• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /ஈரோட்டில் கடத்தப்பட்ட நர்ஸ்.. 5 நாளுக்கு பின் காட்டுக்குள் நிர்வாணமாக கிடந்த சடலம்.. கொடூர கொலை!

ஈரோட்டில் கடத்தப்பட்ட நர்ஸ்.. 5 நாளுக்கு பின் காட்டுக்குள் நிர்வாணமாக கிடந்த சடலம்.. கொடூர கொலை!

Erode Nurse Murder: ஈரோடு பெருந்துறை அருகே செவிலியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காணாமல் போன நிலையில், செவிலியரின் உடல் காட்டுக்குள் நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

Written ByUmabarkavi K
Published: Oct 19, 2026, 10:25 AM IST|Updated: Oct 19, 2026, 10:38 AM IST
joinshare
ஈரோட்டில் கடத்தப்பட்ட நர்ஸ்.. 5 நாளுக்கு பின் காட்டுக்குள் நிர்வாணமாக கிடந்த சடலம்.. கொடூர கொலை!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained : நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! வீடியோ வெளியிட்ட கேங்ஸ்டர்-நடந்தது என்ன?

Explained : நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! வீடியோ வெளியிட்ட கேங்ஸ்டர்-நடந்தது என்ன?

2

ஈரோட்டில் கடத்தப்பட்ட நர்ஸ்.. 5 நாளுக்கு பின் காட்டுக்குள் நிர்வாணமாக கிடந்த சடலம்.. கொடூர கொலை!

3

கஜகேசரி ராஜயோகம்.. தீபாவளி முதல் 6 ராசிகளுக்கு கோடீஸ்வரம்.. தொட்டதெல்லாம் வெற்றி!

4

தீபாவளி பலகாரம் விற்பவரா நீங்கள்? தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அதிரடி கட்டுப்பாடுகள்!

5

3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்.. சென்னையில் விடாமல் கொட்டும் கனமழை.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Erode Nurse Murder: தமிழகத்தில் கொலை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகளும் கடுயைமாக கூறி வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் பெண்கள், சிறார்கள் தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஈரோட்டில் செவிலியர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

செவிலியர் கொடூர கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லாகவுண்டம் பாளையம் பகுதியில் தனியார் மருத்துவமனையில் நர்சிங் பணியில் இருந்தவர் ருத்ரா (26). இவருக்கு ரஞ்சித்குமார் (27) என்ற கணவர் இருக்கிறார்.  ரஞ்சித் குமார் கட்டுபமான தொழிலாளியாக இருக்கிறார். செவிலயர் ருத்ராகடந்த 14- ம் தேதி மாயமானதாக ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  அக்டோபர் 14 அன்று, வழக்கம் போல் பணிக்குச் சென்ற உத்ரா, வீடு திரும்பவில்லை.

இதனால், கணவர் ரஞ்சித் குமார் பல இடங்களில் அவரை தேடி அலைந்துள்ளார். தனது மனைவி கிடைக்காததால், ரஞ்சித் குமார் உத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் காணாமல் போனவர் என வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடும் பணியைத் தொடங்கினர்.

மேலும் படிக்க: 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்.. சென்னையில் விடாமல் கொட்டும் கனமழை.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்

நிர்வாணமாக கிடந்த பெண் சடலம்

இந்த நிலையில், விஜயமங்கலம் - பெருந்துறை சாலையில் உள்ள பொன்நகர் பகுதியில் உள்ள ஒரு புதருக்குள் அழுகிய நிலையில்  நிர்வாணமாக பெண் சடலம் கிடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரதே பரிசோதனையில் ருத்ராவின் உடல் போலீசார் உறுதி செய்தனர்.

செவிலியர் ருத்ரா கொலை குறித்து விசாரிக்க ஐந்து சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், செவிலியர் ருத்ரா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பதை பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகு தான் தெரியும். குற்றவாளிகளைப் பிடிக்க சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரிக்கிறோம்" என்றனர்.  பரிசோதனையில் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக கூறிய நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி பெண்ணின் உடலை உறவினர்கள் வாங்க மறுப்பு வருகின்றனர். கொலையாளி கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் படிக்க:  தீபாவளிக்கு ஸ்வீட் தயாரிக்க தமிழ்நாடு அரசே கொடுக்கும் பயிற்சி - முக்கிய அறிவிப்பு

வலுக்கும் கண்டனம்

கொலை சம்பவம் தொடர்பாக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "அலட்சியத்தால் தொடரும் கொலைகள், போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு, தள்ளாடும் காவல்துறை.  சில நாட்களுக்கு முன்புதான், திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டு வந்தவர் மனைவி முன்பே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அப்போதே, "ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா?" என நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.

அப்படி உருப்படியான எதுவும் செய்யப்படுவதில்லை எனச் சிவகங்கையில் நேற்று நடந்துள்ள மற்றுமொரு கொலைச் சம்பவம் காட்டியுள்ளது. கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்த மதன் எனும் ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முழுக்க முழுக்க காவல்துறையின் அலட்சியத்தால் நடந்துள்ள கொலை இது. பெருந்துறை அருகே செவிலியர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

5 நாட்களுக்குப் பின்புதான் அவரது சடலத்தையே கண்டறிந்திருக்கிறார்கள். நடப்பது நம் ஆட்சிதானே என நினைத்து த.வெ.க. நிர்வாகிகளின் போதைப் பொருள் கடத்தலும் கொடிகட்டிப் பறக்கிறது. வேதாரண்யத்தில் த.வெ.க. ஒன்றியச் செயலாளர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இப்போது, அதே மாவட்டத்தில் உலகத்துக்கே மெத் தயாரித்து விற்பனை செய்யும் மையமாகத் தமிழ்நாட்டை மாற்ற முயன்ற த.வெ.க. நிர்வாகி 'மெத்' பூபாலனும் கைதாகியுள்ளார்.

முதலமைச்சரின் திரைப்படங்களைப் பார்த்து இதைத்தான் அவரது கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்கிறார்களா? Drug control செய்ய வேண்டுமென்றால், முதலில் தன் கட்சியினரை முதலமைச்சர் control-இல் வைக்க வேண்டும். அதற்கு, காவல்துறை முதலில் அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன?  CM sir, your negligence is costing lives. Drugs-ஐ விடு, Sports-ஐ எடு என்று சொன்ன நீங்கள் முதலில் Rest-ஐ விட்டுவிட்டு, உங்கள் துறையைக் கையில் எடுங்கள்” என்று கூறினார்.

மேலும் படிக்க: டாஸ்மாக்கில் 4 புதிய பீர் வகைகள்.. தீபாவளிக்கு விற்பனை? விலை எவ்வளவு?
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime