படி மும்பையில் வாழும் ஒரு சாதாரண நபர் பாதுகாப்பாக உணர்வார்?” என்று கேள்வி எழுப்பினார்.
அந்த அறிக்கையில், மேலும் பல பிரபலங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. சல்மான் கானின் பாந்த்ரா நகர் வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கிச்சூடு, அதே பகுதியில் இருக்கும் சயிஃப் அலி கான் வீட்டில் அவர் மீது நடந்த கத்திக்குத்து தாக்குதல், ஜுஹு பகுதியில் உள்ள இயக்குநர் ரோஹிட் ஷெட்டி வீட்டில் நடந்த தாக்குதல், காமெடி நடிகர் கபில் ஷர்மாவின் கனடாவில் இருக்கும் உணவகத்தில் நடந்த தாக்குதல் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டினர்.
கேங்ஸ்டர்கள், இந்த தாக்குதலுக்கு பயமின்றி பொறுப்பேற்றுக்கொண்ட போதும், அரசும் காவல் துறையும் அவர்களை நிறுத்த தவறுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தொடர்ந்து அறிக்கை வெளியிடுவது போதாது என்றும், பாலிவுட்டிற்கு உண்மையாகவே பாதுகாப்பு வேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர்.
மேலும் படிக்க | கோவில் வாசலில் லாரி விபத்து: 12 பக்தர்கள் பலி - மத்திய பிரதேசத்தில் நடந்தது என்ன?